கேள்விகளும் பதில்களும் #3 Jeffersonville, Indiana, USA 64-0830M 1நாம் தலை வணங்குவோம். கர்த்தராகிய இயேசுவே, உமது சமூகத்தில் வருவதற்கு கிடைத்த தருணத்துக்காகவும், இந்த ஐக்கியத்தின் நேரத்துக்காகவும், கிறிஸ்து இயேசுவுக்குள் இங்கு உன்னதங்களிலே உட்கார்ந்திருப்பதற்காகவும் இக்காலை வேளையில் உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இப்பொழுது, கர்த்தாவே, உம்மைக் குறித்து நாங்கள் பேசும்போது, எங்களுடன் தொடர்ந்து இருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். உமது வசனத்தையும் எங்களுக்கு நீர் செய்துள்ள வாக்குத்தத்தங்களையும் நாங்கள் நோக்கிப் பார்க்கையில், எங்கள் இருதயங்கள் மகிழ்ச்சியினால் பொங்குவதாக எங்கள் மேய்ப்பரையும். எங்கள் கூட்டாளிகளையும், உமக்கென்று 'நாங்கள் நியமித்துள்ள இந்த ஒன்றுகூடும் சிறிய இடத்தில் எங்களை சந்திப்பதற்கென இங்கு வருகின்ற சகோதரர் சகோதரிகள் அனைவரையும் ஆசிர்வதிப்பீராக. இந்த நாள் முழுவதும் நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் எங்களை ஆசிர்வதிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். இயேசுவின் நாமத்தில் இதை கேட்கிறோம். ஆமென். (உட்காரலாம்). (சகோ. பிரான்ஹாம் மேடையின் மேலுள்ள ஒருவருடன் உரையாடுகின்றார் - ஆசி). 2இது எனக்கு ஒருவிதமான சிறு இளைப்பாறுதலாயிருக்கிறது. இங்கு எனக்கு ஆராதனைகளும், பேட்டிகளும் உண்டாயிருந்தன; நான் பேட்டிகளை நடத்த வேண்டும். அல்லது கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதாய் இருந்தது. இன்று காலையில் எனக்கு கிடைக்கப் பெற்ற ஏறக்குறைய எல்லாமே தரிசனங்களே. நான் ஒருவிதமான ... நான் பில்லியிடம், சகோ. நெவிலுக்கு அதிக வேலை இராவிடில், இந்த கேள்விகளை எடுத்துக் கொண்டு அவைகளுக்கு பதிலளித்து, என் சிந்தையை சற்று இளைப்பாற்ப்பண்ணுவேன் என்று கூறினேன். இந்த தரிசனங்கள் என்னை ஒருவிதமான ... ஆனால் ஜனங்களுக்கு அது உதவியாயுள்ளது; அதுவே முக்கியமான காரியம். முக்கியமான காரியம் என்னவெனில், ஜனங்களுக்கு உதவியளிக்கப்படுகின்றது; அதுவே இதன் நல்ல பாகம். எனவே இன்று பிற்பகலில், நான் சற்று நேரத்தோடே எனக்கு விசேஷமாயுள்ள பேட்டிகளைத் தொடங்கப் போகின்றேன்.. 3இக்காலையில் நமது நண்பர்களைக் காண்பதில் நமக்கு மகிழ்ச்சியுண்டாகிறது. இப்பொழுது, இது ... இதற்காக நீங்கள் பில்லியின் மீது வருத்தப்பட வேண்டாம். எனவே அப்படியானால்.. இந்த கேள்விகளுக்கு நான் தொடர்ந்து பதிலளிப்பதாக இருந்தால், பில்லி ஜனங்களுக்கு தெரிவிப்பதாக இருந்தது. இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க எனக்கு ஒரு மணி நேரம் கிடைக்குமென்று எண்ணினேன். என்னுடைய சில.... எனக்கு விட்டுவிட பிரியமில்லை; என் 'சிலேட்' பலகையை நான் சுத்தமாக துடைக்க விரும்புகிறேன். பாருங்கள்? இந்த கேள்விகள் போன்றவைகள், இவைகளை நான் செய்து முடித்து விட்டேன் என்று கூற விரும்புகிறேன். என் மனதில் நிறைய காரியங்கள் உள்ளன; அது எனக்கு நரம்பு தளர்ச்சியுண்டாக்குகிறது. நான் எதைக் குறித்தும் நரம்பு தளர்ச்சியடைய விரும்பவில்லை. இந்நாட்களில் ஒன்றில் நான் மகிமைக்கு வீடு செல்லப் போகிறேன் 4இரண்டு நாட்களுக்கு முன்பு என் பழைய நண்பர் ஒருவர், “ஒரு 'சூட்கேஸ்ஸில் வாழ்ந்து கொண்டிருப்பது எனக்கு அலுப்பு உண்டாக்குகிறது” என்றார். நான், “அருமை சகோதரனே, உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன்; உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். எனக்கு வீடு செல்ல வேண்டுமென்று ஆவல் தோன்றுகிறது. இருபதுஆண்டுகளாக எனக்கு அந்த ஆவல் இருந்து வருகிறது, ஆனால் செல்வதற்கு தான் எனக்கு எந்த ஒரு வீடும் இல்லை” என்றேன். பாருங்கள்? அது உண்மை. அவ்விதம் கூறுவது ஒரு பயங்கரமான காரியமாய் உள்ளது. நான் உட்கார்ந்து கொண்டு, எங்கோயுள்ள வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று அழ முடியும். ஆனால் செல்வதற்கோ எனக்கு எந்த ஒரு வீடும் இல்லை. நான் எங்கு சென்றாலும், நான் சில நாட்கள் அங்கு தங்க முடியாது; நான் வேறிடத்துக்கு செல்ல ஆயத்தமாயிருப்பேன். நான் அந்த விதமாக இருந்து வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன், நான் அந்த விதமாக பிறந்திருக்கிறேன். என் மனைவி என்னை , “ஓரிடம் தங்கி இளைப்பாறாத காற்று' என்று அழைக்கிறாள். நான் இங்கும் அங்குமாக இருக்கிறேன். அவ்விதம் உள்ளது ஒரு பயங்கரமான நிலையாகும். ஆனால் என் ஊழியத்தின் நிமித்தம் நான் அவ்விதம்தான் இருக்க வேண்டும் மென்று எண்ணுகிறேன். ஆனால் உங்களில் அநேகர் பாராட்டுகிறீர்கள். நல்லது, தேவனுக்கென்று எதைச் செய்தாலும் நாம் பாராட்டுகிறோம், ஆனால் நீங்கள் ஒருபோதும்... 5இப்பொழுது, இன்று காலையில் நாம் வீட்டில் தங்கியுள்ள ஒரு கூட்டம் மக்களாய் இருக்கிறோம். பாருங்கள்? ஆனால் நான் வீடு செல்ல வேண்டுமெனும் ஆவல் கொண்டவனாயிருக்கிறேன். நான் வீடு செல்ல விரும்புகிறேன், ஆனால் எங்கு செல்ல வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள், “நீங்கள் அரிசோனாவுக்குப் போகலாமே, உங்கள் குடும்பத்தினர் அங்கு தானே உள்ளனர்?” எனலாம். அங்கு நான் சென்றால், இரண்டு மூன்று நாட்கள் நன்றாயிருப்பேன், அதன்பிறகு எனக்கு வேறெங்காவது செல்ல வேண்டும். எனவே எனக்கு செல்வதற்கு வீடு ஏதுமில்லை, நான் வீட்டைக் குறித்த நினைவுள்ளவனாயிருக்கிறேன். நல்லது. ஒரு வீடு உண்டு, என்றாவது ஒரு நாள் நான் அந்த வீட்டிற்குச் செல்லுவேன், ஆனால் முதலில் நான் உங்களுக்கு உதவி செய்தாக வேண்டும். பாருங்கள்? அதற்காகவே நான் இங்கிருக்கிறேன், உங்களுக்கு உதவி செய்யவே. உங்களுக்கு இனி ஒரு போதும் நான் உதவி செய்ய இயலாது என்னும் நேரம் வரும் போது, நான் வீடு செல்ல விரும்புகிறேன். நான் மிகவும் விரும்பப் போகும் ஒரு ஸ்தலம் எங்கோ உள்ளது, அங்கிருந்து திரும்பி வர எனக்குப் பிரியமிராது. 6நான் சில வாரங்கள் ஜெபர்ஸன் வில்லை விட்டு சென்றிருப்பேன்; ஆனால் நான் திரும்பி வர விரும்புவேன். நான் அரிசோனாவுக்குச் செல்கிறேன்; அது மிகவும் அற்புதமானது என்று எண்ணுகிறேன்; ஆனால் நான் திரும்பி வர விரும்புகிறேன். நான் வேறெங்காகிலும் செல்கிறேன்; நான் திரும்பி வர விரும்புகிறேன். நான் இங்கும் அங்கும் செல்கிறேன்; இங்கு திரும்பி வர வேண்டுமெனும் எண்ணம் எனக்கு உண்டாகின்றது. நான் இங்கு வருகிறேன். சில நாட்கள் தங்கியிருந்து உங்கள் எல்லோரையும் காண்கிறேன். வேறெங்காகிலும் செல்ல வேண்டுமெனும் விருப்பம் எனக்கு உண்டாகின்றது. பாருங்கள், என் பிள்ளைகள் உலகெங்கிலும் சிதறியுள்ளனர் - நான் கிறிஸ்துவுக்கென்று பெற்றெடுத்த பிள்ளைகள். நான் .... எனக்கு வீடு எதுவுமில்லை. இந்நாட்களில் ஒன்றில் அவர்கள் அனைவரையும் ஒன்றுகூட்ட விரும்புகிறேன் (பாருங்கள்?) பிதாவானவர் அவ்விதம் செய்வார். அப்பொழுது நமக்கு ஒரு வீடு உண்டாகும். அப்பொழுது நாம், ஒருபோதும் அலைந்து திரிய வேண்டிய அவசியமிராது. பாருங்கள்? சுற்றித் திரிவதனால் களைப்பு உண்டாகிறது. தங்குவதற்கு இடம் ஏதுமில்லை. 7நீங்கள் உருண்டு செல்லும் கல்லைப் போல் ஓரிடம் விட்டு வேறோரிடம் சென்று கொண்டிருக்காதீர்கள் என்பதே நான் எவருக்கும் அளிக்கும் ஆலோசனையாகும் (பாருங்கள்?) - அத்தகைய ஒரு ஊழியம் உங்களை அவ்விதம் செல்ல அழைத்தாலொழிய, ஏனெனில் ... இந்த பூமியில் எனக்கு ஒரு இடம் இருந்து, அங்கு நான் சென்று “இது என் வீடு” என்று என்னால் சொல்ல இயலுமானால், அதற்காக இன்று காலையில் நான் எதையும் கொடுப்பேன். நான்.. எனக்கு அது இருக்குமானால், நான் பத்து லட்சம் டாலர்கள் தருவேன். “இதை நான் மிகவும் நேசிக்கிறேன், இதை நான் இனி விட்டுச் செல்ல எனக்குப் பிரியமில்லை” என்று என்னால் சொல்லக் கூடிய ஒரு இடம் இருக்குமானால், அதற்காக நான் எதையும் தருவேன். ஆனால் அதை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. நான் ஆபிரகாம் இருந்ததைப் போல் இருக்கிறேன். நான் ஒரு நகரத்துக்காக காத்திருக்கிறேன். பாருங்கள்? அதை என்னால் கண்டு பிடிக்க இயலவில்லை, ஆனால் அது உள்ளதென்று எனக்குத் தெரியும். இந்த பூமியில் எந்த ஒரு இடத்திலும் என்னை பொருத்திக் கொள்ள என்னால் நிச்சயமாக முடியாது. அப்படி தோன்றவில்லை... அருமையான, அருமையான இடங்கள், இங்குசென்றால் அது மிகவும் ஈரமாக உள்ளது; அங்கு சென்றால், அது மிகவும் உலர்ந்துள்ளது; அங்கு மேலே சென்றால், அது மிகவும் குளிராயுள்ளது; கீழே சென்றால் அது மிகவும் வெப்பமாயுள்ளது. பாருங்கள்? நீங்கள்... இடம் எதுவுமில்லை; அது வீடேயல்ல. இதை உங்களிடம் அழுது கூறி, என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, ஆனால் நான்... நல்லது, நாம் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாயிருக் கிறோம். ஆமென்! எல்லாவற்றிற்கும் நன்றியுள்ளவர்களாயிருங்கள். நான் அவ்விதமாக இருப்பதன் காரணத்தால், நான் அவ்விதமாக இருக்கிறேன். நான் உள்ளவிதமாக தேவன் என்னை படைத்திருக்கிறார். அவர் என்னை உண்டாக்கின விதமேயல்லாமல், வேறு எவ்விதமாகவும் என்னால் இருக்க முடியாது. சோகமுடையவனாய், அவ்விதமான தன்மைகளை உடையவனாய். நான் உதவியாயிருக்க எந்த விதமாக அவர் என்னை இங்கு அனுப்பியிருக்கிறாரோ, அந்த விதமாகவே என்னால் இருக்க முடியுமென்று அவர்கள் என்னிடம் கூறுகின்றனர். நான் அந்தவிதமான நபராகவே இருக்க விரும்புகிறேன். தேவனுடைய ராஜ்யத்தின் சித்தம், அல்லது தேவனுடைய சித்தம் எதுவோ, அவ்விதமாகவே நான் இருக்க விரும்புகிறேன். 8நாம் மறுபடியும் ஜெபம் செய்வோம். கர்த்தராகிய இயேசுவே, இந்த கேள்விகள் எங்களுக்கு முன்பாக கிடக்கின்றன, பிதாவே, இவைகளுக்கு என்னால் விடையளிக்க இயலாது, கர்த்தாவே, இந்த கேள்விகளுக்கு விடையளிக்க எனக்கு போதிய ஞானம் கிடையாது. ஆனால் நீர் எல்லாவற்றிற்கும் போதுமானவராயிருக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன். இவை ஜனங்களின் இருதயங்களில் உள்ளவை. அவர்களுடைய அழுத்தத்தை நீக்க என்னை உபயோகியும், கர்த்தாவே. அவ்விதம் செய்யமாட்டீரா, பிதாவே? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை கேட்கிறேன். ஆமென். 9இப்பொழுது, நாம் தொடங்கப் போகிறோம் .... அவர்கள் இதை ஒலிநாடாவில் பதிவு செய்யவில்லை என்று நினைக்கிறேன், எனவே இது ஒரு ... அதனால் பரவாயில்லை என்று எண்ணுகிறேன். இப்பொழுது, ஒரு காரியம் என்னவெனில்... கேள்விகளைக் குறித்து நான் கவலைப்படுவதற்கு காரணம் என்னவெனில், என்னை தொல்லைப்படுத்துகிற தீவிரமான காரியம் ஒன்றுண்டு:அது தான் விவாகமும் விவாகரத்தும் என்பதன் பேரில் உள்ள கேள்விகளுக்கு விடையளிப்பதே. ஒ என்னே, தொலைபேசியில் கூப்பிடுதல், கடிதங்கள். ஒரு சகோதரன் கம்பளியால் தன்னை போர்த்துக் கொண்டு, என் முற்றத்தில் இரவு 12 மணியிலிருந்து அடுத்த நாள் விடியும் வரைக்கும் உட்கார்ந்து கொண்டிருந்தார். போதகர்கள் எல்லாவிடங்களிலுமிருந்தும் தொலைபேசியில் கூப்பிடுகின்றனர், இரண்டு மூன்று முறை விவாகம் செய்தல் போன்றவை. ஊழியங்கள். உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். அதன் பேரில் இன்னும் அநேக கேள்விகள் இங்குள்ளன என்று நானறிவேன். அவைகளை நான் ஆராய்ந்து பார்க்கவில்லை, ஆனால் அதன் பேரில் அநேக கேள்விகள் இங்கு இன்னும் உள்ளன. 10இதை சற்று ஞாபகம் கொள்ளுங்கள்! விவாகம் செய்து, விவாகரத்து செய்து விட்டு மீண்டும் விவாகம் செய்து கொண்ட ஜனங்களாகிய நீங்கள் எனக்கு ஒன்றை வாக்கு பண்ணிக் கொடுங்கள். பாருங்கள்? நீங்கள் என் மேல் உங்கள் நம்பிக்கையை வைத்திருக்கிறீர்கள் (இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படவில்லை என்று எண்ணுகிறேன்.) நான் தேவனால் அனுப்பப்பட்ட உங்கள் தீர்க்கதரிசி, உங்கள் ஊழியக்காரன் என்று என்னை நீங்கள் விசுவாசித்தால், இதன் பேரில் நான் சொல்லும் சொற்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அவ்விதம் செய்வீர்களா? இப்பொழுது நீங்கள் உள்ள விதமாகவே தொடர்ந்து வாழுங்கள். நீங்கள் அது போன்ற எதையும் செய்ய முயல வேண்டாம். ஆனால் தொடர்ந்து அந்த விதமாகவே வாழ்ந்து, சந்தோஷமாக வாழுங்கள். உங்களுக்கு... நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்தவர்களாயிருந்தால், தொடர்ந்து கிறிஸ்துவுக்காக வாழுங்கள். உங்களை இரட்சிக்க அவருக்கு ஒரு காரணமுண்டு. . இப்பொழுது. நான் திரும்பி வரும் போது, கர்த்தருக்கு சித்தமானால், அதை உங்களுக்கு வேதத்திலிருந்து விளக்கிக் காண்பிக்கிறேன். பாருங்கள்? நீங்கள் சோர்ந்து போகாதீர்கள். அநேக மனிதர் என்னிடம், “நல்லது, என் மனைவியை நான் நேசிக்கிறேன், ஆனால் அவளை நான் விட்டுப் பிரிய வேண்டும், ஏனெனில் எடுத்துக் கொள்ளப்படுதலை இழந்து போக நான் விரும்பவில்லை' என்று கூறியிருக்கின்றனர். அவ்விதம் செய்யாதீர்கள்! இந்த பொருளின் பேரில் நான் சொல்வதை நீங்கள் மீண்டும் கேட்கும் வரைக்கும், நீங்கள் இப்பொழுது உள்ள விதமாகவேஇருங்கள். அதன் பிறகு நான்... இதை நான் பத்து பதினைந்து நிமிடங்களில் விளக்க முடியாது; இதை விளக்க சிறிது நேரம் தேவைப்படும், ஏனெனில் அது வேதவசனமாக இருக்க வேண்டும் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்க வேண்டும் இல்லையென்றால், அது சரியல்ல. 11இயேசு இங்கு, “வேசித்தன முகாந்திரத்தினாலொழிய தன் மனைவியை வேறு காரணத்தினால் தள்ளி விட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணுகிறவன் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான் அப்படித் தள்ளி விடுகிறவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான் என்று கூறியிருக்கிறார் என்று எனக்குத் தெரியும் (மத். 5:22). இவைகளைக் கூற அவருக்கு ஒரு காரணமிருந்தது. அவர் தேவன்; அது அவருடைய வார்த்தை . நாம் தொடக்கத்திற்கு சென்று இவையெல்லாம் எதைக் குறிக்கின்றன (பாருங்கள்?) என்று கண்டுபிடித்து, இவைகளைக் கொண்டு வருவோம். ஆனால் நாம் அவ்விதம் செய்யும் வரைக்கும், நீங்கள் கிறிஸ்தவர்களானால், இப்பொழுது நீங்கள் உள்ளபடியே இது வரைக்கும் நீங்கள் செய்து வந்தபடியே, தொடர்ந்து வாழுங்கள் நீங்கள் கிறிஸ்தவ தம்பதிகளாயிருந்து, விவாகம் செய்து, பிள்ளைகள் இருக்குமானால், உங்களைப் பிணைக்கும் சிறு இணைப்புகள் இருக்குமானால், உங்கள் மனைவியையோ அல்லது கணவனையோ விட்டுப் பிரிந்து விடாதீர்கள். அப்படிச் செய்யாதீர்கள். பாருங்கள்; இந்த பொருளின் பேரில் நான் மீண்டும் பேசுவதைக் கேட்கும் வரைக்கும் காத்திருங்கள். அதை நீங்கள் எனக்கு வாக்கு பண்ணிக் கொடுப்பீர்களா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள்! நீங்கள் என் பேரில் விசுவாசம் கொண்டு என்னிடம் இந்த காரியத்தை கூறியிருக்கிறீர்கள். இது வரைக்கும் நீங்கள் என்னை விசுவாசித்து வந்திருக்கிறீர்கள். இந்தப் பொருளின் பேரில் இன்னும் சிறிது கூட என்னை விசுவாசியுங்கள். இப்பொழுது, நாம் பார்ப்போம். இன்று காலையில் உண்மையில் சில நல்ல கேள்விகள் என்னிடம் உள்ளன. சில.... 12மணவாட்டியில் செல்லுகின்ற அனைவருமே கூடாரத்தின் ஆயிரத்து ஐந்நூறு மைல்கள் பரப்புக்குள் வாழ வேண்டுமா (இதற்கு சென்ற ஞாயிறு நான் விடை கூறினேன் என்று நினைக்கிறேன். இவைகளைப் பொறுக்கியெடுத்து என்னால் முடிந்த வரையில் உபயோகிக்க வேண்டும்)... “மணவாட்டியின் வருங்கால இருப்பிடம்” என்னும் செய்தியின் இரண்டாம் ஒலிநாடாவில் தொனிப்பது போல் ஆயிரத்து ஐந்நூறு மைல்கள் பரப்புக்குள் வாழ வேண்டுமா? எடுத்துக் கொள்ளப்படுதலின் போது மணவாட்டி உலகின் எல்லா பாகங்களிலிருந்து வருவாள் என்று நான் எப்பொழுதும் எண்ணியிருந்தேன். நான் தவறா? இல்லை, என் அருமை நண்பனே, நீர் தவறல்ல, அது சரியே. இப்பொழுது, நீங்கள் அவ்விதம் நினைக்கத்தக்கதாக நான் ஒலிநாடாவில் ஏதாகிலும் கூறியிருந்தால்... இப்பொழுது, நான் அவ்விதம் கூறவில்லை. இவையெல்லாம் எனக்கு இப்பொழுது புதிதாக உள்ளன. இந்த கேள்விகள் என்னவென்று நான் பார்க்கவில்லை. பாருங்கள்? இந்த கேள்வித் தொகுப்புகளை நான் போன ஞாயிறன்று பெற்றுக் கொண்டேன். இவைகளை இந்த காகித உறையில் போட்டு அங்கு வைத்து விட்டேன். 13இப்பொழுது, இதில்... இல்லை, மணவாட்டி எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் இருக்க வேண்டியதில்லை. அவர்கள் அநேகர் பூமியின் தூளில் இருப்பார்கள். அவர்கள் உலகம் முழுவதிலும் இருப்பார்கள்; அவர்கள் வடக்கில் பனியினால் உறைந்திருப்பார்கள், வெப்பமான காடுகளின் மண்ணில் இருப்பார்கள் - உலகம் பூராவிலும் இருப்பார்கள். ஆனால் தேவ எக்காளம் முழங்கும் போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருந்து, நித்திரையினின்று விழித்து, அவர்கள் எங்கிருந்த போதிலும் பூமியின் தூளிலிருந்து வெளியே வருவார்கள். இப்பொழுது, இதில், உயிர்த்தெழுதல் உலகம் முழுவதும் நடக்கும். பாருங்கள்? எல்லா விடங்களிலிருந்தும், பூமியின் உருண்டையில் உள்ள கிறிஸ்துவுக்குள் இருக்கும் ஒவ்வொருவரும், அவர் வரும் போது அவரோடு கூட வருவார்கள் (பாருங்கள்), நீங்கள் எங்கிருந்த போதிலும். ஆதி காலத்து இரத்த சாட்சிகளின் நாட்களில் இருந்த அரங்கத்தை எண்ணிப் பாருங்கள். அந்த கிறிஸ்தவர்கள் சிங்கங்களின் கெபியில் எறியப்பட்டனர். அந்த சிங்கங்கள் அந்த கிறிஸ்தவர்களைக் கொன்று அவர்களுடைய உடல்களைப் புசித்தன. பாருங்கள்? அவர்கள் சிதறப்பட்டிருந்தனர், அவர்களுடையஉடல்கள் பூமியின் மீது சிங்கங்களின் கழிவுப் பொருட்களில் இருந்தன. அது எங்கிருந்த போதிலும், உங்களால்... பாருங்கள், நீங்கள் ஒரு பொருளினால் உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள், அது காணக்கூடாத பொருளினால் உண்டாக்கப்பட்டிருக்கிறது. தேவன் அந்த பொருளை உங்களுக்குத் திரும்ப அளிப்பார். பாருங்கள்? 14இப்பொழுது, நீங்கள் ஒரு இரத்த அணுவை (cell) எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இரத்த அணுவை நீங்கள் பிளந்தால், அது இரத்த அணுவுக்குள் ஒரு இரத்த அணுவாக, பிறகு அணுவாக, மூலக்கூறாக பிளந்து, முடிவில் காணக்கூடாததாக ஆகிவிடும். அது நீங்கள் தொடக்கூடிய ஒரு இயற்கை பொருளிலிருந்து, வாயுக்களாகவும்; வாயுக்களிலிருந்து அமிலங்களாகவும் - அமிலங்களிலிருந்து வாயுக்களாகவும் ஆகி, கடைசியாக ஒரு சிறு காரியத்தில் முடிவடைகிறது, அதுதான் ஆவி. இந்த வாயுக்களில் குடி கொண்டிருந்த இந்த ஆவி.... அது அதே வாயுக்களாக இருக்காது, ஆனால் நீங்கள் எந்த விதமான தோற்றத்தை இப்பொழுது உடையவர்களாக இருக்கிறீர்களோ, அது அப்படியே மறுபடியும் இருக்கும். பாருங்கள்? ஆவி அதை கட்டுப்படுத்தியிருந்தது. இப்பொழுது, வேறு சொற்களில் கூறுவோமானால், நீங்கள் வாலிபனாகவோ அல்லது வாலிபப் பெண்ணாகவோ ஆகும் போது, தேவன் உங்களைப் படமெடுக்கிறார். இப்பொழுது, நீங்கள் எவ்வளவு வயோதிபனாகி சுருக்கம் விழுந்த போதிலும்; எவ்வளவாக உருக்குலைந்தாலும், அது மீண்டும் பழைய நிலைக்கு வரும். அந்த சரீரம் அழிக்கப்பட்டு, உருக்குலைந்து, சுட்டெரிக்கப்பட்டு, சிங்கங்களுக்கு இரையாகி, அவ்விதம் என்னவான போதிலும், அது வாயுக்களால், பூமியிலுள்ள பதினாறு மூலப்பொருட்களால் உண்டாக்கப்பட்டது. அது கால்சியம், பொட்டாஷ், பெட்ரோலியம், விண்வெளி ஒளி போன்ற அனைத்தும் ஒன்று சேர்ந்து அந்த சரீரம் உண்டாக்கப்பட்டது. இப்பொழுது, என்னவானாலும், பூமி அனைத்துமே அவைகளால் நிறைந்துள்ளது. 15ஆனால் இப்பொழுது, இந்த படம் தான் முக்கியமான காரியம். உயிர்த்தெழுதலின் போது, அந்த வாயுக்களும், அமிலங்களும் அவைகளுக்குரிய இடத்தில் மீண்டும் வந்து அந்த படத்தை மறுபடியும் உண்டாக்குகிறது. இந்த படமானது உங்களுக்கு பதினாறு.பதினெட்டு அல்லது இருபது வயதாயிருந்த போது, நீங்கள் காண்பதற்கு சிறந்தவர்களாயிருந்த போது எடுக்கப்படவில்லை. அது எப்பொழுது எடுக்கப்பட்டது? உலகத்தோற்றத்திற்கு முன்பே அது தேவனுடைய மகத்தான தஸ்தாவேஜுகளில் வைக்கப்பட்டது. அதன் பிறகு, அது செய்த ஒரே காரியம், நீங்கள் தெரிந்து கொள்வதற்கென அது உங்களுக்கு அளிக்கப்பட்டது. பாருங்கள்? அப்பொழுது நீங்கள் தேவனுடைய ஊழியக்காரராகின்றீர்கள். அவர் அதை முன்னறிதல், அவரை மீட்பராகச் செய்கின்றது. அதைக் குறித்து நாம் ஏற்கனவே பார்த்தோம். அப்பொழுது அந்த படம் முற்றிலுமாக... இது 'நெகடிவ்' இப்பொழுது நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது வாழ்க்கையின் 'நெகடிவ் பாகம். 'நெகடிவ்' ஒன்று இருக்குமானால், அதற்கான 'பாஸிடிவ்', 'நெகடிவ் ஒன்று உண்டாவதற்கு முன்பே இருக்க வேண்டும். இது உண்மையானது அல்ல. இது வரப் போகும் உண்மையான காரியத்துக்கு ஒரு முன்நிழலாக மாத்திரம் உள்ளது. நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? எனவே, அவர்கள் உங்களுக்கு என்ன செய்வார்கள் என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை. அவர்கள் அந்த தோற்றத்தை, தேவனுடைய மகத்தான மண்டபத்தில் உள்ள அந்த படத்தை அழிக்க முடியாது. அது அதை அழிக்க முடியாது, அது பரலோகத்தில் உள்ளது. அந்த சரீரத்தை நீங்கள் சுட்டெரிக்கலாம், சிங்கங்களுக்கு இரையாக கொடுக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இரண்டை இரண்டால் பெருக்கினால் நான்கு என்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அது மீண்டும் தோன்றும். தேவன் அதை நிச்சயமாக உரைத்திருக்கிறார், அது மீண்டும் தோன்றும். எனவே, நீங்கள் எங்கிருந்தாலும், 16இப்பொழுது, நான்... நான் நினைக்கிறேன் நீங்கள் ஒலிநாடாவைப் போட்டுக் கேட்பீர்களானால்.... (இந்தக் கேள்வியை யார் எழுதினார் என்று தெரியவில்லை; அதில் பெயரை கையொப்ப மிடவில்லை. ஒரு சிறு காகிதத் துண்டு 'நோட் புக்கிலிருந்து கிழிக்கப்பட்டு ஊதா மையினால் எழுதப்பட்டுள்ளது. அது 'நோட்புக்கிலிருந்து கிழிக்கப்பட்டது போல் தோன்றுகிறது). ஆனால் இதை ஞாபகம் கொள்ளுங்கள், இந்த கேள்வியில், நீங்கள் கவனிப்பீர்களானால், நான் ஒலிநாடாவில் இதை தான் கூறியுள்ளேன் (இதைநீங்கள் ஒப்பிட்டு பார்த்தால் இது ஒருக்கால் நான் ஒலிநாடாவில் உபயோகித்த அதே சொற்களாக இருக்காது). நான் என்ன கூறினேன் என்றால், “உதாரணமாக, இன்று காலை நாம் இங்குள்ளோம். நாம் காண வாஞ்சிக்கும் நகரம் ஆயிரத்து ஐந்நூறு மைல் சதுரமாயிருக்கும். அதன் பரப்பு ஏறக்குறைய மேய்ன்னிலிருந்து ஃபிளாரிடா வரைக்கும், கிழக்கு சீபோர்ட் (Eastern Seaboard) டிலிருந்து எண்ணூறு மைல் மிஸிஸிபி நதிக்கு மேற்கேயும் ஆயிரத்து ஐந்நூறு மைல் சதுரமாயிருக்கும். அதை யோசித்துப் பாருங்கள். இன்று காலையில் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் மக்கள், அவ்வளவு தூரத்திலிருந்து, ஆயிரத்து ஐந்நூறு மைல் சதுரத்திலிருந்து வந்துள்ளனர். இப்பொழுது.. அந்த ஆலயம் பூமியில் எங்கிருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது தற்பொழுது பாலஸ்தீனா உள்ள இடத்தில் இருக்கும் என்னும் கருத்து எனக்குண்டு. அது ஒருக்கால் அங்கு மலையின் உச்சியில் இருக்கும். அப்பொழுது சமுத்திரம் இருக்காது. பாருங்கள், 17இந்த உலகின் சுற்றளவு 25,000 மைல்கள், எனவே ஆயிரத்து ஐந்நூறு மைல் ஒன்றும் அதிகமல்ல. ஆனால் இந்த மகத்தான நகரம் ஆயிரத்து ஐந்நூறு மைல் சதுரமுள்ளதாய் மலையின் மேல் இருக்கும். அவ்விதம் நான் விசுவாசிக்கும் காரணம், எருசலேமிலுள்ள சீயோன் மலையையும் அந்த நகரங்களையும் குறித்த தீர்க்கதரிசனங்களின் நிமித்தமாகவே. அங்குதான் தீர்க்கதரிசியாகிய ஆபிரகாம் தேவன் கட்டி உண்டாக்கின அந்த நகரத்துக்காக காத்திருந்தான். அந்த தேசத்தில் அவன் அந்த நகரத்தை எதிர் நோக்கியிருந்தான். அந்த தேசம் எங்குள்ளதோ அங்கு தான் அது இருக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த தேசத்தை நீங்கள் வரைபடத்தில் கண்டுபிடிப்பது கடினம். அது ஒரு சிறு புள்ளியைப் போல் உள்ளது. ருஷியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், தென் அமெரிக்கா போன்ற நாடுகளைப் பாருங்கள். அங்குள்ள அந்த இடங்கள் அனைத்தும்.... தேவன் ஏன் அந்த ஒரு இடத்தின் மேல் அவ்வளவு வைராக்கியமுள்ளவராய் இருந்தார்? அது தான் கேள்வி. அதை என்னால் நிரூபிக்க முடியாது. ஆனால் அப்படித்தான் எனக்குத் தென்படுகிறது. அது எங்கிருந்தாலும், அதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். எனவே அதற்காக நாம் கர்த்தரைத் துதிப்போம். 18கூடாரத்தை சுற்றிலும் அது ஆயிரத்து ஐந்நூறு மைல்கள் இருக்கும் என்று நான் கூறினதாக நீங்கள் அபிப்பிராயம் கொண்டிருந்தால், அது தவறான அபிப்பிராயம் (பாருங்கள்?), ஏனெனில் அது இருக்காது. இந்த கூடாரம்.... இது அழிந்து போக வேண்டிய ஒரு சிறு இடம். உலகமானது சுட்டெரிக்கப்படும், அப்பொழுது இவையனைத்தும் ஒழிந்து போகும். இந்த இந்தியானா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் அனைத்தும் எரிமலைக் குழம்பினால் வெந்து உருகிப் போகும். பாருங்கள்? எல்லா பாவமும், எல்லா வியாதிகளும், எல்லா கிருமிகளும், மற்றெல்லாம் அழிக்கப்படும். “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன். முந்தின ...” (வெளி 21:1). .. சிந்தித்துப் பாருங்கள்! தேவன் ஆறாயிரம் ஆண்டுகளாக இந்த உலகத்தை கட்டிக் கொண்டு வந்தார். அவர் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, இதை உருவாக்கினார். அவர் எவ்விதம் அதை செய்தார்? “அவர் தோன்றப்படாதவைகளினால் அதை உண்டாக்கினார்” (எபி. 11:3) என்று வேதம் உரைக்கிறது; அதாவது, அவர் பூமியை இந்த விதமாக உண்டாக்கினார். இப்பொழுது கவனியுங்கள்: இது அழகாயுள்ளது. சிருஷ்டி கர்த்தர் பூமியை ஒரு நோக்கத்துக்காக உண்டாக்கினார், சாத்தான் அதை அசுசிப்படுத்தினான், இங்கு விடப்பட்டுள்ளதை மீட்பதற்காக அவர் கீழே இறங்கி வந்தார். அவர் வேறெங்கோ சென்று. இப்பொழுதும் சிருஷ்டிப்பின் பணியில் ஈடுபட்டிருக்கிறார், 19பூமியை உண்டாக்க அவருக்கு ஆறாயிரம் ஆண்டுகள் பிடித்தது. ஆனால் பூமிக்கு வரவிருக்கும் அந்த நகரத்தை சிருஷ்டிக்க அவர் இரண்டே நாட்கள் எடுத்துக் கொள்வார். அவர்... “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படி யில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன் (பளிங்கான பொன்னால் நான் ஒரு நகரத்தைக் கட்டப் போகிறேன், வீதிகளில் பொன் தளம் போடுவேன்)” (யோவான் 14:2). என்ன ஒரு அழகான இடம்! அவர் எங்கு அதை பெறுவார்? மற்ற பூமிகளில் அல்லது சந்திரன்களில், அல்லது நட்சத்திரங்களில் பொருட்கள் உண்டா? அவருக்கு அவை தேவையில்லை, அவர் சிருஷ்டி கர்த்தர். அவர் -நகரத்தைக் கட்ட சென்றிருக்கிறார். ஆமென்! அது எனக்கு போதுமானது, உங்களுக்கும் அல்லவா? அது நல்லது. அவர் இதை கட்டி, இதை நான் மகிழ்ச்சியுடன் அனுபவித்தால், அவர் இந்த புதிய ஒன்றைக் கட்டும்போது அது எப்படிப்பட்டதாய் இருக்கும்? ஓ என்னே, என்ன அற்புதமான காரியம்! அந்த நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 20சகோ. பிரான்ஹாமே, நான் கர்த்தரை நேசிக்கிறேன், ஆனால் கடந்த ஆண்டில் ஒரு பிரச்சினையை நான் சந்திக்க நேர்ந்தது, சில நேரங்களில், எனக்கு ஏறக்குறைய மனநிலைக் கோளாறு ஏற்பட்டு விட்டதோ என்பது போல் தோன்றுகிறது. அது என்ன? தயவு செய்து எனக்காவும் என் கணவருக்காகவும் ஜெபிக்கவும். நல்லது, அங்கு ஒன்றும்... இன்று காலையில் ஜனங்களாகிய உங்களில் சிலருக்கு நேர்முகப் பேட்டி இருந்த விதமாக இந்த நபருக்கும் இருந்திருந்தால், அது என்னவென்பதை, அது என்னவாயிருப்பினும், அது வெளியே இழுத்துக் கொண்டு வந்திருக்கும். பாருங்கள்? அது என்னவென்பதை தேவன் வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் இப்பொழுது, நீ யாரென்று எனக்குத் தெரியாது, நீ இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை; அது வெறுமனே கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரி என்றுரைக்கிறது... இப்பொழுது, இப்பொழுது, நீ ஏதாகிலும் ஒரு தவறைச் செய்து, அது உன்னைத் தொல்லைப்படுத்துகிறதென்றால், நீ வேதத்துடன் அதை ஒப்பிட்டுப் பார்த்து, என்ன செய்ய வேண்டும் மென்பதை அறிந்து கொள். ஆனால் நீ ஒன்றுமே செய்யாதிருந்து, எதுவுமே உன்னைக் குற்றப்படுத்தாதிருந்தால், ஒருக்கால் அது உன் நரம்பு சம்பந்தமானதாக இருக்கக் கூடும். பார்? அநேக காரியங்கள் நடந்திருக்கக் கூடும்; ஒருக்கால் உன் முன் கால வாழ்க்கையில் ஏதாகிலும் தொல்லை நேர்ந்திருக்கக்கூடும். ஒருக்கால் இங்குள்ள ஒரு ஸ்திரீக்கு அது ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு நிற்கும் நேரமாயிருக்கக் கூடும். அப்பொழுது அவளுக்கு எல்லாமே தவறாயிருக்கும். அவளுக்கு ஒன்றும் தவறாயிருக்கவில்லை, இருப்பினும் எல்லாமே அவளுக்கு தவறாயிருக்கும். அவள் நடிக்கவில்லை, அவள் உண்மையில் அவ்விதம் உணருகிறாள். அது உண்மையானதைப் போலவே இருக்கும். நரம்பு கோளாறு உள்ள எவரும் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களுடன் இணங்காமலிருக்க வேண்டாம். 21கணவன்மார்களே, உங்கள் மனைவிமார்கள் வாழ்க்கையின் அந்த நேரத்தை அடையும்போது, அவள் எப்பொழுதாகிலும் உங்கள் இருதயத்துக்கு இனியவளாக இருந்திருப்பாளானால், அவள் சரியாயிருக்க விட்டு விடுங்கள், ஏனெனில் அவளுக்கு நீங்கள் தேவை அவளுக்கு உண்மையில் உங்கள் உதவி தேவையாயுள்ளது. அவளுக்கு உதவி செய்ய யாராகிலும் அவளுக்குத் தேவைபடுகிறது. அவளைப் புரிந்து கொள்ளுங்கள். அவளுடன் பேசுங்கள். அவள் உங்கள் இருதயத்துக்கு இனியவளைப் போல அவளை உங்கள் கரங்களில் தழுவிக் கொள்ளுங்கள், அவள் அவ்விதமாகத்தான் உங்களுக்கு இருக்க வேண்டும். அவளைப் புரிந்து கொள்ளுங்கள், ஏனெனில் அவள் தன் முழு அமைப்பும் மாறிக் கொண்டிருக்கும் நேரத்தில் இருக்கிறாள். நீங்கள் அந்நேரத்தில் அவளிடம் மிகவும் நல்லவராக இருக்க வேண்டும். - அங்குதான் திரு. ராக்ஃபெல்லர் மிகப் பெரிய தவறைச் செய்தார் என்று நினைக்கிறேன். அவர் தேசத்தின் மக்களால் நேசிக்கப்பட்டார், அவர் ஒருக்கால் நமது அடுத்த ஜனாதிபதியாக ஆகியிருக்கக் கூடும். ஆனால் அவருடைய மனைவிக்கு ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு நிற்கும் நேரம் வந்தபோது, அந்த கட்டத்தை அவள் அடைந்த போது, அவர் அவளை விட்டுப் பிரிந்து தன் பெண் செயலாளரை மணந்து கொண்டார். என்ன நடந்தது பார்த்தீர்களா? உண்மையில் நல்லவிதமாக நிதானிக்கும் அமெரிக்கர்கள் இன்னும் உள்ளனர் என்பதை அது காண்பிக்கிறது. இப்பொழுது, எனக்கு திரு. கோல்ட் வாட்டரை, இல்லை, திரு. ராக் ஃபெல்லரைப் பிடிக்கும் (சகோ. பிரான்ஹாம் தன் விரல்களை சொடுக்குகிறார் - ஆசி). அவர் ஒரு... எனக்கு திரு. கோல்ட் வாட்டரையும் பிடிக்கும்; எனக்கு எல்லோரையும் பிடிக்கும். ஆனால் நான் - நான் விரும்பவில்லை. அங்கு உட்கார்ந்திருக்கும் என்னுடைய சில ரிப்பப்ளிக்கன் சகோதரர்கள் நான் கூறும் இதைக் கேட்பார்கள். நான். 22கவனியுங்கள், நான் ஒரு அரசியல்வாதி அல்ல. நான் கிறிஸ்தவனாயிருக்க விரும்புகிறேன். பாருங்கள்? இது அரசியலுக்கு இடமல்ல. பாருங்கள்? முழு காரியமும் எப்படியும் அந்த வழியே சென்று விட்டது, ஆனால் நாம் பேசிக் கொண்டிருப்பது நித்தியத்தைக் குறித்ததாகும். டிமாக்ரட் ஆனாலும் ரிப்பப்ளிக்கன் ஆனாலும்... ஒ, அது ஒரே குழப்படியாயுள்ளது; அது ஒருக்காலும் மீள முடியாது. அது முடிந்து போய் விட்ட. ஒன்று, எனவே அதைக் குறித்து வாக்குவாதம் செய்யாதீர்கள். செய்ய வேண்டிய காரியம் என்னவெனில், இந்த ராஜ்யத்துக்காக வாழ்வதே. “நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை: வரப் போகிறதையே நாடித் தேடுகிறோம்” (எபி.13:14). ஆமென்! அது உண்மை . ஆம், ஐயா! எனவே அரசியல், வேலிக்கு ஒரு பக்கம் உள்ளது, நான் மறு பக்கத்தில் இருக்கிறேன். “நான் ஒரு முறை வோட்டு போட்டேன்; அது கிறிஸ்துவுக்காக; நான் நிச்சயம் ஜெயிப்பேன்” என்று கூறினேன். அது உண்மை . பாருங்கள்? உங்களுக்கு ஒரு வோட்டு வந்து கொண்டிருக்கிறது. பாருங்கள்? தேவன் உங்களுக்கு வோட்டு போட்டார், பிசாசு உங்களுக்கு எதிராக வோட்டு போட்டான். இப்பொழுது, நீங்ள் எந்தவிதமாக வோட்டு போட்டீர்களோ, அந்த வழியாகவே வெளிவருவீர்கள். எனவே இப்பொழுது, நான் நினைப்பது என்னவெனில் இந்த நபர்... அது நரம்பு சம்பந்தமானது மட்டுமே என்றுதான் நான் நினைக்கப் போகிறேன். உன்னை ஒன்றும் குற்றப்படுத்தாமல் இருக்குமானால், நீ தொடர்ந்து சென்று, “சாத்தானே, என்னை விட்டுப் போ” என்று சொல். நீ தொடர்ந்து முன் செல். நீ தைரியமாக நின்று, தேவனுக்காக வாழ்வாயாக. 23இப்பொழுது. விவாகரத்துக்குப் பிறகு மறுபடியும் விவாகம் செய்து கொள்ள வேதத்தின்படி அனுமதி வழங்கும் ஏதாகிலும் ஒரு நிலைமையுண்டா? (இப்பொழுது இது என்ன வென்று பார்க்கலாம்... - இதில் இரண்டு மூன்று கேள்விகள் அடங்கியுள்ளன என்று நினைக்கிறேன்). முன்பு விவாகமாகியிருந்து, இப்பொழுது விவாகமான நிலையில் இல்லாமல் இருந்தால், மீண்டும் விவாகம் செய்து கொள்வதற்கென அனுமதி வழங்கும் விவாக ரத்துக்கான ஆதாரம் ஏதாகிலும் உண்டா ? இதற்கான விடையைப் பெற நான் ஒலிநாடாவை வாங்கிக் கொள்வேன். மிக்க நன்றி. ஞாயிறன்று இதை எதிர்பார்ப்பேன். நல்லது, இப்பொழுது, இதை நான் கூறி விட்டேன், பாருங்கள்... வேண்டாம்... நான் - நான்... இவையெல்லாம்நேராக்கப்படும் ஒரு நிலையை நாம் அடையும் வரைக்கும், இதை நான் தனியே விட்டு விடுகிறேன் (பாருங்கள்). இப்பொழுது இதை ஞாபகம் கொள்ளுங்கள், தேவனுக்கு சித்தமானால், நான் திரும்பி வந்தவுடன். அடுத்த முறை நான் வரும்போது, கர்த்தருக்குச் சித்தமானால், இந்த பொருளின் பேரில் நான் பிரசங்கிப்பேன். பாருங்கள்? இப்பொழுது... அப்பொழுது, அதை நாம் எப்படியும் ஒலிநாடாவில் பதிவு செய்வோம். அது நோக்கப் பண்ணினால், அது நோகப் பண்ணும்; அது தெளிவாக்கினால், அது தெளிவாக்கும். நீங்கள் தைரியமாயிருங்கள், பாருங்கள். 24அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்ட ஒருவருக்கு அடையாளங்கள் தொடராமல் இருப்பது சாத்தியமா? அல்லது நாம் வருங்காலத்தில் ஆவியானவர் நியமித்துள்ள சூழ்நிலைகளுக்காக காத்திருக்க வேண்டுமா? இது ஒரு குழப்பமான கேள்வி போன்று தொனிக்கக் கூடும், ஆனால் இது ஒரு நல்ல கேள்வி, மிகவும் நல்ல கேள்வி. பாருங்கள்? இங்குள்ள என் குடும்பத்திலும் உங்களை என் குடும்பமாக குறிப்பிடுகிறேன் - நமது ஒலிநாடாக்கள் செல்லுகின்ற உலகிலுள்ள குடும்பத்திலும் கிரியை செய்து வருகின்ற இதைக் குறித்து விளக்க இந்த கேள்வி எனக்கு சிறிது தருணம் அளித்துள்ளது. 25இப்பொழுது, என் சபையோரில் பெரும்பாலார் பெந்தெகொஸ்தேயிலிருந்து வந்த ஜனங்களாயுள்ளனர். ஏனெனில் ஸ்தாபனங்களின் வரிசையில் பெந்தெகொஸ்தே தான் நாம் கொண்டுள்ள கடைசி செய்தி. என்னைப் பொறுத்தவரையில், மற்ற ஸ்தாபன சபைகளைக் காட்டிலும் நான் இவர்களுடன் தான் அதிகமாக நிச்சயம் இணங்குகிறேன். நான் பெந்தெகொஸ்தேயைப் பற்றிக் கொண்டிருப்பதன் காரணம் என்னவெனில், அதுவே பின்னால் வந்த செய்தி. நான் கிறிஸ்துவினிடம் கொண்டு வரும் மக்களிடம், ஏதாகிலும் ஒரு பெந்தெகொஸ்தே சபைக்குச் செல்லும்படி அங்கு வழி நடத்துகிறேன். இருப்பினும் நான் எல்லா வகையிலும், எனக்குத் தெரிந்த வரையில், அவர்கள் ஸ்தாபனமாயிருப்பதால் அவர்கள் வேதத்தின்படி தவறு செய்கின்றனர் என்றும், ஒளியை அவர்களுக்கு முன்பாக வைத்த போது அந்த ஒளியில்நடக்க அவர்களுக்குப்பிரியமில்லை என்றும் அவர்களைக் குற்றஞ்சாட்டியிருக்கிறேன். இருப்பினும், உலகிலுள்ள எந்த ஒரு சபையையும் தெரிந்து கொள்ள இன்று என்னிடம் கூறப்பட்டால், ஸ்தாபன சபைகளைப் பொறுத்தவரையில் நான் பெந்தெகொஸ்தே சபையையே தெரிந்து கொள்வேன். ஆனால் தனிப்பட்ட நபர்கள் - ஆண்களும் பெண்களும் - என்று வரும் போது, உத்தமமான கிறிஸ்தவர்கள் எல்லா ஸ்தாபனங்களிலும் உள்ளனர். மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், லுத்தரன்கள் போன்றவர். ஆனால் நான் ஜனங்கள் இருக்கின்ற இந்த முறைமைகளைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். தனிப்பட்ட நபரைக் குறித்தல்ல, ஆனால் இந்த ஜனங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் முறைமைகளான இந்த ஸ்தாபனங்களைக் குறித்து. இதை நீங்கள் இப்பொழுது தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் (பாருங்கள்?). நான் நினைக்கிறேன் ஜனங்கள்.... அவர்கள் ரோமன் கத்தோலிக்கர், யேகோவா சாட்சி, வைதீக யூதர், யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அவர்களை இரட்சிப்பதற்கென கிறிஸ்து மரித்த தனிப்பட்ட நபர்கள் அவர்கள். 26இப்பொழுது. நான்... அவர்கள் இருக்கின்ற முறைமைகளுடன் இணங்குகையில்... மெதோடிஸ்டு, பிரஸ்பிடேரியன், போன்ற ஸ்தாபனங்களில் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பாப்டிஸ்டு ஸ்தாபனத்திலும் உண்டு என்று நான் நம்புகிறேன். அவர்கள் கிறிஸ்தவர்கள், உண்மையான விசுவாசிகள். ரோமன் கத்தோலிக்க சபையிலும், கர்த்தரை உண்மையாக நேசிக்கும் உத்தமமான ஆண்களும் பெண்களும் உள்ளனர். அவர்கள் தவறு செய்ய வேண்டும் என்பதற்காக அந்த சபையைச் சேர்ந்து கொள்வதில்லை. ஆனால் அங்குள்ள அந்த முறைமையோ அவர்களுடைய சிந்தையை தவறான வழியில் நடத்துகிறது. நான் ஸ்தாபனம் உண்டாக்கும் ஒரு நேரம் எப்பொழுதாகிலும் வருமானால், உங்களை நான் வஞ்சித்து ஒரு முறைமைக்குள் உங்களைக் கொண்டு வந்து விட்டவனாயிருப்பேன். அது எனக்கு தூரமாயிருப்பதாக. உங்களை வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவினிடம் வழிநடத்த தேவன் என்னை சரியான மன நிலையில் வைப்பராக. அந்த வார்த்தையில் , நிலைத்திருங்கள். பாருங்கள்? 27ஆனால் இப்பொழுது, இங்குள்ள இந்த நபர், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருந்தும் அடையாளங்கள் தொடராமலிருக்க சாத்தியம் உண்டா என்னும் கேள்வியைக் கேட்டிருக்கிறார். இப்பொழுது அது .... நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களாயிருந்தால், அதாவது நீங்கள் முதலில் ஒரு சாதாரண மானிடனாகப் பிறந்து... இப்பொழுது நான் இதற்கு சிறுவர்களுக்கு உரைப்பது போல் விடையளிக்கிறேன். நீங்கள் சாதாரண ஒரு மானிடனாகப் பிறந்தால், சாதாரண ஒரு மானிடன் செய்யும் கிரியைகளைச் செய்வீர்கள். அது சரியா? 42, நீங்கள் மானிடனாகப் பிறக்கும் போது, மானிட இயல்பு உங்களைத் தொடருகிறது. நீங்கள் மரத்தின் மேல் வசித்து பறவையைப் போல பறந்து செல்ல முயற்சி செய்ய மாட்டீர்கள். அது மானிட இயல்பு அல்ல, அது மனிதனின் சாதாரண செயல் அல்ல. ஒரு மனிதனின் வழக்கமான செயல், அவன் வேலை செய்து.... மணம் புரிந்து குடும்பம் அமைத்து, இப்படிப்பட்ட செயல்களைப் புரிவதே. அது வழக்கமான மானிட இயல்பு, ஏனெனில் நீங்கள் அந்த விதமாக பிறந்திருக்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் கிறிஸ்தவர்களாகப் பிறந்திருந்தால், தேவனுடைய ஆவியினால் பிறந்திருந்தால், நீங்கள் கிறிஸ்துவின் தன்மைகளைப் பெற்றுக் கொண்டிருப்பீர்கள். பாருங்கள்? 28ஒவ்வொரு நாளும் இங்கு உட்கார்ந்து கொண்டு போதகத்தைக் கேட்கும் ஜனங்கள் கொண்ட இந்த சபையோரை நாம் இன்று காலையில் எடுத்துக் கொள்வோமானால், நீங்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். ஏனெனில் நீங்கள் வித்தியாசப்பட்டவர்கள், நீங்கள் வித்தியாசமாக உண்டாக்கப்பட்டவர்கள், உங்களுக்கு பசி வெவ்வேறு விதமாக இருக்கும், நீங்கள் வித்தியாசமாக உண்கிறீர்கள்; ஆனால் நீங்கள் அனைவரும் உணவே உண்கிறீர்கள். ஆனால் இப்பொழுது... ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் காண்பதற்கு மற்றவரைப் போல இருந்தாலும், நீங்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசப்பட்டவர்கள். கிறிஸ்தவர்களும் அவ்வாறேயுள்ளனர். “இப்பொழுது, எல்லாரும்...' என்று நீங்கள் கூற முடியாது. எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்களா? எல்லாரும்..? (1 கொரி 12:29-30). பாருங்கள்? இவைகளை நீங்கள் கவனிக்க வேண்டும், ஏனெனில் ஒரு கிறிஸ்தவன் கிறிஸ்தவனின் பழக்கங்களைப் பெற்றுக்கொள்கிறான்; அவர்கள் கிறிஸ்தவரைப் போல் வாழ்கின்றனர் விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்“ என்று இயேசு உரைத்தார். கவனியுங்கள்: ”என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்.... சாவுக்கேதுவானவைகளைக் குடிப்பார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்“ இவைகள் உண்மையில் கிறிஸ்தவர்களைத் தொடருகின்றன. 29இப்பொழுது, இந்த நபர் மிகவும் நல்ல ஒரு காரியத்தை இங்கு கூறியிருக்கிறார்: “.... நாம் வருங்காலம் வரைக்கும், அல்லது பரிசுத்த ஆவியானவர் நியமித்துள்ள சூழ்நிலைகளுக்காக காத்திருக்க வேண்டுமா?” அது எனக்குப் பிரியம். பாருங்கள்? உங்களுக்கு அதன் கருத்து புரிகிறதா? பரிசுத்த ஆவியானவர் நியமிக்கும் போது! தேவன் காரியங்களை நியமிக்கிறார்.. அங்கு, பெந்தெகொஸ்தே ஜனங்கள் மட்டும் முயற்சி செய்வார்களானால் (இந்த ஒலிநாடாவைக் கேட்பவர்கள்), எல்லோரும் அந்நிய பாஷைகள் பேச வேண்டும் என்னும் உங்கள் கருத்தை வலியுறுத்துவதன் பேரில் நான் ஏன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அது சரியென்று எனக்குத் தோன்றவில்லை, ஏனெனில் அது... எனக்கு 'செர்ரி பை பிடிக்கும், நான் ஒரு மானிடன். ஆனால் நான் உங்களிடம், “நீங்கள் 'செர்ரி பை சாப்பிடாவிட்டால் மானிடர் அல்ல” என்று கூற வேண்டிய அவசியமில்லை. பாருங்கள்? 'செர்ரி பை' சாப்பிடுவது என்பது ஒரு மானிடனின் பழக்க வழக்கங்களில் ஒன்றாகும். பாருங்கள்? அதன் பேரில் நீங்கள் என்னிடம் இணங்காமல் இருக்கலாம். ஆனால் அது உண்மை . இப்பொழுது, ஒருவன் இதை புசிக்கிறான், மற்றவன் வேறொன்றை செய்கிறான். 30இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் இந்த உத்தியோகங்களை நியமிக்கிறார். ஆனால் நீங்கள் அதற்கு உள்ளே உங்களை உந்திக் கொள்ள முயற்சித்தால்... நீங்கள் 'செர்ரி பை' உண்ண வேண்டும் என்று நான் உங்களிடம் கூறி, ஆனால் 'செர்ரி பை' உண்பது உங்களுக்கு வாந்தி உண்டாக்கினால் என்ன செய்வீர்கள்? நீங்கள் வாந்தி எடுத்து, மறுபடியும் செர்ரி பை' உண்டு, மறுபடியும் வாந்தி எடுப்பீர்களா? பாருங்கள்? அது உங்களுக்கு கெடுதியை விளைவிக்கும். அது போலத்தான் ஆவிக்கு முரணான ஏதாவதொன்றை நீங்கள் செய்ய உங்களை நிர்ப்பந்தம் பண்ணிக் கொள்ளும் போதும்.உங்கள் வாழ்க்கையில் அவர் ஒரு குறிப்பிட்ட காரியத்தை உங்களுக்கென நியமித்திருக்கிறார். உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள்? நீங்கள் ஆவியினால் நிறையப்படும் போது, எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த அடையாளங்களில் இது ஒன்றாகும், அதாவது நீங்கள் கிறிஸ்துவில் மிகவும் அன்புகூர்ந்து, அவர் உரைத்துள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று விசுவாசிப்பீர்கள். பாருங்கள்? அதுவே பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள் என்பதன் அத்தாட்சியாகும். உங்கள் வாழ்க்கை சந்தோஷத்தினால் நிறைந்திருக்கும். ஓ, என்னே, எல்லாமே முன்னைக் காட்டிலும் வித்தியாசமாயிருக்கும். அதுதான் பரிசுத்த ஆவி. 31இப்பொழுது, இந்த வரங்கள் பரிசுத்த ஆவியில் உள்ளன. இப்பொழுது, இன்று காலையில் இங்குள்ள இந்த சபையோர், இது நல்ல, ஜனங்களால் நிறைந்துள்ள நெருக்கமான சபை. ... (அறைகள் ஜனங்களால் நிறைந்து நிரம்பி வழிகின்றன). ஆனால் இந்த .... இது ஒரு... (இந்த கேள்விகளுக்கு நாம் பதிலளிக்கப் போகிறோம் என்று அறிவிக்காமலேயே இந்த ஜனங்கள் வந்துள்ளனர்). கவனியுங்கள், இங்குள்ள ஒவ்வொரு நபரும் பரிசுத்த ஆவியுடன் பரிபூரணமாக இசைந்து, நீங்கள் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினால் நிறைந்து, பரிசுத்த ஆவியுடன் இசைவாக இணைந்திருப்பீர்களானால், இந்த அடையாளங்கள் எல்லா நேரங்களிலும் உங்கள் மத்தியில் பெருகிக் கொண்டேயிருக்கும். அது சதாசென்று கொண்டேயிருக்கும். ஆனால் குழப்பம் இருக்கும் போது, நாம் உட்கார்ந்திருக்கும் இந்த இடத்தில் கருத்து வேற்றுமை இருக்குமானால், பரிசுத்த ஆவியால் அசைவாட முடியாது. பாருங்கள்? அது ஜனங்களின் மூலமாய் இயங்க முடியாது. பாருங்கள்? 32நான் உங்களிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் அந்நிய பாஷையில் பேசினீர்களா? என்று கேட்டால், ”ஆம்“ “நல்லது, நீ அதை பெற்றுக் கொண்டிருக்கிறாய்”. “நீ அந்நிய பாஷையில் பேசினாயா?” “ ”இல்லை. “அப்படியானால் நீ அதை பெற்றுக் கொள்ளவில்லை”. இப்பொழுது நான் என்னை ஒரு நியாயாதிபதியாக்கிக் கொள்கிறேன். தேவனே இந்த காரியங்களுக்கு நியாயாதிபதியாயிருக்கிறார். இப்பொழுது கவனியுங்கள். இயேசு, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்” என்று உரைத்தார். பாருங்கள்? விசுவாசிக்கிற குழுக்களின் மூலமாக பரிசுத்த ஆவியின் முழு சுபாவமும் பாய்ந்தோடுகிறது. அவர்கள் அன்பினால் நிறைந்தவர்களாய் உள்ளனர். பாருங்கள், அதுதான் பரிசுத்த ஆவி. அவர்கள் தங்களுக்கு அந்நிய பாஷைகள் உண்டாகும் தருணத்தில் அந்நிய பாஷைகள் பேசுகின்றனர். அதற்கு அவசியம் உள்ள போது அவர்கள் அந்நிய பாஷைகள் பேசுகின்றனர். ஒரு தீர்க்கதரிசனம் உண்டாகுமானால், அதை உரைக்கின்றனர். ஓ. அது ஒவ்வொரு முறையும் மிகவும் பரிபூரணமாக அமைந்துள்ளது. 33இன்று காலையில் நேர்முகப் பேட்டிக்காக உள்ளே வந்த அந்த பதினைந்து இருபது பேர்கள் முற்றிலும் அந்நியர்கள். அவர்களைக் குறித்து சொல்லப்பட்ட ஒரு வார்த்தையும் தவறாகப் போகவில்லை. பரிசுத்த ஆவியானவர் அங்கே தோண்டியெடுத்து. அவைகளை அறிந்து கொண்டு வெளியே கொண்டு வந்து, அவர்களிடம் கூறினார். பாருங்கள், பாருங்கள்? அங்கு ஒரு பிழையும் இருக்கவில்லை. இது என்ன, அது என்னவென்று அவர்களிடம் கூறி, இதைக் குறித்து அதைக் குறித்து என்ன செய்ய வேண்டும் மென்றும் உரைத்தார் - அவர்கள் செய்தது என்னவென்றும், அவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றும். பாருங்கள்? அது வெறும்... அது அதை ஒழுங்கில் கொண்டு வந்தது. இப்பொழுது, அவர்கள் அதன்படி செயல்பட வேண்டும். 34அன்றொரு நாள் இரவு நான் ஒரு தம்பதிகளுடன் பேசிக் கொண்டிருந்தேன். கூட்டம் நடத்திக் கொண்டிருந்த ஒரு வீட்டுக்கு நான் சென்றிருந்தேன், இல்லை, நாங்கள் மேசையைக் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது திடீரென்று பரிசுத்த ஆவியானவர் எங்கள் மத்தியில் இறங்கினார். அப்பொழுது நான் அங்கிருந்த ஒருவரிடம், “நான் ஒரு குறிப்பிட்ட மனிதனைக் காண்கிறேன், அவர் சில காரியங்களைக் குறித்து மனதில் குழப்பமுற்றிருக்கிறார். அது இங்கேயே உள்ளது. நீர் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறீர் என்று எனக்குத் தெரியும்' என்றுசொல்லிவிட்டு, நான் சுற்றி வளைத்து, அந்த மனிதனின் மனதில் இருந்த ஒவ்வொரு கேள்விக்கும் அவரிடம் பதில் சொன்னேன். அவரைத் தவிர வேறு யாருக்குமே நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்று தெரியவில்லை. பாருங்கள்? ஆனால் அவர் கிரகித்துக் கொண்டார். அது என்னவென்று அவர் அறிந்து கொண்டார். பார்த்தீர்களா? அது அவருக்கு என்னவாயிருந்தது? அவருடைய மனதில் என்ன இருந்தது என்பதை பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினார் என்று அவருக்குக் காண்பித்து, அவருக்கு உறுதிப்படுத்தினது. பார்த்தீர்களா? அதை நான் அங்கிருந்து மற்றவர்களுக்கு கூற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. நான் கூறுவதை இப்பொழுது அந்த மனிதன் இங்கு கேட்டுக் கொண் டிருக்கிறார். அது உண்மை . அது எப்படியென்பதை பார்த்தீர்களா? அது ஒரு உறுதிப்பாடு. 35இப்பொழுது. முழு சபையும் இப்படி இசைவாய் செயல்பட்டால், அப்பொழுது நமது மத்தியில் நாம் பிசாசுகளைத் துரத்துவோம், சர்ப்பங்களை எடுப்போம், சாவுக்கேதுவானவைகளைக் குடிப்போம், எல்லாவிதமான காரியங்களும் நடந்து கொண்டிருக்கும். ஆனால் அதை தனிப்பட்ட நபர்களின் மேல் நீங்கள் கட்டாயப்படுத்த முயன்றால், அப்பொழுது நீங்கள் உங்களை அது மறுபடியும் பெந்தெகொஸ்தேயாகி விடுகின்றது. அப்பொழுது உங்களுக்கு கிடைப்பது பாபிலோன் குழப்பம். உங்களால் அதை நியாயந்தீர்க்க முடியாது. பாருங்கள்? நமது இருதயங்கள் களிப்பினால், மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கும். ஓ, என்னே, பறவைகள் பாடுகின்றன, எல்லாமே அருமையாக இருக்கும், என்னே , தேவனுடைய ஆவியினால் நிறைந்திருக்கும். நாம் இயேசுவில் மிகவும் அன்புகூர்ந்து, இரவு முழுவதும் ஜெபிக்க விரும்புவோம். இப்பொழுது, இந்த கூட்டத்தை நான் தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை, என்னையும் உங்கள் முன்னிலையில் தர்மசங்கடத்தில் ஆழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. இன்று காலையில் நான், இக்கூட்டத்தில் யாருக்கெல்லாம் பரிசுத்த ஆவி உள்ளதென்று கேட்டால், ஒருக்கால் உங்களில் தொண்ணூற்றைந்து சதவிகிதம் உங்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளதென்று கரங்களை உயர்த்தக்கூடும். அதன் பிறகு நான் உங்களுக்கு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதற்கான வேத அத்தாட்சியை கொடுத்தால் - ஒரே ஒரு வேத அத்தாட்சி - ஒன்றிரண்டு கைகளும் உயர்த்தப்படுமாஎன்பது எனக்கு சந்தேகம் தான். பாருங்கள், பாருங்கள்? அந்த விதமான ஓரிடத்தில் உங்களை கட்டி விடுதல். ஆனால் அவ்விதம் நீங்கள் செய்யும் போது, உங்கள் சபையோரை நீங்கள் புண்படுத்துகிறீர்கள். ஆனால் நீங்கள் அவர்களைக் குழந்தை பருவத்தை விட்டு மனித பருவத்துக்கு கொண்டு வர வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். பாருங்கள்? 36அன்றொரு நாள் ஒருவர் எழுதின கேள்வியைப் போல. அவர் இங்கிருந்தார், அவர் ஜூனியர் ஜாக்சனைப் பற்றி ஏதோ ஒன்றைக் கூறினார். யாரோ ஒருவர் ஜூனியர் ஜாக்சனின் சபைக்குச் சென்றாராம். அவர்கள் அவரிடம், “நீர் செத்த பீன்ஸுக்கு செல்கிறீர்” என்றனராம், அப்படி ஏதோ ஒன்று. சகோ. ஜாக்சன்... ஏனெனில் சகோ. ஜாக்சன் சபையில், அவர்கள் சபையில் அந்நிய பாஷைகளில் பேச அனுமதிக்கின்றனர். எங்கெல்லாம் அவர்கள் ஆவியை உணர்ந்து அந்நிய பாஷைகளில் பேச விரும்புகிறார்களோ, அவர்கள் முன் சென்று அதை செய்கின்றனர். நல்லது, அது சகோ. ஜாக்சனின் சபை. அதனால் பரவாயில்லை. அதற்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. சகோ. ஜாக்சன் என் சிறந்த நண்பர்களில் ஒருவர்; அவர் உண்மையான தேவபக்தியுள்ள மனிதன். அவர் தேவனுடைய ஆவியினால் நிறையப்பட்டிருக்கிறார், நாங்கள் சகோதரர். இப்பொழுது, அவர் என் 'செர்ரி பையை புசிக்க வேண்டியதில்லை (பாருங்கள்?), ஆனால் நாங்கள் இருவருமே பையை தின்கிறோம். நாங்கள் இருவரும். இச்செய்தியை முற்றிலுமாக விசுவாசிக்கிறோம். அது சபையின் ஒழுங்கு. நான், “என் சபை ஒன்றாக வர முயல வேண்டுமென்று விரும்புகிறேன்” என்றேன். நான் சொன்னேன்... இங்கு நாம் அந்நிய பாஷையில் பேசுவது போன்றவை, நான் சொன்னேன்... ஒருவர் என்னிடம் “சகோ. பிரான்ஹாமே, இதெல்லாம் உண்மையானது தானா?” என்று கேட்டார். 37“நான் நியாயாதிபதி அல்ல' என்று பதிலளித்தேன், நான் அவரிடம், ”நான் உங்களிடம் ஒன்று சொல்லுகிறேன், இதை நாம் ஓரிடத்துக்கு கொண்டு வருவோம். சிறிது காலம் நாம் இவ்விதமே தொடர்ந்து, இதை ஓரிடத்துக்குக் கொண்டு வந்து அதற்கு வார்த்தையை அளிப்போம். அதன் பிறகு அதை கவனித்து வருவோம். அது பரிசுத்த ஆவியாக இருந்தால், அது வார்த்தையுடன் ஒத்துப் போகும்; இல்லையென்றால், அது ஒத்துப் போகாது“ என்றேன். பாருங்கள்? அந்த ஒரு விதத்தில் மட்டுமே அதுஎன்னவென்று கூற முடியும்; அப்பொழுது அது தன்னை தானே நியாயந்தீர்த்துக் கொள்ளும். பார்த்தீர்களா? நல்லது, அது பரிசுத்த ஆவியாக இல்லாமல் போனால், அது பறந்து சென்று விடும், அது போய்விடும். பாருங்கள்? ஆனால் அது பரிசுத்த ஆவியாக இருக்குமானால், அது சாந்தமாக வரிசையை சரியாகப் பின் தொடரும், ஏனெனில் அதுதான் அது; அது பரிசுத்த ஆவி தன் சொந்த ஒழுங்கில் செல்வதாகும். 38இப்பொழுது, அந்நிய பாஷைகள் பேசுவது போன்ற விஷயத்தில், நீங்கள் ஒவ்வொருவரும் அந்நிய பாஷை பேச வேண்டுமென்று விரும்புகிறேன். நான் நிச்சயம் விரும்புகிறேன். அநேக சமயங்களில், நல்ல கிறிஸ்தவர்கள்.... பாருங்கள், அது அந்த திட்டத்தில் இருந்தது என்று உங்களிடம் கூறுகிறேன்... நான் ஒருவரைக் கண்டேன் - திட்டம் 'அல்ல, என்னை மன்னிக்கவும், இன்று காலை நடந்த பேட்டியில், நபர் ஒருவர் (அவர்கள் இப்பொழுதும் இந்த கட்டிடத்தில் இருக்கின்றனர் என்று நினைக்கிறேன்), அவர்கள். அந்நிய பாஷைகள் பேசும் விஷயத்தில்... அந்த நபர் உத்தமமானவர், உண்மையானவர், அவர்கள் சரியாக வாழ்க்கை நடத்தி வந்தனர். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அத்தாட்சி அந்நிய பாஷை பேசுவதல்ல என்று நான் கூறினதை அவர்கள் கேட்டனர் - அதுவல்ல அத்தாட்சி - அந்த நபரிடம் நான், அந்நிய பாஷை பேசவோ அல்லது தீர்க்கதரிசனம் உரைக்கவோ தேவனிடம் கேட்கும்படி ஆலோசனை கூறினேன், ஏனெனில் அது அவர்களுடைய சுபாவம். 39முதலாவதாக, நான் அந்த நபரிடம் சென்று அவர் பிறந்த இடத்தையும், அவர் எந்த அடையாளத்தின் கீழ் பிறந்தார் என்றும் அறிந்து கொண்டேன். அவருடைய பிறப்பு என்னவென்று கூற முடிந்தது. அவர்களுடைய இயற்கையான சுபாவம் எதுவோ, அது அவர்களை ஒரு குறிப்பிட்ட வழியில் அமைக்கிறது. அவர்கள் மறுபடியும் பிறந்தவுடனே, அவர்கள் இங்கு வேறொரு சுபாவத்தை அடைகின்றனர். அதன் பிறகு நீங்கள் அந்த சுபாவத்துக்குள் ஊடுருவிப் பார்ப்பீர்களானால், அதாவது உள்ளில், உள்ளேயிருக்கும் மனச்சாட்சியில்... வெளிப்புற மனச்சாட்சி உங்களை ஒரு வழியில் நடத்துகிறது; அது உங்கள் இயற்கை பிறப்பு. அப்பொழுது அவர்கள் ஏதோ ஒன்றை உண்டாக்கி, அது அவர்களுக்கு எதைஅளிக்கிறது? அது அவர்களை இரு வெவ்வேறு நிலையில் வைக்கிறது அப்பொழுது அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரிவதில்லை அவர்கள், “கர்த்தர் என்னை இதை செய்யச் சொல்லுகிறார்' என்பார்கள். ஆனால் உள்ளேயிருப்பதோ, “ஓ, அது வேத வாக்கியங்களுடன் வரிசைப்படுகிறது என்று எனக்குத் தெரியும் என்கிறது அவர்கள் அதை செய்யத் தொடங்குவார்கள், முதலாவதாக என்ன தெரியுமா, வெளிப்புறத்திலுள்ள சாத்தான் அதில் எல்லா விதமான குறைகளையும் அவர்களுக்குக் காண்பிப்பான். அப்பொழுது அவர்கள் ”நல்லது, நான் நினைக்கிறேன், நான்...' என்பார்கள். பாருங்கள் பாருங்கள்? அவர்கள் சாத்தானுக்கு செவி கொடுக்கின்றனர் பாருங்கள்? நீங்கள் உள்ளேயிருக்கிற அந்த ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு உள்ளேயிருப்பது தான் வேதம் பிரகாரமானது. சாத்தானை எங்கேயும் நிற்க விடாதீர்கள். அங்கு நின்று கொண்டு உங்களை தவிடுபொடியாக்கிக் கொண்டிருப்பதே அவனுடைய வேலை. அவனுக்குச் செவிகொடுக்காதீர்கள். அந்த நபரிடம் நான் கூறினேன். அவர், “நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட நிச்சயத்தை மட்டும் உடையவனாயிருந்தால்!” என்று கூறினார். பாருங்கள்? மிகவும் நன்றாக உடுத்தியவர், பரிசுத்த ஆவியுடன் உத்தமமாயுள்ளவர். “பிதாவே, நான் ஏதாவது ஒன்றின் மேல் நிற்க இதை எனக்களியும்” என்று கூறுவது அந்த நபருக்கு நலமாயிருக்கும். 40இப்பொழுது, நான் அவ்விதம் போதித்தால், அந்த நபருக்கு இருப்பதை பெறாமலே, ஜனங்கள் கையை நீட்டி அதை பிடித்துக் கொண்டிருப்பார்கள். பாருங்கள்? பரிசுத்த ஆவி அந்நிய பாஷைகள் பேசுவது உண்மைதான், ஆனால் அது அந்நிய பாஷையில் பேசுவதற்கு நீங்கள் அதை முதலில் பெற்றிருக்க வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? எனவே, நீங்கள் கையை நீட்டி அந்நிய பாஷையில் பேசும் வரத்தை மட்டும் பிடித்துக் கொண்டால்... இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அது உண்மையான வரமாயிருக்கலாம்; அது உங்களுக்குள் பரிசுத்த ஆவி அந்நிய பாஷையில் பேசுவதாயிருக்கலாம். இருப்பினும் நீங்கள் இழக்கப்பட்டு நரகத்துக்கு போகக் கூடும் வேதம் அவ்வாறு உரைக்கிறது. அதற்கான வேதவசனம் உங்களுக்கு வேண்டுமாஉங்கள் கைகளையுயர்த்துங்கள். “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் (அது சரியா? அர்த்தம் உரைக்கக் கூடியதும் அர்த்தம் உரைக்கக் கூடாததுமாகிய இரண்டுமே, உண்மையான பரிசுத்த ஆவி), நான் ஒன்றுமில்லை”. பாருங்கள், மற்றது அதனுடன் இணைந்திருந்தாலொழிய . இதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் (பாருங்கள்?), எனவே இது இல்லாமல் அதை நாம் வேண்டாம். இதை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது அது அதை தொடரும். 41இப்பொழுது, மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்கிறது. சூரியன் தீயோர் மேலும் நல்லோர் மேலும் பிரகாசிக்கிறது. பயிரை முதிர்வடையச் செய்ய மழை பெய்கிறது; ஆனால் அதே மழை களையையும் முதிர்வடையச் செய்கிறது. பரிசுத்த ஆவி ஒரு கூட்டம் ஜனங்களின் மேல் விழுந்து, அந்நிய பாஷை பேசி, அது உண்மையாயிருக்கக் கூடும், அது ஜனங்களின் மத்தியில் படர்ந்து, அவர்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும் படி செய்து, அது உண்மையாயிருக்கக் கூடும். அது முற்றிலும் உண்மை . நீங்கள் ஒரு மந்திரவாதியிடம் அல்லது பிசாசு கருவியாக உபயோகித்து அவன் மூலம் பேசும் ஒருவனிடம் (medium) செல்வீர்களானால், அவர்கள் முற்றிலும் உண்மையான ஒன்றைக் கூற முடியும். எந்தோரின் மந்திரவாதியைப் பாருங்கள். சவுல்... அது முற்றிலும் உண்மையாயிருக்கக் கூடும்; இருப்பினும் அது வல்ல அது. அவர்கள் மந்திரவாதிகள். அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசுகின்றனர். பிசாசுகள் அந்நிய பாஷைகள் பேசி, அந்நிய பாஷைகளில் எழுதுவதை நான் கண்டிருக்கிறேன். அவையெல்லாம் ஒன்றுமற்றவை. ஆனால் உண்மையான காரியம் அந்த வார்த்தை மட்டுமே. அந்த வார்த்தைக்கு திரும்பி வாருங்கள்! எனவே, நீங்கள் வார்த்தை இல்லாமலே இவைகளைச் செய்யக்கூடும். ஆனால் நீங்கள் வார்த்தையைப் பெற்றுக் கொண்டு, அது இதை செய்யும்போது, அது அப்படியே நிறைவேறுவதைக் கவனியுங்கள், அதுவே சரியான காரியம். பாருங்கள்? அப்பொழுது நீங்கள் சரியாக வரிசையில் இருக்கிறீர்கள். 42ஆம், பரிசுத்த ஆவியானவர், அவருடைய தெய்வீக ஞானம் நியமித்துள்ளபடியே, இந்த ஜனங்களை உபயோகிக்கிறார். ஆனால் முதலாவது காரியம்... இப்பொழுது என்ன? இங்கு ஒரு நிமிடம் உங்களுக்கு ஒரு சிறு பிரச்சினையை அளிக்க விரும்புகிறேன். நான், “எத்தனை பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள்?” என்று கேட்டால், நீங்கள் எல்லோருமே கைகளை உயர்த்துவீர்கள். நான், “சரி, நீங்கள் பெற்றிருக்கிறீர்களா என்று பார்க்கப் போகிறேன்” என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தவர்கள் நகரத்தில் நடக்கும் அருவருப்புகளினிமித்தம் இரவும் பகலும் பெருமூச்சு விட்டு கதறி அழுதனர் என்று வேதம் உரைக்கிறது. இப்பொழுது, எத்தனை கரங்கள் உயர்த்தப்படும்? உங்களில் எத்தனை பேர் தேவனுடைய வல்லமையினால் நிறைந்து மகிழ்ச்சியினால் பொங்கி, இரவில் இளைப்பாற முடியாமல், இழக்கப்பட்ட ஜனங்களுக்காக பரிதபித்து, அருவருப்புகளின் நிமித்தம் இரவும் பகலும் கதறி அழுகிறீர்கள்? நீங்கள் செய்வதில்லை... பாருங்கள்? அப்படிப்பட்டவர் நகரத்தில் யார் இருக்கின்றனர்? அப்படிப்பட்டவர் எத்தனை பேர் சபையில் இருக்கின்றனர்?' அதுவே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அத்தாட்சி என்று வேதம் உரைக்கிறது. 43அவர் அடையாளம் போடுகிற தூதர்களிடம் (எசேக்கியல் 9ம் அதிகாரம், அது சரி), “நீ நகரம் எங்கும் உருவப் போய் அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு. மீதியானவர்களை சங்காரத் தூதன் சங்கரித்து கொன்று போடட்டும்” என்றார். அவர்கள் எத்தனை அங்கத்தினர்களாயிருந்தாலும், அவர்கள் என்ன செய்திருந்த போதிலும், அவர் “போடு...' என்றார். அப்பொழுது கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்து வெள்ளையங்கி தரித்திருந்த ஒரு புருஷன் (வெள்ளை பரிசுத்த ஆவிக்கு அடையாளமாயுள்ளது) புறப்பட்டுப் போய் நகரத்திற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிற எல்லார் மேலும் அடையாளம் போட்டான். இப்பொழுது, நீங்கள் கூறலாம். அவர் மேலும் என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள். ”முதியோரையும், வாலிபரையும் கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் எல்லாரையும் சங்கரித்துக் கொன்று போடுங்கள்“ என்றார். குழந்தைகளையும் கூடவா? ஆம்! . யோசுவா கானான் தேசத்துக்குள் பிரவேசித்த போது, அவன், “நீங்கள் யாரையும் உயிரோடு விடாதீர்கள். அது சிறுகுழந்தையாயிருந்தாலும் - சிறு அமலேக்கியன் அல்லது எமோரியனாயிருந்தாலும் - அதைக் கொன்று போடுங்கள். அவன் வளர்ந்து பெரிய அமலேக்கியன் ஆவான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்; அவன் பாளயத்தை அசுசிப்படுத்துவான்” என்றான். அது போன்று தேவனுடைய வசனத்துடன் இணங்காத சிறு காரியங்கள் வரும் போது, அதை ஒழித்து விடுங்கள். அது எந்த ஸ்தாபனத்தை சேர்ந்ததாயிருந்தாலும் எனக்கு கவலையில்லை நீங்கள், “நல்லது, அவர்கள் நல்லவர்கள்” எனலாம். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அவர்கள் அந்த வார்த்தைக்கு முரணாயிருப்பார்களானால் அதை உங்களை விட்டு அகற்றி விடுங்கள். அது வளருகின்ற சிறு அமலேக்கியன். காண்பதற்கு அழகாகவும் களங்கமில்லாதவனைப் போவும் இருக்கலாம்; அது சரியாயுள்ளது போல் காணப்படலாம். ஆனால் அதனுடன் எந்த தொடர்பும் கொள்ளாதீர்கள். அதிலிருந்து விலகியிருங்கள். “நல்லது, சகோ. பிரான்ஹாமே, அங்கு நான் ஏன் போகிறேன் என்றால்... நல்லது, நான் இதை மட்டும் ஞாபகம் கொள்ளுங்கள், எந்த அமலேக்கியனானாலும், அது வார்த்தையை மறுதலிக்கிற எதுவாயிருந்தாலும், அதை விட்டு விலகியிருங்கள்; அதனுடன் யாதொரு சம்பந்தமும் கொள்ளவே வேண்டாம்! அது உண்மையென்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? அது நிச்சயமாக உண்மையே. பாருங்கள்? அதை விட்டு விலகியிருங்கள்! 44நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிறவர்கள். அதை எங்கு காண்கிறீர்கள்? அந்நிய பாஷை பேசுகிறவர்களுக்கு: உண்மையில் பாவத்துக்காக பாரப்பட்ட ஒருவரை மட்டுமே நான் உங்களுக்கு காண்பிக்க முடியும்... ஒரு மணி நேரமாவது ஜெபிப்பவர். ஆனால் வேதம் அதை உரைத்துள்ளதென்று உங்களுக்குத் தெரியுமா... நகரத்தில் செய்யப் படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிறவர்களின் நெற்றிகளில் மட்டும் அடையாளம் போடு என்று? அதை எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள்? நிச்சயமாக. அது ஜனங்களை அடையாளமிடுவதற்காக புறப்பட்டு வருகிற பரிசுத்த ஆவி. அவர் சங்காரத் தூதனிடம், “நீ புறப்பட்டுப் போய், நெற்றிகளில் அடையாளமில்லாத எல்லாரையும் சங்கரித்துக் கொன்று போடு” என்றார்.தேவனுடைய அடையாளம் பரிசுத்த ஆவி; அதுதான் தேவனுடைய முத்திரை. இப்பொழுது. அவ்வளவு அக்கறை கொண்டுள்ள ஜனங்கள் இன்று எங்கே? மேலும் கீழும் குதித்து சபையில் அழும் மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். கூச்சலிட்டு கட்டிடம் முழுவதும் ஓடுகின்ற மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். தீர்க்கதரிசனம் உரைத்து அது நிறைவேறுகின்ற மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும்; அந்நிய பாஷைகள் பேசுகிறவர்களையும், கட்டிடத்தில் மேலும் கீழுமாக ஓடுகிறவர்களையும், தீர்க்கதரிசனம் உரைத்து, அதற்கு அர்த்தம் உரைத்து, அது நிறைவேறுகின்ற மக்களையும் என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். ஆனால் நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிற நபர் எங்கே? அந்த பாரப்பட்ட ஆத்துமா எங்கே? நீங்கள் அதன் பேரில் புதிதாக தொடங்கலாம். நான் கூறுவது விளங்குகிறதா? 45என்னால் முடிந்த அளவுக்கு ஜனங்களாகிய உங்களுக்கு நான் எடுத்துக்கூறி, ஒரு தகப்பன் தன் பிள்ளைகளை நடத்துவது போல் உங்களை நடத்தி வந்திருக்கிறேன். நீங்கள் என் பிள்ளைகள்; நான் பிரசங்கிக்கும் இந்த சுவிசேஷத்தின் மூலம் உங்களை நான் கிறிஸ்துவுக்கு பெற்றெடுத்தேன். பாருங்கள்? நீங்கள் முற்றிலும் முதிர்ந்த பிள்ளைகளாக ஆக வேண்டுமென்று விரும்புகிறேன். பவுல் கூறின வண்ணமாக, அந்த நாளில் உங்களை நான் கற்புள்ள கன்னிகைகளாக கிறிஸ்துவுக்கு ஒப்புவிக்க விரும்புகிறேன். உங்கள் இருதயம் “ஆமென்” என்று சொல்லி ஆமோதிக்காதது எதுவும் - அந்த வார்த்தையில் கிடையாது. பாவம் உங்கள் பேரில்... நாம் தவறான காரியங்களைச் செய்கிறோம் என்பது உண்மையே. ஆனால் அது உங்களைக் குற்றப்படுத்தினவுடனே முதலாவதாக நீங்கள் செய்வது, “பிதாவே, என்னை மன்னியும்” என்று ஜெபிப்பதே. 46இதை நான் கூறப் போகிறேன். சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு நபரை நான் உற்று நோக்கினேன். அன்றொரு நாள் அவர் ஒரு அருமையான வாலிபனைக் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். நாங்கள் அணில் வேட்டையாடிக் கொண்டிருந்தோம். அன்று காலையில் எனக்கு ஐந்து அணில்கள் கிடைத்தன. இன்னும்ஒன்றைப் பெற நான் பிற்பகல் வரைக்கும் காத்திருக்கலாம் என்று எண்ணினேன். கென்டக்கி நாட்டில் நீங்கள் ஆறு அணில்களை மட்டுமே சுட்டு எடுத்துக் கொள்ளலாம்; அதுதான் அங்குள்ள வரம்பு. எனவே இந்த குறிப்பிட்ட நபர் என்னிடம், “எனக்கு ஒன்பது அணில்கள் கிடைத்தன” என்றான். கிறிஸ்தவ வாலிபன், நல்ல பையன். நான் அவனிடம், “நீ செய்தது தவறு” என்றேன். அவன், “நல்லது...” என்றான். நான், “இன்று காலையில் எனக்கு ஐந்து அணில்கள் கிடைத்தன. ஒன்றை நான் பிற்பகல் வரைக்கும் விட்டு வைத்தேன். அந்த ஒரு அணிலை நான் சுட்டு வீழ்த்திவிட்டு, மரத்தின் மேல் பார்த்த போது, அங்கு ஐந்து அல்லது ஆறு அணில்கள் உட்கார்ந்து கொண்டிருப்பதை என்னால் எண்ண முடிந்தது- அவைகளை நான் கண்ணால் பார்த்தேன். ஆனால் அவைகளை விட்டு விட்டு நான் நடந்து சென்று விட்டேன். அண்மையில் இங்கு நான் நடந்து சென்று கொண்டிருந்த போது ஏறக்குறைய பதினைந்து அல்லது இருபது அணில்கள் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன். நான் வரம்பு வரைக்கும் பெற்றுக் கொண்டு, மீதியானவைகளை விட்டு விட்டு, அங்கிருந்து நடந்து வந்து விட்டேன். இந்த நாட்டுக்கு நான் வந்து, பையன்களாகிய உங்களிடம் நான் பிரசிங்கிக்கும் போது, ஜனங்களாகிய நீங்கள் அது உண்மையென்று நம்புகிறீர்கள். நான் வாழும் வாழ்க்கை உங்களுக்கு உதாரணமாயிருக்க வேண்டும்” என்றேன். கிறிஸ்தவ மார்க்கம் என்பது நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதல்ல, நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அது ஒரு உதாரணம். நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். நான் அந்த பையனிடம், “சட்டம் என்ன கூறுகிறதென்றால் .... இயேசு, 'இராயனுடையதை இராயனுக்கு செலுத்து' என்றார். நீ வேகம் சட்டத்தை மீறினால் என்ன செய்கிறாய்? நீ தவறு செய்கிறாய்; நீ பாவம் செய்கிறாய். இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்து” என்றேன். 80, நீங்கள், “நல்லது, அந்த சட்டம் தவறு” எனலாம். அது தவறாயிருந்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இயேசுவின் கட்டளையை மீறுவது தவறாகும். நீங்கள் இராயனுடையதைஇராயனுக்கு செலுத்தாமல் போனால், நீங்கள் செய்யக் கூடாது என்று இயேசு உங்களிடம் சொன்னவைகளை நீங்கள் செய்கின்றவர்களாயிருப்பீர்கள். அப்பொழுது பாவத்தின் கட்டளையை மீறினவர்களாயிருப்பீர்கள். அது சரியா? நாம் எல்லோருமே குற்றவாளிகளாயிருக்கிறோம்; அதை நாம் செய்கிறோம். ஆனால் நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று காணும் போது, அதை நிறுத்தி விடுங்கள். ஜனங்கள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கின்றனர். ஜனங்கள் சபைக்குச் செல்ல மாட்டார்கள், ஆனால் அவர்கள் உங்களை எடை போட்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை பார்த்துக் கொண்டிருப்பார்கள். 47எனவே, கிறிஸ்துவை உங்கள் இருதயத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்; அதுதான் உண்மையான ... கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியும் ஒன்றே. பரிசுத்த ஆவி, கிறிஸ்து என்றால் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்று பொருள். பரிசுத்த ஆவி என்பது அந்த அபிஷேகமே, நீங்கள் தான் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். பாருங்கள்? உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்து தான் உங்களை அபிஷேகிக்கிறார். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அப்பொழுது நீங்கள் சரியான காரியத்தைப் பெறுகிறீர்கள். அப்பொழுது அவர் உங்களை உபயோகிக்க விரும்பும் எந்த விதத்திலும் உபயோகிக்க முடியும். அவர் உங்களை உபயோகிக்க விரும்புகிறார். ஏனெனில் நீங்கள் அந்த சரீரத்தில் இருந்து கொண்டு அந்த வரங்களில் எந்த ஒன்றையும் பெற்றுக் கொள்ள முடிந்தவர்களாயிருக்கின்றீர்கள். பாருங்கள், சரீரத்தின் வெளிப்புறத்தில் இருந்து கொண்டு இந்த வரங்களில் ஒன்றை பெற்றுக் கொண்டால், அது உங்களுக்கு எந்த நன்மையும் பயக்காது. “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், எனக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை. நான் விசுவாசமுள்ளவனாயிருந்து, தேவனுடைய சகல இரகசியங்களையும் அறிந்திருந்தாலும், என் சரீரத்தை சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், நான் ஒன்றுமில்லை. பாருங்கள், இப்படிப்பட்ட காரியங்களின் மேல் சார்ந்திராதிருங்கள். பரிசுத்த ஆவி ஒரு நபர்; அது தேவன், உங்களுக்குள் இருக்கும் தேவன், ஒருநபர், தேவன், உங்கள் சரீரம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்பவர். நீங்கள் மாறுகின்றீர்கள். நீங்கள் புது சிருஷ்டியாகின்றீர்கள். ஏதாகிலும் ஒரு சிறு தவறு இருந்தாலும், அவர் உங்களிடம் அது தவறென்று கூறுவார், அப்பொழுது அதை விட்டு விலகுங்கள். அதைச் செய்யாதீர்கள். ”பிதாவே, அதைச் செய்ய வேண்டுமென்று நான் நினைக்கவில்லை, என்னை மன்னியும்“ பாருங்கள்? அது தான் பரிசுத்த ஆவி. 48நீங்கள் எவ்வளவாக அந்நிய பாஷையில் பேசினாலும், எவ்வளவாக குதித்தாலும், எவ்வளவாக ஓடினாலும், எவ்வளவாக இதை, அதை; மற்றதை செய்தாலும் (பாருங்கள்?), நீங்கள் என்ன செய்தாலும், நீங்கள் செய்யும் தவறான காரியங்களினிமித்தம் உங்களை கண்டித்துணர்த்தும் பரிசுத்த ஆவி அங்கு இல்லாமல் போனால், அதனால் ஒரு பிரயோஜனமுமில்லை. இப்பொழுது, ஆகையால்தான் இங்குள்ள இந்த நபர் சரியாயிருக்கிறார். பரிசுத்த ஆவி அதை செய்யட்டும். ஆனால் இப்பொழுது (பாருங்கள்?), இப்பொழுது., இது நேரிட காரணமாயிருப்பது... இதை நான் அன்போடும், அன்பினால் தெளிக்கப்பட்டும், வார்த்தையில் அபிஷேகம் பண்ணப்பட்டும் கூறுகிறேன். பாருங்கள்? உண்மையான பரிசுத்த ஆவி உங்களுக்குள் இருக்குமானால், அதை சந்தேகிக்க மாட்டீர்கள். அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள், அது உங்களுக்கும் தேவனுக்குமிடையே உள்ள தனிப்பட்ட விவகாரம். பாருங்கள்? ஏதோ ஒன்று நடந்துள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு மாறுதல் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். வேறெதாகிலும் இருந்தாலும் இல்லாமற் போனாலும், நீங்களே அந்த மாறுதல். பாருங்கள்? நீங்கள்தான் அந்த மாறுதலை உங்களில் உண்டாக்கிக் கொண்டீர்கள், அதை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் அந்நிய பாஷை பேசினாலும், நீங்கள் குதித்தாலும், கூச்சலிட்டாலும், என்ன செய்தாலும், தேவன் உங்களில் வாசம் செய்கிறார் என்றும், நீங்கள் உங்கள் சொந்த சிந்தையில் நடக்கவில்லை என்றும், கிறிஸ்துவின் சிந்தையே அந்த வார்த்தையுடன் உங்களை நடத்துகிறதென்றும், அவ்விதம் தான் அது முற்றிலுமாக நடக்கிறதென்றும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். 49இப்பொழுது! ஆனால் நான்... ஜனங்கள், “ நல்லது, சகோ. பிரான்ஹாமே, அப்படியானால் நாங்கள் அந்நிய பாஷையில் பேச வேண்டும் என்பதில் உமக்கு நம்பிக்கையில்லையா?” என்று கேட்கலாம். பாருங்கள்? அப்படியானால் நான்! ப்பொழுது கூறினதை நீங்கள் அப்படியே திரித்து விட்டீர்கள், நீங்கள் அந்நிய பாஷையில் பேச வேண்டுமென்பதை நான் நிச்சயம் நம்புகிறேன். ஜனங்களாகிய உங்களில் சிலர். பாருங்கள்? நான் இதை சொல்கிறேன், நீங்கள் அவ்விதம் புரிந்து கொள்கிறீர்கள், கூடாரத்தை சுற்றிலும் ஆயிரத்தைந்நூறு மைல் என்னும் விஷயத்தைப்போல. உங்களுக்குப் புரியவில்லை என்றால், என்னைக் கேளுங்கள். பாருங்கள்? உங்களுக்குப் புரியவில்லை என்றால், எனக்கு கடிதம் எழுதிக் கேளுங்கள். நான் இங்கு என்ன சொல்கிறேனோ, அதை அப்படியே சொல்லுங்கள். பாருங்கள்? நான்... நீங்கள்.... பவுல் சொன்னது போல, “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” (1 கொரி. 11:1). பாருங்கள்? நான் தவறென்று நீங்கள் கண்டால், என்னிடமிருந்து விலகிக் கொள்ளுங்கள். பாருங்கள்? அவ்வளவுதான். ஏனெனில் நான் தவறு செய்கின்ற மனிதனாயிருப்பேன். பாருங்கள்? 50தயவு கூர்ந்து விளங்குங்கள். சகோ.பிரான்ஹாம் ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானவர் என்றும், அவரால் சிருஷ்டிக்க முடியும் என்றும், இயேசு காண்பதற்கு சகோ.பிரான்ஹாமைப் போலவே இருக்க வகையுண்டு என்றும் ஜனங்கள் கூறுகின்றனர். இப்பொழுது, நான் ... இந்த நபர் இதைக் கேட்டிருக்கிறார். அது யாராயிருப்பினும், அது யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் உங்கள் சகோதரனே, பாருங்கள்? இயேசு உங்கள் இரட்சகர். நான் உங்கள் இரட்சகராக இருக்க முடியாது, ஏனெனில் அவர் உங்களை ஏற்கனவே இரட்சித்து விட்டார். இப்பொழுது. அங்கு நீங்கள் உண்மைக்கு மிக அருகில் இருக்கிறீர்கள். ஆயினும் நீங்கள் உண்மைக்கு மிகத் தொலைவில் இருக்கிறீர்கள் - அதாவது, இந்த நபரிடம் இவ்விதம் கூறிய அந்த நபர். இது ஒரு ஸ்திரீயின் கையெழுத்து போல் எனக்கு தோன்றுகிறது. மிகவும் அழகான கையெழுத்து. இது ஒரு ஸ்திரீயின் கையெழுத்து என்று என்னால் கூற முடியும். சகோ. காப்ஸ், இது ஸ்திரியின் கையெழுத்து என்று நீங்களும் நினைக்கிறீர்கள் அல்லவா? அழகான கையெழுத்து. அது யாரென்று எனக்குத் தெரியாது. பாருங்கள். 51இப்பொழுது, “சகோ. பிரான்ஹாமே, காண்பதற்கு இயேசு உங்களைப் போல் இருக்க வகையுண்டா, அல்லது நீங்கள் இயேசுவா? அப்படி ஏதோ ஒன்று ஒரு விதத்தில் அது முற்றிலும் உண்மையே. மற்றொரு விதத்தில் அது அந்திக்கிறிஸ்து. அது உண்மைக்கும் தவறுக்கும் உள்ள வித்தியாசம். என்னை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் நபராகச் செய்வது அந்திக் கிறிஸ்து (பாருங்கள்?) , ஏனெனில் காத்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் அந்த நபர் உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்து கொண்டு, மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மறுபடியும் வருவார். ஆனால் அவருக்குள் இருந்த அவருடைய ஜீவன் என் மேலும், அவரைப் பெற்றுள்ள உங்கள் மேலும் தங்கியிருக்கும் விஷயத்தில், அது முற்றிலும் உண்மை; அப்பொழுது நாங்கள் கிறிஸ்துவாகி விடுகின்றீர்கள். குட்டி மேசியாக்களின் பேரில் நான் அளித்த செய்தி உங்களுக்கு ஞாபகமுள்ளதா? பாருங்கள்? நீங்கள்... மேசியா என்னும் சொல் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்னும் அர்த்தம் கொண்டது. இப்பொழுது, நீங்கள், உங்களுக்கு பரிசுத்த ஆவி இருக்குமானால், நீங்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவராகி விடுகின்றீர்கள். பாருங்கள்? அங்கு எல்லாவிதமான அபிஷேகம் பண்ணப்பட்டவர்களும் உள்ளனர். 52இப்பொழுது கவனியுங்கள், அது வேதப்பிரகாரமாக அபிஷேகம் பண்ணப்பட்டவராக இருந்தால். அவர்களில் அநேகர் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்... பாருங்கள்? இது முழுவதுமே ஒரு பெரிய கதம்பமாக இருப்பதால்... எல்லாவிதமாகவும் கலந்துள்ள ஒன்றாக உள்ளது. சாத்தான் தன் சூழ்ச்சிகள் அனைத்தோடும் வந்து அதை முற்றிலும் பாவனை செய்து விடுகிறான். நீங்கள் முழுவதும் நிச்சயமாயிருக்க ஒரே ஒருவழி; வார்த்தையை வார்த்தையின் மூலம் ஒப்பிட்டுப் பாருங்கள், ஒவ்வொரு வார்த்தையாக ஒப்பிட்டுப் பாருங்கள். அந்த ஒரு வழியில்தான் உங்களால் முடியும். வில்லியம் பிரான்ஹாம் என்னும் நபராகிய நானோ, அல்லது வேறெந்த மனிதனோ ஸ்திரீயோ நமது இரட்சகராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாக இருப்பதென்பது மிகப் பெரிய தவறாகும். ஆனால் அவருடைய ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, அவருடைய ஜீவன் உங்களுக்குள் வருவதென்பது ... 53அது மிகவும் அழகாக எலியாவிலும் எலிசாவிலும் முன்னடையாளமாக காட்டப்பட்டுள்ளது. எலியா மேலே எடுத்துக் கொள்ளப்பட்டான், அந்த வயதான தீர்க்கதரிசியாகிய எலியா வீடு சென்றான். அவன் மிகவும் களைப்புற்றிருந்தான். அவனை வீடு கொண்டு செல்ல நதிக்கு அக்கரையில் அக்கினிக் குதிரைகளால் பூட்டப்பட்ட ஒரு இரதம் இருந்தது. அப்பொழுது நீங்கள் கவனித்தீர்களா, எலியாவும் எலிசாவும் நதியைக் கடந்த போது (தீர்க்கதரிசிகளின் புத்திரர். அங்கிருந்து கொண்டு அவர்களை கவனித்துக் கொண்டிருந்தனர்); எலியா தன் சால்வையை எடுத்து நதியை அடித்தான். அவன் அவ்விதம் செய்தபோது அது பிரிந்தது; அவன் அதன் வழியாகக் கடந்து சென்றான். அவன் அந்த இளம் தீர்க்கதரிசியை நோக்கி, “என்னை எதற்காகப் பின்தொடருகிறாய்? உன்னுடைய வேண்டுதல் என்ன?” என்று கேட்டான். அதற்கு அவன், “உம்முடைய ஆவியின் இரட்டிப்பான பங்கு என் மேல் வரவேண்டும்” என்றான். அந்த மகத்தான தீர்க்கதரிசியின் இரட்டிப்பான பங்கு அவன் மேல் வர வேண்டுமா? எலியா, “நீ கடினமான ஒரு காரியத்தைக் கேட்டிருக்கிறாய்; ஆனால் நான் போகையில் என்னைக் காண்பாயானால், அது உன் மேல் வரும் என்றான். 54இப்பொழுது, அந்நாளிலே, அந்த தீர்க்கதரிசி வார்த்தையாயிருந்தான், ஏனெனில் அவன் உலகத்துக்கு வார்த்தையை வெளிப்படுத்துபவனாக இருந்தான். பாருங்கள்? அதைக் காட்டிலும் ஒரு பெரிய ஊழியம் வர வேண்டும் என்பதை அவன் அங்கு அறிந்திருந்தான். அதற்கு இதைக் காட்டிலும் ஒரு பெரிய காரியம் அவசியமாயிருந்தது. இயேசு இவ்வுலகில் இருந்தபோது, அவர் எலியாகவாக இருந்தார். நான் பிதாவினிடத்திற்குப் போகிற படியால், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்வீர்கள். (யோவான் 14:12). இப்பொழுது, நீங்கள் அதை எவ்விதம் செய்யப் போகிறீர்கள்? அவரைக் கவனியுங்கள்! அவர் யார்? வார்த்தை ! பாருங்கள்? அவரைக் கவனியுங்கள்! 55இப்பொழுது, சிருஷ்டிப்பு போன்ற காரியத்துக்கு வரும் போது, அது உண்மை. இயேசு நேரடியாக எதையும் சிருஷ்டித்து உருவாக்கவில்லை. அவர் ஒரு பொருளை முதலில் எடுத்தார். அவர்தண்ணீரை முதலில் எடுத்து திராட்சரசம் உண்டாக்கினார். அவர் அப்பத்தை எடுத்து அதிக அப்பங்களை உண்டாக்கினார். அவர் மீன்களை எடுத்து அதிக மீன்களை உண்டாக்கினார். ஆனால் இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகள் செய்யப்படுமென்று அவர் வாக்களித்தார். பாருங்கள்? பார்த்தீர்களா? இப்பொழுது ஏன்? அவர் இங்கிருந்ததைக் காட்டிலும் மிகவும் பொல்லப்பான நாளில் இது நடைபெறும். பாருங்கள்? அது இன்னும் அவரே, ஆனால் அவர் உங்கள் சரீரமாகிய கூடாரத்தை உபயோகிக்கிறார். பாருங்கள்? 'உங்களில் இருக்கும் இந்த நபர், அது உங்கள் பிறப்பு ... நீங்கள் ஜான் டோ; நீங்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தீர்கள்; ஒரு குறிப்பிட்ட காரியத்தின் கீழ் நீங்கள் பிறந்தீர்கள், அது உங்களுடன் சம்பந்தப்பட் டுள்ளது. நிச்சயமாக சம்பந்தப்பட்டுள்ளது. 56எனக்குத் தெரியும் நான் முன்பு... அப்பா, “இந்த காலத்தில் நான் உருளைக் கிழங்குகளை நட முடியாது; ஏனெனில் சந்திரன் இப்பொழுது சரியாக இல்லை” என்று சொல்வது வழக்கம். “பில்லி, நீ உருளைக் கிழங்குகளை நடமுடியாது” என்பார். அதற்கு நான், “நான் உருளைக் கிழங்குகளை சந்திரனில் நடவில்லை, இங்குள்ள தரையில் தானே நடுகிறேன்” என்றேன். அவர், “சரி புத்திசாலியே, போய் செய்! நீ முட்டிக் கொண்டு உனக்கு தலையில் சில வீக்கங்கள் வந்தால் தான் பாடம் படிப்பாய்” என்றார். நான் உண்மையில் பாடம் படித்தேன். உங்களிடம் இதைக் கூறுகிறேன்: ஒரு பலகையை எடுத்து அமாவாசையின் போது வெளியிலுள்ள புல்லின் மேல் வைத்துப் பாருங்கள். அந்த புல் உடனே காய்ந்து போகும். பெளர்ணமியின் போது வைத்துப் பாருங்கள்? ஒரு வாரமாக அதை நீங்கள் வைத்திருந்தாலும் அது புல்லுக்கு ஒரு கெடுதியும் செய்யாது. 57சந்திரன் மாறுகையில், கடலைக் கவனியுங்கள். சந்திரன் மறையும் போது, பேரலையும் அதை தொடர்ந்து மறைந்து விடுகிறது. சந்திரன் பூமியிலிருந்து கோடிக்கணக்கான மைல்கள்தொலைவில் உள்ளது. அது மட்டுமல்ல, கென்டக்கி நாட்டில், உப்புத் தண்ணீர் கிடைக்கும் வரைக்கும் ஒரு இரும்புக் கம்பியை நிலத்தின் கீழ் அடியுங்கள். அந்த குழாயை கவனித்துக் கொண்டே வாருங்கள். சந்திரனின் ஈர்ப்பு சக்தி உள்ள போது அது எவ்வளவு ஆழம் உள்ளது என்பதை கவனியுங்கள். சந்திரன் மறையும் போது அது பூமிக்கடியில் எவ்வளவு கீழே போய் விடுகிறது என்பதை பாருங்கள். நிச்சயமாக! நீங்கள் பூமிக்கு மேலே வருகின்ற ஒன்றை நடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அமாவாசையின் போது, அதை நட்டால் அது முள்ளங்கி அல்லது 'டர்னிப் பை போல பூமிக்கு கீழே இறங்கி விடுவதை பாருங்கள். ஆனால் அதையே பெளர்ணமியின் போது நட்டால், அது நிலத்துக்கு மேலே படர்வதை கவனியுங்கள். நிச்சயமாக, அதற்கும் இதற்கும் சம்பந்தமுண்டு. 58ஆரோன் ஏன் தன் மார்க்கவசத்தில் அந்த கோத்திரப் பிதாக்களின் பிறப்பு கற்களை வைத்திருந்தான். அந்த தாய்மார் கூறினதை கவனியுங்கள். பிரசவ வேதனையிலிருந்த அந்த எபிரேயத் தாய்மார்கள் பிள்ளைகள் பிறக்கும்போது கூறினது. அவர்களுக்கு பெயரைச் சூட்டினது; அவர்களுடைய பிறப்பை அறிவித்தது; அது அவர்களுடைய சொந்த தேசத்தில் அவர்களை வைத்தது; அவர்களை நித்தியத்துக்கு அமைத்தது. இந்நாட்களில் ஒன்றில் நான் சிறிது காலம் இங்கு தங்க நேரிட்டால், அந்த பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். நிச்சயமாக! பிறகு யாக்கோபைக் கவனியுங்கள். அவன் அங்கு மரணத் தருவாயில் இருந்த போது, அவன் கைகளை கோத்திரப் பிதாக்களின் மேல் வைத்து அவர்களை ஆசீர்வதித்த போது, அவர்கள் எங்கிருப்பார்கள் என்பதை சரியாக கூறினான். அது அவர்களுடைய பெயரின்படியும், அவர்களுடைய பிறப்பின்படியும் சரியாக அமைந்திருந்தது. நிச்சயமாக, அது உங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது. 59இப்பொழுது, அது உங்கள் பிறப்பின் பாதை; அதற்கேற்றவாறு தான் மாம்சப் பிரகாரமான மனிதரும் ஸ்திரீகளுமாகிய நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் மறுபடியும் பிறக்கும் போது. அது வெளிப்புறமான புலன் அல்ல. வெளிப்புறத்தில் நீங்கள் பார்த்து, உணர்ந்து, முகர்ந்து. காதுகளினால் கேட்கிறீர்கள். ஆனால்உங்கள் உள்ளில் உள்ளதுதான் நிஜமான நீங்கள். இப்பொழுது, இங்குள்ள வெளிப்புறத்தில், சாத்தான் உங்களை சோதித்து, எல்லா வகைகளிலும் உங்களை கீழே விழத்தள்ளுகிறான்; ஆனால் உள்ளில் உள்ள இங்கேயோ, அவனை நீங்கள் அனுமத்திலாலொழிய அவனால் ஒன்றும் செய்ய இயலாது. ஏனெனில் இங்கு உள்ளில் உங்களுக்கு விசுவாசம் உள்ளது. விசுவாசம் வெளிப்புற புலனின் மூலம் வருவதில்லை, அந்த வெளிப்புறப் புலன் அறிவைப் பயன்படுத்தி சிந்திக்கிறது. ஆனால் விசுவாசத்தில் அவ்விதம் சிந்தித்தல் எதுவுமில்லை. அதை நீங்கள் தேவனிடத்திலிருந்து பெற்றிருக்கிறீர்கள், அது அங்குள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அது எவ்வளவு தவறாகக் காணப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை, அது சரியென்று நீங்கள் அப்பொழுதும் அறிந்திருப்பீர்கள்; அது கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் என்பது. பாருங்கள்? அதை எதுவுமே தொல்லைப்படுத்த முடியாது. அது நேராக சென்று கொண்டிருக்கிறது. கடினம் என்பது அதற்கு கிடையவே கிடையாது. அது அதன் வழியாக கடந்து சென்று விடுகிறது. ஏனெனில் அது வார்த்தையாயுள்ளது. வார்த்தை என்பது பட்டயம், அது வெட்டுகிறது. அந்த பட்டயம் வெட்டி தன்னை எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துக் கொள்கிறது. பார்த்தீர்களா? அந்த வார்த்தையாகிய பட்டயத்தைப் பிடிக்க விசுவாசம் என்னும் கரம் தேவைப்படுகிறது. அந்த விசுவாசம் எப்படி இருக்க வேண்டுமென்றால்.... 60இப்பொழுது பாருங்கள், அந்த உட்புறப் புலனில்... இது உட்புறம்; இது வெளிப்புறம். சத்தியம் இங்கு உட்புறத்தில் வெளிப்படுகிறது: வெளியே அது அறிவைப் பயன்படுத்தி சிந்தித்தல். “நாம் எல்லோரும் சென்று அசெம்பிளீஸ் சபையை சேர்ந்து கொள்ளலாம்' என்பது நியாயமாகத் தோன்றவில்லையா? எனக்கு அசெம்பிளீஸ் ஆப் காட் சபை பிடிக்கும், எனக்கு ஒருத்துவம் சபை பிடிக்கும், எனக்கு எல்லா சபைகளுமே பிடிக்கும். ஏன் நாம் எல்லோரும் சென்று அவர்களுடன் இணைந்து கொள்ளக் கூடாது. அது ஒருக்கால் நமக்கு நன்மை பயக்கும். அது அறிவை பயன்படுத்தி சிந்தித்தல், அது வெளிப்புறம். ஆனால் உள்ளிலோ, அதை கவனியுங்கள். நீங்கள் வேதத்துடன் ஒத்துப் போகாமலிருக்கும் சில காரியங்களை காணும் போது; அசெம்பிளீஸ் சபையைப் பாருங்கள். அவர்கள் செய்யும் அநேக காரியங்கள் வேதப் பிரகாரமானவை அல்ல என்பது என் கருத்து. அவை வேதப்பிரகாரமானவை அல்ல என்பதை அவர்களுக்கு நிரூபித்துக் காண்பிக்க முடியும். ஆனால் அதில் அநேகருடைய சிந்தைகள் ஈடுபட்டுள்ளன. அசெம்பிளீஸ் சபையை சேர்ந்த ஆயிரக்கணக்கான சகோதரர்களும் சகோதரிகளும் வார்த்தையை விசுவாசிக்கின்றனர், அவர்கள் அசெம்பிளீஸ் போதனைகளை நம்புவதில்லை, ஆனால் அவர்கள் வலையில் சிக்கிக் கொண்டுள்ளனர். 61பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், ஒருத்துவக் காரர்கள் மற்ற எல்லோருமே இந்த வலையில் சிக்கிக் கொண்டுள்ளனர். அங்கு ஒரு கூட்டம் மக்கள் ஒன்று சேர்ந்து அறிவைப் பயன்படுத்தி சிந்திக்கின்றனர். மனிதனுக்கு அதிகமான கெளரவம் உண்டு. இங்கு ஒரு பேராயர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், பொதுவான மேற்பார்வையாளர். அவர் ஏதாவதொன்றைச் சொன்னால், ஒரு சின்ன ஆள் என்ன சொல்ல முடியும்? அவன் ஏதாவதொன்றைச் சொல்ல பயப்படுவான். “நீர் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். ஆம், அது உண்மை ! உ ஊ ! ஆம், பேராயர் அவர்களே, போதகர் அவர்களே, அது முற்றிலும் உண்மை” என்பான். அவன் அவருடன் ஒத்துப் போகிறான். இங்கு, தெருவில் உள்ள ஒரு குடிகாரனை எடுத்துக் கொள்வோம். தெருவில் செல்கின்ற ஒரு சாதாரண குடிமகன் அவனைக் காணும் போது, “அவன் ஒன்றுக்கும் உதவாதவன்” என்பான். ஆனால் அந்த குடிகாரனை இங்கு நீங்கள் கொண்டு வந்து, அவனைக் காவல் துறையில் சேர்த்து அவக்கு ஒரு 'பாட்ஜ்ஜை குத்தி, அவன் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்தால், நீங்கள், “காலை வணக்கம், ஜான். உம்மை மறுபடியும் காண்பதில் மகிழ்ச்சி” என்பீர்கள். பாருங்கள்? ஒருவருக்கொருவர் மரியாதை. இயேசு, “நீங்கள் இந்தவிதமான மரியாதை கொண்டிருப்பீர்களானால், உங்களுக்கு எப்படி விசுவாசம் இருக்கும்?” என்றார், உங்களுக்குத் தெரியும். ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்து தல் (அந்த வசனத்தை அப்படியே என்னால் கூற முடியவில்லை), ஆனால் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்த விரும்புகின்றனர். அப்படி செய்யக் கூடாது. ஒரு ஸ்தாபனத்தில் மனிதர் ஒன்று கூடும் போது, அவர்கள் உட்காருகின்றனர்; சிறிய ஆட்கள் ஏதாவது சொல்ல பயப்படுகின்றனர், ஏனெனில் பேராயர் இவ்விதம் உரைத்துள்ளார்.அந்த மனிதனை அவமதிக்க வேண்டாம். அவர் நல்லவர் என்று நம்புங்கள். ஆனால், தேவனுடைய வார்த்தையே சரியென்றும் அதற்கு முரணான மற்ற எல்லாமே தவறு என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருங்கள். “என் வார்த்தையே சத்தியம், மற்றெந்த மனிதனுடைய வார்த்தையும் பொய்” (ரோமர் 3:4). அதை கண்டீர்களா? அதை தான் நாம் செய்ய விரும்புகிறோம், அதை நாம் விசுவாசிக்க விரும்புகிறோம் 62இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், நாம் வார்த்தை அல்ல, ஆயினும் நாம் வார்த்தை. உ ஊ! உங்களுக்கு புரிகிறதா? இயேசு தேவன் அல்ல, ஆயினும் அவர் தேவன். அவர் ஒரு மனிதன், ஆயினும் அவர் தேவன். அவர் அழுதார், ஆயினும் அவர் மரித்தோரை உயிரொடெழுப்பினார். மரித்த ஒருவனுக்காக அவர் அழுதார். ஆயினும் அவனை உயிரொடெழுப்ப அவரால் முடிந்தது. அவர் யேகோவாயீரே, யேகோவா ராஃபர், யேகோவா மனாசே; அவர் யேகோவா, எல்லாவற்றையும் முழுவதுமாக கொண்டிருந்தவர். அவர் யேகோவா, ஆயினும் அவர் ஒரு மனிதன். அவர் பூமிக்கு சொந்தக்காரர், அவர் பூமியை படைத்தவர், ஆயினும் அவருக்குத் தலை சாய்க்க இடமில்லை. அவர், “நான் உண்டாக்கின பறவைகளுக்குக் கூடுகள் உண்டு, ஆனால் எனக்கோ தலை சாய்க்க நான் உண்டாக்கின நரிகளுக்கு தரையில் குழிகள் உண்டு, ஆனால் எனக்கோ அடக்கம் பண்ணப்படக்கூட இடமில்லை“ என்றார் (மத்.8:20). அது உண்மை. அவரை அடக்கம் பண்ண அவர் வேறொருவரின் கல்லறையை கடன் வாங்க வேண்டியிருந்தது. 63அவர் ஸ்திரீயிலுள்ள கர்ப்பப்பையை உண்டாக்கினவர். ஆனால் பிறப்பதற்கு அவருக்கு கர்ப்பப்பை இருக்கவில்லை; அவர் ஒரு கர்ப்பப் பையை கடன் வாங்க வேண்டியிருந்தது. அவர் பூமியை சிருஷ்டித்தார், ஆனால் அவரை அடக்கம் பண்ண அவருக்கு இடம் எதுவுமில்லை. அவரை அடக்கம் பண்ணுவதற்காக அரிமத்தியா ஊரானாகிய யோசேப்புக்கு இருந்த தரையிலுள்ள குழியை கடன் வாங்க வேண்டியிருந்தது. பாருங்கள்? அவர்கள் ஓரிடத்தை கடன் வாங்க வேண்டியிருந்தது; இருப்பினும் அவர் தேவன், அவர் தேவன் என்பதை நிரூபித்தார். இப்பொழுது, உங்களுக்குப் புரிகிறதா? நாம். நாம் குட்டி மேசியாக்கள், ஆனால் அந்த இயேசு அல்ல. அவர் நம்முடையபிதா; நாம் அவருடைய ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறோம். ஆகையால் தான் அவருடைய ஜீவன்... அது ஜனங்களை அவ்விதம் நம்பச் செய்கிறது. பாருங்கள், நீங்கள் உட்கார்ந்து கொண்டு சிந்திக்காவிட்டால், “நல்லது, இந்த ஆள் மேசியாதான், அவர் நிச்சயம் அவர்தான்” என்று ஜனங்கள் நம்பும்படி செய்கிறது. “இங்குள்ள இவர் ஒருக்கால் இருக்கக்கூடும்”. அவர்கள் இருவருமே. பாருங்கள்? “அவர்கள் இரண்டு பேர் எவ்விதம் இருக்க முடியும்?” பாருங்கள்? அங்கு ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். பாருங்கள்? ஆனால் பாருங்கள்? பெந்தெகொஸ்தே நாளில் அவருடைய ஜீவன் வெவ்வேறாகப் பிரிந்தது. அந்த அக்கினி ஸ்தம்பம் இறங்கி வந்தபோது, அது அக்கினி நாவுகளாகப் பிரிந்து அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது. தேவன் ஜனங்களின் மத்தியில் தம்மை பிரித்துக் கொள்ளுதல். ஏனெனில் கணவனும் மனைவியும் ஒருவர் போல, சபையும் கிறிஸ்துவும் ஒருவரே 64சகோ.பிரான்ஹாமே, நான் வார்த்தையில் நிலை நின்று, அதே சமயத்தில் என் மனைவிக்காக நான் உண்மையில் அக்கறை கொண்டிருக்கிறேன் என்பதை எவ்வாறு அவளுக்குக் காண்பிக்க முடியும்? ஏனெனில் “நீ விசுவாசிப்பதை அல்லது பிரசங்கிப்பதை ஏன் செயல்படுத்தக் கூடாது?” என்னும் கேள்வி எழுந்துள்ளது. நல்லது, இந்த கேள்வி கேட்டது. உங்கள் மனைவியானால், அதைக் கேட்க அவளுக்கு எல்லா உரிமையுமுண்டு, நீங்கள் உங்களை சரிபடுத்திக் கொள்வது நலம். பாருங்கள்? ஆனால் அவள் பொல்லாதவளாய் இருக்க இதைக் கூறுவாளானால், “இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், உன்னுடைய கழுத்தில் எந்திரக் கல் கட்டப்பட்டு, நீ சமுத்திரத்தில் தள்ளுண்டு போவது உனக்கு நலமாயிருக்கும்.” (லூக்.17:2). இப்பொழுது, அதுதான் உங்கள் கேள்வி. ஒருக்கால் இந்த மனைவி அந்த விதமானவளாய் இல்லாமல் இருக்கக்கூடும். அவள் ஒருக்கால் வித்தியாசமானவளாய், நல்லவளாய் இருக்கக் கூடும். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்க்க அவள் உங்களை பரிசோதிக்கக்கூடும். 65இப்பொழுது நீங்கள் அவளுடன் அன்பில் நிலைத்திருங்கள், அவள் இயேசுவை உங்களில் காணட்டும். அப்படிச் செய்யுங்கள். பாருங்கள்? நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள். சில... இக்காலையில் ஒரு நபரைக் குறித்து ஒரு சிறு விவரணத்தை அளிக்க விரும்புகிறேன்.... ஒரு சமயம் இந்த ஸ்திரீ பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டாள். அவள் மிகவும் இனியவள். அவர்கள்... அவள் சொன்னாள். நல்லது, அவளுடைய வாழ்க்கை கடுமையாயிருந்தது. அவளுடைய கணவன் ஒரு குடிகாரன். எனவே, அவள் தொடர்ந்து சகித்துக் கொண்டே வந்தாள். அவன், “தேனே, சபைக்குச் செல்ல விரும்பினால், போய் வா. நான் ப்ரவுன் டெர்பி மதுக்கடைக்கு சென்று வருகிறேன். நீ போய் விட்டு வா” என்பான். எனவே அவர்கள் இவ்விதம் வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்த மதுக்கடை முன்பு போனிஃப்பர் என்று அழைக்கப்பட்டது. பழங் காலத்தவராகிய உங்களில் அநேகருக்கு மூலையில் இருந்த போனிப்பர் ஞாபகமிருக்கும். இப்பொழுது அது ப்ரவுன் டெர்பி என்று அழைக்கப்படுகிறது. அப்படித்தான் என்று நினைக்கிறேன். 66அந்த மதுக்கடையில் அவன் குடித்துக் கொண்டிருக்கும் போது, முதலாவதாக என்ன தெரியுமா, ஒரு இரவு சபையைக் குறித்தும் கிறிஸ்தவர்களைக் குறித்தும் ஒரு கேள்வி எழுந்தது. அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த குடிகாரர்களில் ஒருவன், “இனிமேல் கிறிஸ்தவர்கள் என்று யாரும் கிடையாது. அப்படி யாருமே கிடையாது. இந்த கூட்டம் அனைத்தும் மாய்மாலக்காரரே: அவர்கள் இங்கு புகைபிடித்துக் கொண்டும் குடித்துக் கொண்டும், நாம் செய்கிறதையே செய்து கொண்டு தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். அப்படி யாருமே கிடையாது” என்றானாம். இந்த குடிகாரன் உடனே எழுந்து நின்று, “ஒரு நிமிடம் பொறு. எனக்குத் தெரிந்த அப்படிப்பட்ட ஒருத்தி இருக்கிறாள்” என்றானாம். அவர்கள், “அது யார்” என்று கேட்க, அவன் “அது என் மனைவி என்றானாம். பாருங்கள்? அவள் உப்புத் தன்மை கொண்டவளாயிருந்தாள். அவன் அதை எந்நேரமும். கிரகித்துக் கொண்டே வந்தான்.மற்ற குடிகாரன், ”அவளுக்கு இறுக்கம் நேரிட்டால், நான் பந்தயம் கட்டுகிறேன், அவள் கிறிஸ்தவளாக இருக்க மாட்டாள்“ என்றானாம்.. . இவனோ, “இல்லை, அவள் அப்பொழுதும் கிறிஸ்தவளாயிருப்பாள்; அதை நான் நிரூபித்துக் காட்டுகிறேன். நாம் என்ன செய்யலாம் என்று சொல்லுகிறேன். நாம் வீட்டுக்குப் போவோம், அவள் கிறிஸ்தவளா இல்லையா என்பதைக் காண்பிக்கிறேன். நாம் வீட்டுக்குச் சென்று குடித்தவர்களைப் போல் நடிப்போம்” என்றானாம். அவன் வீட்டுக்கு சென்று கதவைத் தட்டினான். எல்லோருமே தள்ளாடிக் கொண்டு உள்ளே வந்தனர். அவன், “நீங்கள் ஏன் இப்படி சுற்றிலும் உட்காரக் கூடாது?” என்று விருந்தாளிகளைப் பார்த்துக் கேட்டு, அவர்களை மிகவும் அன்பாக வரவேற்றான். அவன், மனைவியிடம், “எங்களுக்கு இரவு உணவு சமைத்து தா. எங்களுக்கு பன்றி இறைச்சியும் (ham) முட்டைகளும் வேண்டும்” என்றான். வீட்டில் இவை உண்டு என்று அவன் அறிந்திருந்தான். எனவே அவள் பன்றி இறைச்சியும் முட்டைகளும் சமைத்துக் கொண்டு வந்தாள். அவன் மேசையின் அருகில் வந்து அவர்களைப் பார்த்து விட்டு, அவனுடைய தட்டை எடுத்து அதில் வைக்கப்பட்டிருந்த உணவை தரையில் ஓங்கியடித்து, “இந்த விதமாக முட்டைகளை சமைத்தால் எனக்குப் பிடிக்காது என்று உனக்குத் தெரியுமல்லவா? வாங்கள், இங்கிருந்து போவோம்” என்று தன் சகாக்களைப் பார்த்துசொன்னான். 67அவர்கள் வெளியே சென்று அங்கு உட்கார்ந்து கொண்டனர். அவள் வெளியே வந்து, “அன்பே, நான் வருந்துகிறேன். அதை நான் சரியாக சமைக்கவில்லை. நான் வேறு முட்டைகளை சமைத்து கொண்டு விடுகிறேன்” என்றாள். அவன், “ஓ, முட்டாள்தனம், அந்த விதமாக முட்டைகளை சமைப்பது எனக்கு பிடிக்காது என்று உனக்குத் தெரியுமே” என்று இவ்விதமாக அவளைத் திட்டிக் கொண்டேயிருந்தான். அவர்கள் அங்கு வெளியே உட்கார்ந்து கொண்டு குடித்தவர்களைப் போல் நடித்துக் கொண்டிருந்தனர். அவள் தன்னையே கண்டனம் செய்து கொண்டு, மிருதுவான குரலில், இயேசு சிலுவையை தனியே சுமந்து உலகிலுள்ள அனைவரும் சும்மாயிருக்க வேண்டுமா? ஒவ்வொருவருக்கும் ஒரு சிலுவையுண்டு எனக்கும் ஒரு சிலுவையுண்டு மரணம் என்னை விடுவிக்கும் வரைக்கும் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சிலுவையை சுமப்பேன் . என்று பாடிக் கொண்டிருந்தாளாம். ஒரு குடிகாரன் மற்றொரு குடிகாரனைப் பார்த்துக் கொண்டு, “அவள் உண்மையில் கிறிஸ்தவள், அவள் அதை பெற்றிருக்கிறாள்” என்றானாம். அந்த ஸ்திரீ அவளுடைய கணவனையும் அங்கிருந்த மற்ற அனைவரையும் கிறிஸ்துவினிடம் அன்றிரவு வழிநடத்தினாள். பார்த்தீர்களா? ஏன்? பாருங்கள்? உண்மையில் இனியவராயிருங்கள். இதை ஞாபகம் கொள்ளுங்கள், அதைக் குறித்து அவருக்கு எல்லாம் தெரியும். எனவே, சகோதரியே, அல்லது சகோதரனே, அது சகோதரன் தான். ஏனெனில் இங்கு தன் மனைவியைக் குறித்து அவர் கேட்டிருக்கிறார். நீங்கள் உப்புத்தன்மை கொண்டவராயிருங்கள். தாகமடைவதற்கு அங்கு ஏதாகிலும் இருக்குமானால் அவள் தாகமடைவாள். இல்லையென்றால், இதை ஞாபகம் கொள்ளுங்கள், உங்களுக்குத் தவறான நபர் இருந்தால், ஆயிர வருட அரசாட்சியின் போது சரியான ஒன்று கிடைக்கும். நீங்கள் தொடர்ந்து சென்று கொண்டேயிருங்கள். எல்லா தவறுகளும் அங்கு சரியாக்கப்படும். 68சகோ. பிரான்ஹாமே, மணவாட்டி எந்த சபைக்கும் செல்லக்கூடாது, நீர் அங்கு பிரசங்கம் பண்ணினாலொழிய, அல்லது இந்த கூடாரத்திற்கு மட்டும் வரலாம் என்று நீர் போதிக்கிறீரா? 69மேலும், வேலை செய்தல், மீன் பிடித்தல் போன்ற விஷயத்தில் நாம் ஞாயிற்றுக்கிழமையையும் விடுமுறைகளையும் ஆசரிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீர் போதிக்கிறாரா? (அது ஞாயிற்றுக்கிழமை என்பது போல் தான் காணப்படுகிறது. கீழ் பாகத்தில் - அது ஞாயிற்றுக்கிழமை. அது விடுமுறைகள் அல்லது ஞாயிற்றுக்கிழமைகள் என்று நினைக்கிறேன். ஆம், ஞாயிற்றுக் கிழமைகள், அப்படித்தானே அது காணப்படுகிறது? (சகோ. பிரான்ஹாம் யாரோ ஒருவரிம் பேசுகிறார் - ஆசி]. பரிசுத்த நாட்கள், ஞாயிற்றுக்கிழமையும், பரிசுத்த நாட்களும்). இல்லை, நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பாருங்கள்? அதை மறுபடியும் படித்து அதற்கு ஒவ்வொன்றாக பதிலளிக்க விரும்புகிறேன். “மணவாட்டி எந்த சபைக்கும் செல்லக் கூடாது. நீர் அங்கு பிரசங்கம் பண்ணினாலொழிய, அல்லது இந்த கூடாரத்திற்கு மட்டும் வரலாம் என்று நீர் போதிக்கிறீரா?” இல்லை! நான் அவ்விதம் போதிப்பதில்லை. அதை நான் நம்புவது கிடையாது. இங்கு ஊழி யக்காரர் அமர்ந்துள்ளனர், அவர்கள் நாடெங்கும் பரவியுள்ளனர், அவர்கள் அந்த மணவாட்டியின் பாகம் என்று நான் நம்புகிறேன். வார்த்தையை போதிக்கின்ற . அவர்களுக்கு விருப்பமான எந்த சபைக்கும் ஒரு மனிதனோ அல்லது ஒரு ஸ்திரீயோ செல்லலாம் என்பது என் கருத்து. அவர்கள் முழு வார்த்தையைப் போதிக்கின்ற, வேறெந்த சபைக்கும் உங்களால் போக முடியாமல் போனால், நீங்கள் முழு வார்த்தையைப் போதிக்கின்ற இடத்துக்கு செல்லும் வரைக்கும், பாதி வார்த்தையை அவர்கள் போதிக்கும் அந்த இடத்துக்குச் செல்லுங்கள். நீங்கள் என்ன செய்த போதிலும், சபைக்குச் செல்லுங்கள். அதைச் செய்யுங்கள். 70“மேலும் வேலை செய்தல், மீன் பிடித்தல் போன்ற விஷயத்தில் நாம் ஞாயிற்றுக்கிழமையை அனுசரிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீர் போதிக்கிறீரா?' நீங்கள் ஞாயிற்றுக்கிழமையில் சபைக்குப் போவதற்கு பதிலாக, மீன் பிடித்தல், வேட்டையாடுதல், வேலை செய்தல் போன்றவைகளை செய்தால், அது பாவம் என்பது என் கருத்து. நீங்கள் தேவனுடைய கட்டளைகளை மீறுகிறவர்களாய் இருப்பீர்கள். அப்படி ஒரு கட்டளை உள்ளதா? ஆம், ஐயா! பழைய ஏற்பாட்டில் ஒய்வு நாள் ஒரு முன்னடையாளமாக கொடுக்கப்பட்டுள்ளது. அது அனைத்தும்... நீங்கள் ஓய்வு நாளை ஆசரிக்க வேண்டும் என்பதற்காக இயேசு வரவில்லை. பழைய ஏற்பாட்டின் ஓய்வு நாள் சனிக்கிழமை, அது வாரத்தின் முடிவு. ' ஞாயிற்றுக்கிழமை எட்டாம் நாள். அல்லது வாரத்தின் முதலாம் நாள், அந்த நாளில் தான் இயேசு உயிரோடெழுந்தார். நான் நினைக்கவில்லை அது சரியென்று... நீங்கள் தொலைவில் காட்டில் எங்காவது வேட்டை பயணத்தை மேற்கொண்டு சென்றிருந்தால், அதை சுற்றிலும் சபை எதுவுமில்லை என்றால், உங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை என்றால்; அப்பொழுது நீங்கள் மீன் பிடித்தால், அதனால் பரவாயில்லை என்று எண்ணுகிறேன். ஆனால் நீங்கள் நகரில், அல்லது சபை நடந்து கொண்டிருக்கும் இடத்துக்கு அருகாமையில் இருந்தால், நீங்கள் எப்படியாவது எங்காவது சபைக்கு சென்றே ஆக வேண்டும்... வேலை செய்யும் விஷயத்தில், காளை குழியில் விழுந்து விட்டால், அல்லது ஏதாவதொன்றை ஞாயிற்றுக்கிழமையன்று செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், நீங்கள் அதைச் செய் யுங்கள், உங்களால் தவிர்க்க முடியாமல் அதை செய்ய வேண்டும் மென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால். ஆனால் ஒரு வேலையைச் செய்ய நீங்கள் ஞாயிறு வரை காத்திருப்பீர்களானால், அதை அவ்விதம் செய்வீர்களானால், நீங்கள் தவறு செய்கிறவர்களாயிருப்பீர்கள். பாருங்கள்? நாம் அவ்விதம் செய்யக் கூடாது, நாம் பரிசுத்த நாளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் 71இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், எங்காவது, எந்த இடத்திலாவது சபைக்குச் செல்லுங்கள்... நான் குறிப்பிட்ட ஒரு ஸ்தாபன சபையின் பெயரைக் கூற முடியும், ஆனால் அவ்விதம் நான் செய்ய மாட்டேன், ஏனெனில் இந்த சபை, அவர்கள் போதிப்பதாக நான் அறிந்துள்ள ஒரே ஒரு காரியம் என்னவெனில், அவர்கள் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பதாக அறிக்கையிடுகின்றனர். நல்லது, நானும் அதை செய்கிறேன். அவர்களுடைய மற்ற. போதகம் அனைத்தும்... தண்ணீர் பாவத்தைப் போக்குகிறது என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர். இப்பொழுது, அவர்கள் ஒருத்துவக்காரர் அல்ல. தண்ணீர் மறு ஜென்மம் அளிப்பதாக அவர்கள் விசுவாசிக்கின்றனர். நான் அவ்விதம் விசுவாசிப்பதில்லை. ஓ, அவர்கள், எங்காகிலும் தெய்வீக சுகமளித்தல் காணப்பட்டால், அது பிசாசினால் உண்டானது என்று விசுவாசிக்கின்றனர். அவர்கள் விசுவாசிப்பது அனைத்தும்.... அவர்களிடம் உள்ள ஒரே காரியம் என்னவெனில், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் அந்த புத்தகத்தில் உங்கள் பெயரைப் பதிவு செய்வதே. உங்கள் பெயர் அங்கு பதிவு செய்யப்படா விட்டால், நீங்கள் இழக்கப்படுவீர்கள் என்பது அவர்கள் கருத்து. இப்பொழுது, நான் அவ்விதம் விசுவாசிப்பதில்லை. ஆனால்உங்களுக்குப் போக வேறெந்த சபையும் இல்லாமல் போனால், (அவர்களைக் குறை கூற நான் அங்கு செல்லமாட்டேன்), ஆனால் நான் யார் பக்கத்திலாவது உட்கார்ந்திருக்கும்போது என் இருதயத்திலுள்ள கிறிஸ்து அங்குள்ள யாரிடத்திலாவது பாதிப்பை உண்டு பண்ணுவார் என்னும் அந்த நோக்கத்துடன் செல்வேன். அவர்கள் மத்தியில் செல்லுங்கள், ஆனால் அவர்கள் அவிசுவாசத்தில் பங்கு கொள்ளாதீர்கள். 72சகோ. பிரான்ஹாமே, நான் பரிசுத்த ஆவியைப் பெற விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்று நான் அறிய விரும்புகிறேன். என் குடும்பம் இரட்சிக்கப்பட வேண்டுமென்று நான் பாரப்பட்டிருக்கிறேன். நீ பரிசுத்த ஆவியைப் பெற விரும்பினால் உன்னிடம் ஒன்றை நான் கூறட்டும், அருமை சகோதரியே, நீ இங்கு இருப்பாயானால். நான்... சகோ. நெவில், இது இங்குள்ள சபையின் அங்கத்தினரா? (சகோ. பிரான்ஹாம் சகோ. நெவிலிடம் உரையாடுகிறார் - ஆசி). எனக்கும் கூட அவர்களை ஞாபகமில்லை. நீ இங்கு இருப்பாயானால், சகோதரி பெள, இதை நான் உன்னிடம் கூறட்டும். “நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்று வேதம் உரைக்கிறது. அதை நீ பெற்றுக் கொள்ள விரும்பும் காரணத்தினாலேயே நீ ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய். பார்? இப்பொழுது, ஞாபகம் கொள், நீ அதை பெற்றுக் கொண்டாய் என்று அர்த்தமல்ல, ஆனால் அதற்காக பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் (ஆங்கில வேதாகமத்தில் blessed அதாவது 'ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்“ என்று எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). ”அவர்கள் திருப்தியடைவார்கள்“. அதில் நிலைத்திரு. “என் குடும்பத்துக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” உனக்கு நீ உபயோகிக்கிற அதே விசுவாசத்தை உன் குடும்பத் துக்கும் உபயோகிப்பாயாக. அவர்களை கர்த்தரிடத்தில் ஒப்புவித்து அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று உன் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பாயாக. அது.. அது இங்குள்ள உன் மாம்சசிந்தையில் வருவதற்கு இடங்கொடாதே. அது உள்ளில் உள்ள உன் உள்ளுணர்வில் இறங்கட்டும், அப்பொழுது அவர்கள் உன்னுடையவர்களாகி விடுவார்கள். அதை நீ அங்கு இறங்க விட்டிருந்தால், தேவன் அவர்களை உனக்கு கொடுத்து விட்டார். இங்குள்ள உன் இருதயத்தில் நீ எதையாகிலும் கொண்டிருந்து, நீ ஜெபம் பண்ணும்போது அதை கேட்பாயானால், நீ கேட்டதை பெற்றுக் கொண்டாய் என்று விசுவாசிப்பாயாக. அதை நீ ஒருக்காலும் இனி சந்தேகிக்க முடியாது. நீ ஒரே நேரத்தில் அதை விசுவாசிக்கவும் சந்தேகிக்கவும் முடியாது. எத்தனை பேருக்கு அது தெரியும்? நீ கேட்டுக் கொண்டதை பெற்றுக் கொண்டாய் என்று விசுவாசிக்க வேண்டும், அப்பொழுது அது உனக்குக் கொடுக்கப்படும் என்று அவர் உரைத்திருக்கிறார். எனவே, உன் குடும்பத்துக்காக நீ விசுவாசிப்பாயாக அவர்கள் அதைப் பெற்றுக் கொள்வார்கள். 73சகோ. பிரான்ஹாமே, நீர் எக்காளங்களைக் குறித்து பிரசங்கிக்கப் போகாததனால், எங்கள் மகனைக் குறித்தென்ன? அவனையும் ஏழு எக்காளங்களையும் இணைத்து எனக்கு நீர். தொலைபேசியில் அளித்த வாக்குத்தத்தம் ஞாபகமுள்ளதா? எனக்கு ஞாபகமில்லை, அது என்னவென்று எனக்கு ஞாபகமில்லை. அது என்னவாயிருந்தாலும், அது என்னவென்று பில்லி பாலுக்குத் தெரியப்படுத்தவும். நான் என்ன வாக்களித்திருந்தாலும், அதை நான் செய்வேன். எனக்கு ஞாபகமில்லை. உங்களுக்குத் தெரியும், சில நேரங்களில் ஒரே இரவில் முப்பது அல்லது நாற்பது தொலைபேசி அழைப்புகள் எனக்கு வருகின்றன (பாருங்கள்?), நான் இங்கிருக்கும் போது இவ்வாறு ஒவ்வொரு இரவும் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டேயிருப்பதால், அது என்னவென்று ஞாபகம் இருப்பதில்லை - என் கத்தோலிக்க சகோதரியையும் சகோதரனையும் குறித்தென்ன? நன்றி? - 74ஓ. இந்த நபர் நகரத்துக்கு புறம்பே இருந்து வருகிறவள். தொலைவிலுள்ள டெக்ஸாஸிலிருந்து. நான் .... நல்லது. சகோதரியே, நீ டெக்ஸாஸை சேர்ந்தவளாயிருந்து, இந்த ஒலிநாடாவை நீ பெற நேர்ந்தால் (இதை பதிவு செய்த ஒலிநாடா இருக்காது என்று எண்ணுகிறேன்), ஆனால் அது இருக்கமானால்... (சகோ. பிரான்ஹாம் ஆராதனைகளை ஒலிநாடாவில் பதிவு செய்வதைக் குறித்து விசாரிக்கிறார் - ஆசி). அவர்கள் ஒலிநாடாவில் பதிவு செய்கின்றனரா? நீங்கள் பதிவு செய்கின்றீர்களா? சரி, நீங்கள்... இந்தஒலிநாடா... என்ன செய்ய வேண்டுமென்று நான் உன்னிடம் கூறுகிறேன். நீ... இந்த ஒலி நாடாவில் இதை நீ காணும்போது, “எங்கள் மகனையும் ஏழு எக்காளங்களையும் குறித்தென்ன?” என்பதை ஞாபகம் கொள். அதைக் குறித்து எனக்கு ஞாபகமில்லை, ஏழு எக்காளங்களைக் குறித்து பேசும் போது அவனை நான் காண்பேன் என்று வாக்களித்திருந்தாலொழிய. நான் அதன் பேரில் பிரசங்கித்தால், அவனைக் காண்பேன்; ஏனெனில் நான் ஏழு எக்காளங்களின் பேரில் பிரசங்கிக்கவில்லை, எக்காளப் பண்டிகை என்னும் பொருளின் பேரில் தான் பிரசங்கித்தேன். அதைக் குறித்து புரிந்து கொண்டாயா? “என் கத்தோலிக்க சகோதரியையும் சகோதரனையும் குறித்தென்ன? நன்றி.” நான் உன்னிடம் சொல்லுகிறேன், திருமதி கார்னில்ஸன்... அந்த ஸ்திரீ இங்கு இருப்பாளானால், இன்று காலையில் பில்லி பாலைப் பார். இல்லையென்றால், நல்லது, அது என்னவென்று எனக்குப் புரியவில்லை (பார்?); அது ஒரு கேள்வி. அது என்னவென்று என்னால் அறிந்து கொள்ள இயலவில்லை (பார்?), ஏனெனில் நான் அவளுடைய மகனைக் குறித்தும், எக்காளங்களைக் குறித்தும், அவளுடைய கத்தோலிக்க சகோதரியைக் குறித்தும் ஏதோ ஒன்றை வாக்களித்திருக்கிறேன். அது என் நினைவில் இப்பொழுது இல்லை. பில்லியைப் பார். இது... இது ஒரு ஜெப வேண்டுகோள். அது அந்த நபரின் பெயரைக் கூறிவிட்டு, “தலைவலியும் மண்டை சளியும்” என்று குறிப்பிடுகிறது. அது வெறும் ... அவர்களுக்காக ஜெபம் பண்ணும் படி கேட்கின்றனர் என்று எண்ணுகிறேன். சரி. 75விவாகமும் விவாகரத்தும் என்பதை தயவுகூர்ந்து விளக்கவும் (அதை நான் ஏற்கனவே விளக்கி விட்டேன். ஒரு தாளில் ஏழு கேள்விகள் - எட்டு கேள்விகள் உள்ளன). விவாகமம் விவாகரத்தும் என்பதை தயவுகூர்ந்து விளக்கவும். நான் விளக்கி விட்டேன். 76இப்பொழுது மோசேயும் எலியாவும் பூமியில் இருக்கின்றனரா? அவர்கள் அமெரிக்காவில் உள்ளனரா? இல்லை! பாருங்கள்? இல்லை, அவர்கள் இங்கில்லை. சபை எடுத்துக் கொள்ளப்படும் வரைக்கும் அவர்கள் இங்கிருக்கமாட்டார்கள், அப்பொழுது மோசேயும் எலியாவும்... அதை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்? சரி, நாம் பார்ப்போம். இதில் அவர்கள் எந்த பெயரையும் கையொப்பமிடவில்லை, எனவே... சரி. இந்த கேள்விகளை யார் கேட்டிருந்தாலும்... ஏழு கேள்விகள் உள்ளதென்று நினைக்கிறேன். நான் ஏழு எண்கள் இட்டிருக்கிறேன். 77“இயேசு” என்னும் நாமத்திற்கும் “இயேசுவின் நாமம்” என்பதற்கும் என்ன வித்தியாசம் என்பதை விளக்கவும். இவையிரண்டும், ஒரே நபரைக் குறிப்பிடுவதனால், இயேசு என்னும் நாமமும் “இயேசுவின் நாமமும்” ஒன்றேதான். அவர் இயேசு. இயேசுவின் நாமம் அந்த நபரைக் குறிப்பிடுகின்றது, இரண்டும் ஒன்றே.... நான் நினைக்கிறேன் அது... அது சரியென்று தோன்றுகிறதல்லவா? இயேசு என்னும் நாமம் அந்த நபரே. இயேசுவின் நாமம் நீங்கள் அந்த நபரைக் குறிப்பிடும் போது. பாருங்கள். உதாரணமாக என் பெயர் வில்லியம். அது தான் சரி. இப்பொழுது நீங்கள் கூறலாம்... நான் பேசிக் கொண்டிருக்கிறேன். வில்லியத்தின் நாமம் என்னும்போது, நீங்கள் என்னைக் குறிப்பிடுகின்றீர்கள். அது என் பெயர். பாருங்கள்? இப்பொழுது. 78வெவ்வேறு யுகங்களில் கர்த்தருடைய நாமம் மாறிப் போனதா? ஆம், ஆம்! அது ஒரு காலத்தில் - அவர் இருக்கிறேன் என்று அழைக்கப்பட்டார். அவர் யேகோவா என்று அழைக்கப்பட்டார். அது அநேக முறை மாறினது. அது மாறின் கடைசி முறை, தேவன் மாம்சமாகி மனித நாமத்தைக் கொண்டிருந்த போது. யேகோவா, இருக்கிறேன், இவையனைத்தும் ஒரு - நாமத்துக்கான பட்டப் பெயர்கள். பாருங்கள்? நீங்கள் யேகோவாவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருக்க வேண்டுமானால், அது இயேசுகிறிஸ்துவின் நாமமாக இருக்க வேண்டும். நீங்கள் யேகோவா - ராஃபா, யேகோவா - மனாசே,யேகோவாயீரே போன்ற நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருக்க வேண்டுமானால், அதுஇயேசு கிறிஸ்துவின் நாமமாக இருக்க வேண்டும். இருக்கிறேன் என்பவர் இயேசு கிறிஸ்துவே. ஞாபகம் கொள்ளுங்கள், அன்றொரு நாள் அவர் அங்கு நின்று கொண்டு, “நீங்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தீர்கள் என்று சொல்லுகிறீர்கள்...” என்றார். “எங்கள் பிதாக்கள் மன்னாவைப் புசித்தார்கள்.” “அவர்கள் மரித்தார்கள்” என்று கூறினார். அவர்கள், “நல்லது, நீ பைத்தியம் பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்து கொண்டோம். உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை, நீ ஆபிரகாமைக் கண்டதாக சொல்லுகிறாயே” என்றனர். அவர், “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” என்றார். (யோவான் 8:58). பாருங்கள்? அவர் இருக்கிறேன் என்பவராக இருந்தார். தேவனுக்கு சொந்தமாயிருந்த எல்லா பட்டப்பெயர்களும் நாமங்களும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் ஒரு மனித நாமமாக ஆனது. சரி. 79முத்திரைகள் திறக்கப்பட்ட போது காலம் முடிவுறுகிறது என்றால், அப்பொழுது... முத்திரைகள் திறக்கப்பட்ட போது காலம் முடிவுற்றது என்றால் (என்னை மன்னிக்கவும்), அப்பொழுது ஆயிரம் வருட அரசாட்சி காலமும் முடிந்திருக்க வேண்டுமே, இல்லையா? இல்லை, இல்லை! முத்திரைகள் திறக்கப்பட்ட போது, காலம் முடிவுறவில்லை. அதை தவறாகப் புரிந்து கொண்டீர்கள். அப்பொழுது என்ன நடந்ததென்றால், இரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டன, காலம் முடிவுறவில்லை. பாருங்கள்? இப்பொழுது உன்னிப்பாக கவனியுங்கள், நீங்கள் இதை ஒலிநாடாவிலிருந்து பெறுவீர்களானால், ஒலிநாடாவைப் போட்டுக் கேளுங்கள். 80காலம் முடியவில்லை... இந்த கேள்வியைக் கேட்டவர் ஆயிரம் வருட அரசாட்சி முடிவடைந்து விட்டது என்னும் நம்பிக்கை கொண்ட கூட்டத்தாரில் ஒருவராக இருக்க வேண்டும். ஏனெனில் பாருங்கள்? சபையானது வீடு சென்று பூமிக்குத் திரும்ப வந்த பிறகுநமக்கு ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் புதிய வானம் புதிய பூமியின் போது காலம் முடிவடைகின்றது. இப்பொழுது, ஆயிரம் வருட அரசாட்சியின் காலம் புதிய வானமும் புதிய பூமியும் அல்ல. ஆயிரம் வருட அரசாட்சிக்கு பிறகும் பாவம் இருக்கும். ஆயிரம் வருட அரசாட்சி, நோவா பேழைக்குள் பிரவேசித்து, தண்ணீருக்கு மேலே உயர்த்தப்பட்டு, மற்ற பக்கத்தில் காமையும் மற்றவர்களையும் கொண்டு வந்ததற்கு முன்னடையாளமுள்ளது. பாவமும் கூட பேழைக்கு வெளியே வந்தது. பாருங்கள்? - ஆனால் ஏனோக்கோ மேலே எடுத்துக் கொள்ளப்பட்டான், அவன் மேலே எடுத்துக் கொள்ளப்பட்ட மணவாட்டிக்கு முன்னடையாளமாயிருக்கிறான், மற்ற பக்கத்தில் கொண்டு வரப்பட்டவர்களுக்கு அல்ல. எனவே பாவம் ஆயிரம் வருட அரசாட்சியின் மறு பக்கத்திலும் இருக்கும், ஆனால் ஆயிரம் வருட அரசாட்சியின் போது அல்ல. பாருங்கள்? ஆயிரம் வருட அரசாட்சியின் போது சமாதானம் நிலவும். பாருங்கள்? ஆயிரம் வருட அரசாட்சியின் மறு பக்கத்தில் பாவம் ஒழிக்கப்படும், அதன்பிறகு காலம் என்பது மறைந்து விடும். இப்பொழுது, பரிசுத்த ஆவியால் அருளப்பட்ட ஏழு முத்திரைகள் திறக்கப்படுதல், நமக்கு முன்பிருந்த காலங்களில் விடப்பட்டிருந்தவைகளை நமக்கு தெரியப்படுத்துவதற்காகவே. 81இப்பொழுது, ஒரு பெரிய வேத பண்டிதர் அதன் பேரில் என்னை மடக்கப் பார்த்தார். அவர், “சகோ. பிரான்ஹாமே, என்றாகிலும் ஒரு நாள் தேவன் அந்த ஏழு முத்திரைகளில் அடங்கியுள்ள இரகசியத்தை உமக்கு வெளிப்படுத்துவார். அவை நாம் இதுவரைக்கும் அறிந்திராத ஒன்றாக இருக்கும், அது வேதத்திலும் கூட எழுதப்பட்டிராத ஒன்றாக இருக்கும்” என்றார். இல்லை, இல்லை! அது அப்படியிருக்காது. ஏனெனில் நீங்கள் அவ்விதம் செய்வீர்களானால், அது நம்மை. அவ்விதம் நான் உங்களிடம் கூறினால், நான் கள்ளத் தீர்க்கதரிசியாயிருப்பேன், ஏனெனில் (பாருங்கள்?), இந்த வார்த்தை ... அங்கு... எல்லாமே... இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு முழுவதும் இந்த வார்த்தையில் எழுதி முடிக்கப்பட்டுள்ளது. பாருங்கள்? ஏழு முத்திரைகள் ஏழு சபைகளைக் குறித்ததாயிருக்குமானால், அது ஏற்கனவே முடிந்து விட்ட ஒன்றாக இருக்க வேண்டும், ஏனெனில் நாம் லவோதிக்கேயாசபையின் காலத்தில் இருக்கிறோம். இந்த ஏழு முத்திரைகள் அவர்கள் முன் காலத்தில் கூறாமல் விட்டவைகளை வெளிப்படுத்து வதாயுள்ளன. அவர்கள் விட்டவைகளை அது திறந்து கொடுத்தது. லூத்தர் விட்டவைகளை, வெஸ்லி விட்டவைகளை, நமது காலம் வரைக்கும் இருந்து வந்த சீர்திருத்தக்காரர்கள், பெந்தெகொஸ்தேகாரர்கள் விட்டவைகளை. 82அடுத்தபடியாக நடக்கவிருப்பது. சபை எடுத்துக் கொள்ளப்படுதலும், மோசேயும் எலியாவும் திரும்ப வருதலும், மணவாட்டியும் மணவாளனும் பூமியில் ஆயிரம் வருட காலம் அரசாட்சி செய்தலும், அதன் பிறகு நியாயத் தீர்ப்பும், பிறகு பாவம் முழுவதுமாக அழிக்கப்படுதலும். அப்பொழுது காலம் என்பது இருக்காது. இப்பொழுது... முடிவடையவில்லை... முத்திரைகள் காலத்தை முடித்து விடவில்லை. ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பிறகு காலமும் காலங்களும். இல்லை! ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பிறகும் காலம் என்பது இருக்கும். 83ஆயிரம் வருட அரசாட்சி என்பது ஆயிரம் வருடங்களாக இருக்குமா? அது ஒரு சந்ததியின் காலமாக இருக்கக் கூடாதா? இல்லை! வேதத்தில் ஒரு சந்ததிக்கு நியமிக்கப்பட்ட காலம் நாற்பது ஆண்டுகளே. ஆனால் வேதமோ, “அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்” என்று உரைக்கிறது (வெளி.20:4). அது பூமியில் ஆயிரம் வருட காலமாக இருக்கும், ஏனெனில் பூமியில் நாம் கணக்கிடும் ஆயிரம். வருடம் தேவனுடைய கணக்கில் ஒரு நாள் மட்டுமே. பூமியில் ஆயிரம் வருடம் தேவனுக்கு ஒரே நாள், அவருடைய கணக்கின்படி. இதை எத்தனை பேர் புரிந்து கொண்டீர்கள்? எனவே அது ஓய்வு நாள், அப்பொழுது சபை பாவத்துக்கு எதிராக பாடுபடாது. சாத்தான் சிறிது காலத்திற்கு, ஆயிரம் வருடங்களுக்கு கட்டப்பட்டிருப்பான், ஏனெனில் அவனுடைய பிரஜைகள் அனைவரும் அப்பொழுது நரகத்தில் இருப்பார்கள், அவனுடைய ... பூமியிலுள்ள சபை மீட்கப்பட்டு கிறிஸ்துவின் சமூகத்தில் இருக்கும், எனவே அவனுக்கு கிரியை செய்ய ஒன்றும்இருக்காது. எனவே, நான் ஏற்கனவே கூறினபடி, அது ஒரு சங்கிலியாக இருக்காது, ஒரு நீண்ட சங்கிலியாக. அது சூழ்நிலை என்னும் சங்கிலி. அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அவன் உதவியற்றவனாகவும், நம்பிக்கையற்றவனாகவும், அவனுடைய பிரஜைகள் உயிரோடெழ காத்துக் கொண்டிருப்பான்; அப்பொழுது அவர்கள் செம்மறியாடுகளும் வெள்ளாடுகளுமாக பிரிக்கப்படுகின்றனர். 84கர்த்தருடைய நாமம் உண்மையில் சாலொமோன்தானா என்று சோதித்து தனக்குத் தானே அறிந்து கொள்வதற்காகத் தானே சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனிடம் வந்தாள்? இல்லை! தேவனுடைய நாமம் - சாலெமோன் தானா என்று அறிந்து கொள்வதற்காக அவள் சோதிக்கவில்லை. சாலொமோன் ஒரு ராஜா. அவள் அவனிடம் வந்து, “மெய்யாகவே தேவன் அவருடைய ராஜாவோடும் அவருடைய ஜனங்களோடும் இருக்கிறார்” என்றாள். பாருங்கள்? அவள் வந்து, சாலொமோனுக்கு இருந்த வரங்களை சோதித்தாள். அவளுடைய இருதயத்தில் மறைந்திருந்தவைகளை சாலொமோன் அவளுக்கு வெளிப்படுத்தினான். அது, அவன் பூமியில் தேவனுடைய ராஜாவாக இருந்தான் என்பதைக் காண்பித்தது. 85இதை ஞாபகம் கொள்ளுங்கள், நான் நினைக்கிறேன் அவள் வாழ்ந்த சேபா நாட்டில் ஜனங்கள் வந்து அங்கு நடக்கிற மகத்தான காரியங்களை அறிவித்திருப்பார்கள்; அவர்களுடைய ராஜாவை அபிஷேகம் செய்துள்ள தேவன் ஒருவர் அங்கிருக்கிறார் என்றும், எவ்வாறு அந்த ராஜா தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் சொல்லியிருப்பார்கள். சாலொமோனின் நாமம் - தேவனுடைய நாமம் சாலொமோன் என்று அவள் கருதின தாக நான் நினைக்கவில்லை; ஏனெனில் அது அவளை அஞ்ஞானியாக்கிவிடும். பாருங்கள்? ஒருக்கால் அவள் அவ்விதம் செய்திருக்க கூடும். அவளுடைய இருதயத்தில் அவள் தேவன் தான் சாலொமோன்— சாலொமோன் தான் தேவன் என்று எண்ணியிருக்கக்கூடும், ஏனெனில் அவள் ஒரு அஞ்ஞானியாயிருந்தாள். ஆனால் சாலொமோன் தனக்கிருந்த சிந்தனைகளைப் பகுத்தறியும் வரத்தினால் - அப்பொழுது அது ஞானம் என்றழைக்கப்பட்டது - அவளுடைய இருதயத்தில் இருந்த இரகசியங்களை வெளிப்படுத்தின போது, தேவன்சாலொமோனுடன் இருந்தார் என்பதை அவள் அறிந்து கொண்டாள். ஏனெனில் அப்பொழுது... அவர்களுக்கு.... அவள் கண்டு கொண்டாள். அவள் அந்த எண்ணத்துடன் வந்திருப்பாளானால்.... 86இங்கு இந்த கேள்வியைக் கேட்டவர், “உண்மையில் சாலொமோன் - உண்மையில் கர்த்தருடைய நாமம் சாலொமோன் என்பது அவளுக்குத் தெரியுமா?” என்று கேட்டிருக்கிறார். பாருங்கள்? சாலொமோன் கர்த்தர் அல்ல, அவள் அதை ஜனங்களிடமிருந்து அறிந்து கொண்டாள், ஏனெனில் அவர்கள் யேகோவாவை தொழுது கொண்டனர், அங்கு அந்த மகத்தான உடன்படிக்கை பெட்டி இருந்தது, அதற்குள் அந்த மகத்தான கற்பலகைகள், அந்த உடன்படிக்கை பெட்டிக்குள் கர்த்தருடைய கட்டளைகள் வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் சீனாய் மலையைக் குறித்தும், அவர்கள் சென்ற வெவ்வேறு இடங்களைக் குறித்தும், அவளிடம் கூறினார்கள். அப்பொழுது, அந்த கட்டளைகளை அளித்த தேவன் இந்த மனிதனுக்குள் இருந்தார் என்பதை அவள் அறிந்து கொண்டாள், ஏனெனில் தேவனுக்கு மட்டும் உரிய சிந்தனைகளைப் பகுத்தறிதல் இவனிடம் இருந்தது. பாருங்கள்? எனவே தேவன் சாலொமோனுக்குள் இருந்தார் என்பதை அவள் அறிந்து கொண்டாள். கேள்வி கேட்டவர் இந்தவிதமாகத்தான் கேட்டிருக்கக் கூடும். ஆனால், “கர்த்தருடைய நாமம் உண்மையில் சாலொமோன் என்பதை அவள் அறிந்திருந்தாளா?” என்றுதான் அவர் கேட்டிருக்கிறார். ஒருக்கால் அவர் தன் மனதில் இருந்தவிதமாகவே அதை எழுதவில்லை போலும். பாருங்கள்? எனவே நான் என்ன நினைக்கிறேன் என்றால், “கர்த்தர் சாலொமோனுக்குள் இருந்தார் என்பதை அவள் அறிந்திருந்தாளா?” என்று கேட்க வேண்டுமென்று அவர் நினைத்திருப்பார். ஆம், அவள் நிச்சயம் அறிந்திருந்தாள். அதுதான் கேள்வி என்றால், நிச்சயமாக! அவள் தேவனை அறிந்திருந்தாள், அவள் அதை குறிப்பிட்டாள், அவள் வேறெந்த தேவனையும் வழிபட மறுத்து விட்டாள். நான் நினைக்கிறேன், அவள் சொன்னாள் அவள் எப்பொழுதும்... அவள் ஏனென்று அறிந்து கொண்டாள். அவளுக்குள் மூச்சு இருக்கவில்லை; கேட்க அவளுக்கு வேறு கேள்விகள் எதுவும் இருக்க .. வில்லை. சாலொமோன் எல்லாவற்றையும் அவளுக்கு வெளிப்படுத்தினான், தேவன் அவனோடு கூட இருந்தார் என்பதை அவள் அறிந்து கொண்டாள். 87நாங்கள் இருபத்தொன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் பதிவு செய்யும் நீதிபதியால் விவாகம் செய்து வைக்கப்பட்டோம். அது தவறா? ஆம், அவ்விதம் நீங்கள் செய்தது தவறாகும். விவாகம் என்பது தேவனுடைய வீட்டுக்கு உரிய ஒன்று. ஆனால் உங்களுக்கு ஏற்கனவே விவாகமாகி விட்டதால், நீங்கள் எப்பொழுது உண்மையில் விவாகம் செய்து கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்வதாக ஒருவருக்கொருவர் வாக்களித்துக் கொள்ளும் போதே. திருமணம் பதிவு செய்யும் நீதிபதி உங்களுக்கு விவாக சான்றிதழ் கொடுத்து, விவாகமாகாமல் நீங்கள் கணவனும் மனைவியுமாக வாழ்வதற்கு பதிலாக, சட்டப் பூர்வமாக நீங்கள் கணவனும் மனைவியுமாக வாழும்படி செய்கிறார். ஆனால் நீங்கள் அந்த பெண்ணுக்கு வாக்களித்து, அவளும் உங்களுக்கு உண்மையாக வாழ்வதாகவும் உங்களை கணவனாக ஏற்றுக்கொள்வதாகவும் வாக்களிக்கும் அந்த நேரத்திலேயே உங்களுக்கு விவாகமாகி விடுகிறது. உங்களுக்கு ஞாபகமுள்ளதால், அதை நான் போன வாரம் விளக்கிக் காண்பித்தேன். அது போன வாரம் என்றுதான் நினைக்கிறேன். பாருங்கள்? வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டிலும் கூட, ஒரு மனிதன் விவாகம் செய்து கொள்ள ஒரு பெண்ணுக்கு நியமிக்கப்படும் போது (அதைக் குறித்த கட்டளைகள் உங்களுக்கு தெரியும். அதை மீறினால், அது விபச்சாரத்துக்கு சமானம்.நிச்சயமாக). அவன் வாக்களித்தால், அவ்வளவுதான். 88அன்றொரு நாள், “ஆன்னல்மண்ட்'டும் விவாகரத்தும் ஒன்றா?” என்னும் கேள்வி கேட்கப்பட்டது. பாருங்கள் நண்பனே, இவ்விதமான கேள்விகளை நீங்கள் என்னைக் கேட்கும் போது, அது எனக்கு என்ன செய்கிறது என்பதை நீங்கள் அறிவதில்லை. இரண்டு மூன்று முறை விவாகமான என் நண்பர்கள் பலர் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். நான் என் சொந்த மகன் பில்லி பாலையும் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் உணருகிறீர்களா? நான் பில்லி பாலை மட்டும் சும்மா விட்டு விடுவேனா? இல்லவே இல்லை. பில்லி பால் ஒரு பெண்ணை விவாகம் செய்து கொண்டான். அவன் என்னிடம் வந்து, “அப்பா, நான் விவாகம் செய்து கொள்ளப் போகிறேன்” என்றான். நான் என் காரைக் கழுவிக் கொண்டிருந்தேன். நான், “உன் தலையை சுவற்றில் மோதிக்கொள்” என்று சொல்லிவிட்டு, என் காரைக் கழுவிக் கொண்டேயிருந்தேன். “நான் விவாகம் செய்து கொள்ளப் போகிறேன்” என்றான். , நான்.. “ஓ, போடா” என்று சொல்லிவிட்டு வேலையில் ஈடுபட்டிருந்தேன். அவன் தன் தாயிடம் சென்றான், அவள் அவனைப் பார்த்து கேலியாக சிரித்தாள். அவன் என்ன செய்தான் தெரியுமா? பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறு பெண்ணுடன் அவன் ஓடிப் போய் விவாகம் செய்து கொண்டான். நாங்கள் அந்த விவாகத்தை 'ஆன்னல் செய்தோம் - அந்த பெண்ணின் தகப்பனும் நானும். நாங்கள் அந்த விவாகத்தை 'ஆன்னல்' செய்தோம், இருப்பினும் அவன் விவாகம் செய்து கொண்டதாகவே கருதப்பட வேண்டும். அவன் என் பையன், அவன் இங்கு உட்கார்ந்து கொண்டு நான் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். இப்பொழுது, அது முற்றிலும் உண்மை . அவன் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற அந்த பெண்ணுடன் என்னிடம் வந்து, என் மருமகள். என் பேரன்... அவன், “அப்பா, எனக்கு விவாகம் செய்து வையுங்கள்” என்றான். நான் “முடியவே முடியாது” என்று சொல்லிவிட்டேன். அது என் சொந்த மகன். அவனை நான் தூக்கி சுமந்து, என்னால் முடிந்த எல்லாவற்றையும் அவனுக்குச் செய்து, அவனுக்கு நான் தாயும் தகப்பனுமாய் இருந்து வந்திருக்கையில், இது என் இருதயத்தை ஊடுருவிக் குத்தவில்லை என்றா நினைக்கிறீர்கள்? அதை கூறுவது என்னைக் கொல்லவில்லை என்றா நினைக்கிறீர்கள்? ஆனால் அது உண்மை. நிச்சயமாக! என மகன் இங்கு உட்கார்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறான். என் மருமகளும் என் சிறு பேரனும் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். அது தவறென்று நான் அவனிடம் கூறுகிறேன் (பாருங்கள்?), ஏனெனில் நான் கூறியாக வேண்டும். அந்த வார்த்தைக்கு நான் கடமைபட்டவனாயிருக்கிறேன். 89நீங்கள் திருமணம் பதிவு செய்யும் மாஜிஸ்ட்ரேட்டினால் விவாகம் செய்து வைக்கப்பட்டீர்களா? சபை உங்களை விவாகம் செய்து வைத்திருக்க வேண்டும் - சபையிலுள்ள போதகர். அதுவேஒரு கிறிஸ்தவன் செய்யக் கூடிய நாணயமான காரியம். ஆனால் நீங்கள் ஏற்கனவே அந்த வாக்குத்தத்தத்தை, அந்த பொருத்தனையை செய்து கொண்டு, இருபத்தொன்று ஆண்டுகளுக்கு முன்பு விவாகம் செய்து கொண்டதால், அதனால் பரவாயில்லை என்று நினைக்கிறேன். நீங்கள், “நல்லது. நான்...' எனலாம். ஒருக்கால், “நான் வந்து, மீண்டும் விவாகம் செய்து கொள்ள வேண்டுமா?” என்னும் கேள்வி எழலாம். உங்களுக்குப் பிரியமானால் செய்யுங்கள். உங்கள் விசுவாசத்துக்கு இடையூறாக இருக்கும் எதையும் மனதில் வைக்காதீர்கள். ஏனெனில் அப்படிப்பட்ட ஏதாகிலும் இருந்தால், நீங்கள் இங்கிருந்து முன்னேற முடியாது; நீங்கள் இங்கேயே நின்றுவிடுவீர்கள். அந்த கேள்விக்குறி வரும்போது, இந்த இடத்திலேயே நீங்கள் முடிந்து விடுவீர்கள். ஆனால் இப்பொழுது, என்னைப் பொறுத்தவரையில், அதனால் பரவாயில்லை. 90ஆனால் இதை ஞாபகம் கொள்ளுங்கள், இது என்னை நோகப் பண்ணுகிறது. நான் கேட்டால் அவர்கள் கண்ணையும் பிடுங்கி எனக்குத் தரக்கூடிய மிகவும் நெருங்கிய நண்பர்கள் - ஆண்களும் பெண்களும் - இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர் (ஆம், ஐயா!), அவர்கள் இருமுறை விவாகமானவர்கள், சிலர் மூன்று முறையும் கூட. அவர்கள் இப்பொழுது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். நான் நேசிக்கின்ற என் சொந்த மகன், என் சொந்த பேரன், மற்றும் என் மருமகள்..... பில்லியைப் பாருங்கள், அவனை நான் எவ்வளவாக ஆதரித்தேன், அவன் எனக்கு என்ன செய்தான் பாருங்கள். உண்மையைச் சொன்னாலும் சொல்லாமல் போனாலும், உண்மை உண்மைதான். எனக்கு... இன்று நான் வெளியே சென்று, அசெம்பிளீஸ் ஆப் காட் சபை அல்லது வேறு சபையிலுள்ள ஜனங்களை அழைத்து, “நான் சொன்னதெல்லாம் தவறு, அந்த வார்த்தையுடன் நான் நிலைத்திருக்கப் போவதில்லை, நான் உங்களுடன் நிலைத்திருக்கப் போகிறேன்” என்று என்னால் கூற முடியும். அவ்விதம் நான் செய்தால், எனக்குள்ள இந்த தேவனுடைய வரத்தைக் கொண்டு நான் வெகு விரையில் மிகவும் பிரபலமான ஒருவனாகி விட முடியும். எனக்குள்ள செல்வாக்கு அனைத்தையும் இந்த ஸ்தாபனங்களில்ஒன்றுக்கு அளித்தால், அவர்கள் மத்தியில் எனக்கு பெரிய பெயர் கிடைக்கும். அவர்கள் மத்தியில் எனக்கு பெரிய பெயர் கிடைக்க வேண்டுமென்ற கவலை எனக்கில்லை. அவர்களை நான் நேசிக்கிறேன், அது உண்மை. ஆனால் நான் உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும். அவ்விதம் நான் செய்தால், நான் ஒரு மாயமாலக்காரனாக இருப்பேன். 91இங்கு நான் நின்று கொண்டு, ஒரு பெண்ணுக்கு வாக்களித்த என் சொந்த மகன் இங்கு உட்கார்ந்திருக்கையில், நான்:உண்மையைக் கூறாமல் போனால். ஒரு மாய்மாலக்காரனாயிருப்பேன். நான் சொன்னேன். அவனுக்கு அந்த திருமண வைபவம் நடந்திராமல் போனாலும், அவன் அந்த ஸ்திரீயுடன் வாழ்ந்து, அவளுடன் உறங்கி, அவன் என்ன செய்திருந்தாலும், அவன் அவளுக்கு வாக்களித்த போது அவளை மணந்து கொண்டான் - அது பில்லி பாலாயிருந்தாலும் வேறு யாராயிருந்தாலும், அது முற்றிலும் உண்மை. அவன் வாக்களித்த போதே அவன் மணந்து கொண்டான். அது நானாயிருந்தாலும், அதுவேதான். நாம் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும். நான் என் மகனுடன் உண்மையுள்ளவனாயிராமல் போனால், உங்களுடன் உண்மையுள்ளவனாயிருக்க முடியாது. நான் உங்களிடம் கூறுவது என் உண்மையுள்ள கருத்து என்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதிலிருந்து எதையும் உண்டாக்கி விடாதீர்கள், நான் சொன்னவிதமாகவே அதை சொல்லுங்கள் (பாருங்கள்?), ஏனெனில் நான் உங்களுக்கு உண்மையையே உரைக்கிறேன். 92இப்பொழுது, நான் உங்களிடம் இவ்விதமாக அடிக்கடி பேசுவதில்லை, ஏனெனில் நீங்கள் என் பிள்ளைகள், அவ்விதமே உங்களை நான் அழைக்கிறேன். நான் சுவிசேஷத்தின் மூலம் உங்களை கிறிஸ்துவுக்கு பெற்றெடுத்தேன். நாம் இங்கு ஒன்றாய் இருக்கும் போது, நம்முடைய சொந்த குழு இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, உங்களை சிறிது கடிந்து கொள்கிறேன். ஆனால் இதை உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் என்னிடம் வந்து ஏதாவதொன்றை கேட்பீர்களானால், எனக்குத் தெரிந்ததை உங்களுக்குச் சிறந்த முறையில் எடுத்துரைப்பேன். அது வார்த்தையில் இருக்குமானால், அது என்னைக் குற்றப்படுத்தினாலும்எனக்குக் கவலையில்லை, என்னிடமிருந்தும் அநேக காரியங்கள் அகற்றப்பட வேண்டியதாயுள்ளது. நிச்சயமாக! நீங்கள் என்னிடம் ஏதாவதொன்றைக் கேட்டால், நான் உங்களுக்கு பதில் கூறுவேன். உங்களுக்கு நான் ஏதாவதொன்றைக் கூறினால், உங்களுக்கு நான் சத்தியத்தையே கூறுவேன். அவ்விதமாகவே வாழ நான் எப்பொழுதும் முயன்று வந்திருக்கிறேன். அவ்விதமாவே நான் வாழ்ந்து அவ்விதமாகவே நான் மரிக்க விரும்புகிறேன் - எவரிடத்திலும் உண்மையுள்ளவனாயிருக்க. 93அண்மையில் ஒரு இளம் பெண் என்னிடம் வந்தாள்; அந்த ஸ்திரீ இப்பொழுது இங்கில்லை. டாம் சிம்ப்ஸன், உங்களில் பலருக்கு அவரைத் தெரியும். டாம் நல்லவர்; அவருடைய குடும்பத்தினர் இங்கில்லை (அவர்கள் எல்லோரும் திரும்பி போய் விட்டனர் என்று நினைக்கிறேன், ஃபிரட் இன்னும் இங்கு இருந்தாலொழிய . நான் .... பிரட் சாத்மன், அவர் இங்கிருக்கிறாரா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. அவா இருக்கிறார் என்று தான் நினைக்கிறேன்) டாம் சிம்ப்ஸன், அவர் ஃபிரட்டுடன் கூட கனடாவிலிருந்து வந்தவர். அவர்கள்... (உங்களுக்கு நமது தர்மகர்த்தா ஃபிரட்டைத் தெரியும்). உங்களில் பலருக்கு சகோ.டாம்மைத் தெரியும். டாம்“ அருமையான ஒரு மனிதன்; அவர் சிறந்த உடை உடுப்பவர்; திருமதி சிம்பஸனும் கூட. அவள் மட்டும் நான் சொல்வதற்கு செவிகொடுத்தால், அவள் மீண்டும் நடப்பாள். அவள் ஊனமுற்றவளாய் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டதை அவள் மட்டும் செய்வாளானால், அவள் நடப்பாள். அது உண்மையா என்பதை கவனித்து அறிந்து கொள்ளுங்கள் . பாருங்கள்? இப்பொழுது அவள் அதை எதிர்பார்த்தால், அவள் என்ன செய்ய வேண்டுமென்று கூறப்பட்டதோ, அவள் அதை செய்ய வேண்டும். 94அவளுடைய பெண்களில் ஒருத்தி, அழகான சிறு பெண்கள்... நான்.... அவர்கள் சிறுமிகளாயிருந்த போது, அவர்களை என் தொடையின் மேல் வைத்து அவர்களுடன் விளையாடுவது வழக்கம். இப்பொழுது அவர்கள் பெரியவர்களாகிவிட்டனர்; அவர்கள் ஏறக்குறைய ஸ்திரீகள், பத்து பன்னிரண்டு வயதுடையவர்கள். எனவே அவர்களில் ஒருத்தி என்னிடம் வந்து, “சகோ. பிரான்ஹாமே, நான் ஒரு சொப்பனம் கண்டேன்“ என்றாள். அவள் என்னிடம் அந்த சொப்பனத்தை உரைத்தாள். ”அதன் அர்த்தம் என்ன?“ என்று அவள் கேட்டாள். நான், “தேனே, எனக்குத் தெரியாது. நான் ஜெபிக்கிறேன், கர்த்தர் எனக்கு அதை அருளுவாரானால், நான் உன்னிடம் கூறுகிறேன்” என்றேன். அவள், “சரி” என்றாள். சில நாட்களுக்குப் பிறகு அவள் என்னிடம் வந்து, “அந்த சொப்பனம் கிடைத்து விட்டதா?” என்று கேட்டாள். நான், “இல்லை, தேனே, எனக்குக் கிடைக்கவில்லை; அவர் எனக்கு வெளிப்படுத்தி தரவில்லை என்றேன். ஓரிரண்டு வாரம் கழித்து அவள் திரும்பவும் வந்து, “சகோ.பிரான்ஹாமே, அந்த சொப்பனத்தைக் குறித்தென்ன?” என்று வினவினாள். நான், “எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அவள் ஏமாற்றமடைந்தது போல் காணப்பட்டாள். நான் ... 95இதை ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் என்னிடம் ஏதாவதொன்றைக் கேட்டு, அதை நான் தேவனிடத்திலிருந்து பெறவில்லை என்றால், எனக்கும் கூட ஏமாற்றம் உண்டாகிறது. ஆனால் நான் மாய்மாலக்காரனாக அல்லது பொய்யனாக இருக்க மாட்டேன், உங்களிடம் நான் உண்மையே எடுத்துரைப்பேன். அவர் என்னிடம் கூறுவாரானால், அதை நான் உங்களுக்கு எடுத்துரைப்பேன்; அவர் கூறாமல் போனால், நானும் கூறமாட்டேன். அவ்வளவுதான் என்னால் செய்ய முடியும். அவ்விதமாக நீங்கள் என்னை நம்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அந்த சொப்பனத்தின் அர்த்தம் என்னவென்று என் மனதில் அறிந்திருந்தேன். ஆனால் அது சரியென்று எனக்கு எப்படித் தெரியும்? அதை நான் மறுபடியும் காண வேண்டும். கர்த்தருடைய நாமத்தில் நான் சொப்பனத்துக்கு அர்த்தம் உரைத்து, அது அவ்விதமாக இருக்கவில்லை என்று எப்பொழுதாவது எந்த ஒரு இடத்திலுள்ள யாருமே தன் விரலைச் சுட்டிக் காட்டி என்னைக் குற்றப்படுத்த முடியாது. ஆம், ஐயா! நான் கர்த்தருடைய நாமத்தில் உரைத்தஏதொன்றும் அதேவிதமாக நிறைவேறாமல் போனதில்லை. ஏனெனில் நான் - அது அவர். அப்பொழுது அது என் பொறுப்பல்ல, அது அவருடைய பொறுப்பாகி விடுகிறது. - 96நான், “பார். ட்ரூடி, நாம் அரிசோனாவுக் குப்போகிறோம் என்று வைத்துக்கொள்வோம், நீ அங்கு அடைந்த பிறகு நான் உன்னிடம் வந்து, ”கர்த்தர் உரைக்கிறதாவது; உன் தம்பி (சிறு ஜானி, அவனுடைய வயிறு எப்பொழுதும் திறந்திருக்கிறது என்று நான் கேலி செய்வது வழக்கம்)... நான் அவளிடம், “அவன் தெருவில் வாகனம் ஏறி மரித்துப் போனான் என்று வைத்துக் கொள்வோம். நான் உன்னிடம் என்ன நடக்கப்போகிறதென்று உனக்குத் தெரியும், அவன் தெருவில் வாகனம் ஏறி மரித்துப் போவான்' என்கிறேன். நீ என்னிடம் வந்து, ”சகோ. பிரான்ஹாமே...' என்பாய். அல்லது அவனை சகோ. பிரான்ஹாமிடம் கொண்டு செல்லுங்கள்' என்பாய். அதன் பிறகு நீ என்னைத் தேடிக் கொண்டு வந்து, அப்பொழுது நான் வெள்ளை சூட் அணிந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனுடன் படிக்கட்டில் நின்று பேசிக்கொண்டிருப்பேன். நான் ஜானியின் மேல் கை வைப்பேன். அவன் உயிர் பெற்று ஓடிப்போவான்“ என்று சொன்னேன். நான் அவளிடம், ”அதே விதமாக நீ மேற்கு பிரதேசத்துக்கு செல்கிறாய், முதலாவதாக என்ன தெரியுமா, ஒரு நாள் உன் தாயார் கதறுவதையும், உன் தந்தை கதறுவதையும் நீ கேட்கிறாய். நீ பார்த்த போது, ஜானி வாகனம் ஏறி மரித்துப் போயிருப்பதைக் காண்கிறாய். நீ என்ன செய்வாய்?' என்று கேட்டேன். பாருங்கள்? நீங்கள் என்னை நம்புகிறீர்கள். பாருங்கள்? உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நான் எதையும் ஊகித்து உங்களிடம் கூறப் போவதில்லை. உங்களிடம் நான் உண்மையைக் கூறுவேன், இல்லையென்றால் ஒன்றையும் கூற மாட்டேன். நான் அவளிடம், “அதன் பிறகு நீ என்னிடம் வந்து, 'ஓ, சிறு ஜானி' - அல்லது நீ உன் தாயிடம் வந்து, 'ஓ, சிறு ஜானி வண்டி ஏறி கொல்லப்பட்டான். அவன் மரித்துப் போனான், அவன் மரித்துப் போனான்' என்று கூறுகிறாய் என்று வைத்துக் கொள்வோம். 97டாக்டர் வருகிறார், அவனுடைய கண்களை திறந்து பார்க்கிறார், அவனுடைய இருதயத்தை, அவனுடைய மூச்சை பரிசோதிக்கிறார். அவர், “அவன் இறந்துவிட்டான், அவனை சவக் கிடங்குக்கு கொண்டு செல்லுங்கள்' என்கிறார், அப்பொழுது நீ , ”ஒரு நிமிடம் பொறுங்கள்! ஒரு நிமிடம் பொறுங்கள்! அவனை என் கரங்களில் ஏந்திக் கொள்கிறேன்; நாம் நடப்போம்“ என்கிறாய். ஆமென் “ட்ரூடி, நீ எங்கே போகிறாய்?” “எனக்குத் தெரியாது” “உன் கரங்களில் என்ன?” இறந்து போன உன் தம்பியை நீ கரங்களில் ஏந்திக் கொண்டிருக்கிறாய். நீ தெருவில் நடந்து சென்று கொண்டேயிருக்கிறாய். ஜனங்கள் “அந்தப் பெண்ணுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?” என்று கேட்கின்றனர். இல்லை, ஐயா! அவள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கொண்டிருக்கிறாள். என்ன நடக்கப் போகிறது? முதலாவதாக என்ன தெரியுமா? நீ உன் தகப்பனிடமும் தாயினிடமும், “பொறுங்கள், நாம் சகோ.பிரான்ஹாமைக் கண்டு பிடிப்போம். அவர் வெள்ளை சூட் அணிந்துள்ள ஒரு மனிதனுடன் படிக்கட்டுகளில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பார். அதோ அவர் அங்கு நின்று கொண்டிருக்கிறார். என்ன நடக்கிறதென்று பாருங்கள்” என்பாய். உன் மனதில் எவ்வித சந்தேகமுமில்லை. நீ என்னிடம் நடந்து வந்து, “சகோ.பிரான்ஹாமே, நீங்கள் என்னிடம் என்ன கூறினீர்கள் என்று ஞாபகம் உள்ளதா?” என்பாய். “ஆம், ட்ரூடி, ஜானி எழுந்திரு” அவன்குதித்தெழுந்து தெருவில் ஓடிப் போவான். 98நான் என் மனதில் சரியென்று படும் சில காரியங்களை ஊகித்து உங்களிடம் கர்த்தர் உரைக்கிறதாவது என்று சொல்லி விட்டு, அது தவறாயிருந்து, அது நடக்காமல் போனால், அது நிறைவேறாமல் போனால், அந்த பையனைக் குறித்து நீ பயம் கொண்டிருப்பாய். அவனைக் கொண்டு வர வேண்டுமா வேண்டாமா என்று உனக்குத் தெரியாது. உங்களுக்கு உதவி செய்ய தேவன் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார். அது உங்களை வெட்டினாலும், நோகப் பண்ணினாலும், என்ன செய்தாலும், அதை நான் கூறியே ஆக வேண்டும். 99இப்பொழுது விவாகமும் விவாகரத்தும் என்னும் விஷயத்தில், நான் அதைக் குறித்து பேசுவதை நீங்கள் கேட்கும் வரைக்கும் அமைதியாயிருங்கள் என்று ஒரு சகோதரனைப் போல உங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் சொல்வது உங்களுக்குக் கேட்கிறதா? நீங்கள் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற விதமாகவே வாழ்ந்து கொண்டிருங்கள் (நான் இதன் பேரில் அதிக நேரம் எடுத்துக் கொண்டு விட்டேன்). “நாங்கள் இருபத்தொன்று ஆண்டுகளுக்கு முன்பு விவாகம் செய்து கொண்டோம் (ஆம்) - திருமணம் பதிவு செய்யும் நீதிபதியால்” அருமை சகோதரியே, அருமை சகோதரனே, ஒரு முறை விற்பனையாளன் (Salesman) ஒருவர் என்னிம் இதைக் கூறினார், அவர் கனெக்டிகட் என்னுமிடத்தில் அல்லது அங்கிருந்த ஏதோ ஓரிடத்தில் ஒரு ஆலயத்துக்குள் நுழைந்தாராம் (அவர் ஒரு கிறிஸ்தவர்). அது ஒரு பெரிய ஆலயம், அவர் ஜெபிப்பதற்காக உள்ளே நுழைந்தார். அவர் உள்ளே நுழைந்து, ஜெபம் பண்ணுவதற்காக அந்த ஆலயத்தில் முழங்கால்படியிட்ட போது... அவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தார், அவர்களைப்புற்றிருந்தார் வீட்டைக் குறித்த ஞாபகம் வேறு அவருக்கு வந்து விட்டது. அவர் ஒரு விற்பனையாளர். அவர் தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து கொண்டே செல்பவர். அவர் ஏதோ ஒன்றை வாங்குவதற்காக அந்தப் பக்கம் சென்றிருந்த போது, இந்த ஆலயத்தைக் கண்டாராம். “நான் போவேன். நான் உள்ளே போய் ஜெபம் பண்ணுவேன்” என்று மனதில் நினைத்துக் கொண்டாராம். ஆலயத்தின் கதவுகள் திறந்திருந்தன, அவர் உள்ளே சென்றாராம். அங்கு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை, அவர் முழங்கால்படியிட்டு ஜெபம் பண்ணத் தொடங்கினார். அவர் ஏறக்குறைய ஒரு மணி நேரமாக அங்கு ஜெபித்துக்கொண்டிருந்த பிறகு, கதவுகள் படாரென்று அடைக்கப்படும் சத்தத்தை அவர் கேட்டாராம். அது ஒருவேளை ஆலயக் காப்போனாக இருக்குமென்று எண்ணினாராம். சிறிது நேரம் கழித்து யாரோ பேசுவதை அவர் கேட்டார். அவர் மெல்ல நழுவி, அது ஆலயக் காப்போனா என்று கண்டுகொள்ள, சுற்று முற்றும் பார்த்தாராம். அங்கு ஒரு மனிதனும் ஒரு ஸ்திரீயும் பீடத்துக்கு முன்பாக நின்று கொண்டு ஒருவர் கையை ஒருவர்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த மனிதன் அந்த ஸ்திரீயிடம், “அன்பே, உன்னை நான் சட்டப்படி விவாகமான என் மனைவியாக ஏற்றுக் கொள்ளுகிறேன்” என்றாராம்.அவளும், “அன்பே, உம்மை நான் சட்டப்படி விவாகமான என் .கணவனாக ஏற்றுக் கொள்கிறேன்” என்றாளாம். “இது என்ன விசித்திரமாயுள்ளதே, இந்த மனிதனும் ஸ்திரீயும் போதகர் இல்லாமலேயே விவாகம் செய்து கொள்கின்றனரே” என்று இந்த பெந்தெகொஸ்தேகாரன் நினைத்தாராம். பாருங்கள்? எனவே அவர் உட்கார்ந்து கொண்டு, அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாக வாழ்வார்கள் என்றும், மரணம் தவிர வேறொன்றும் அவர்களைப் பிரிக்காதென்றும் அவர்கள் பொருத்தனை செய்து முடிக்கும் வரைக்கும் காத்திருந்தாராம். அதன் பிறகு அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கை போட்டு, ஒருவரை யொருவர் முத்தமிட்டு, சிரித்துக் கொண்டே ஆலயத்தை விட்டு வெளி நடந்தனராம். அவர் அவர்கள் பின்னால் ஓடிச் சென்று “ஒரு நிமிடம், இது என்னவென்று அறிந்து கொள்ள எனக்கு ஆர்வம் தோன்று கிறது. நீங்கள் இருவரும் விவாகமா செய்து கொண்டீர்கள்?” என்று கேட்டாராம். அவர்கள் “ஆம்” என்றனராம். “போதகர் இல்லாமலா?” அதற்கு அந்த மனிதன், “இல்லை! எங்களுக்கு விவாகமாகி நாற்பது ஆண்டுகளாகி விட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே பீடத்துக்கு முன்பாக நாங்கள் விவாகம் செய்து கொண்டோம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் விவாகத்தினத்தன்று நாங்கள் இங்கு வந்து எங்கள் விவாகப் பொருத்தனைகளை புதுப்பித்துக் கொள்கிறோம்” என்றாராம். பாருங்கள். ஆனால் விவாகம் செய்து கொள்ளுதலைப் பொறுத்த வரையில், நீங்கள் அவளுக்கு வாக்களிக்கும் போதே, அவள் உங்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்கிறாள்; நீங்களும் அவள் வார்த்தையை ஏற்றுக் கொள்கிறீர்கள். தேவன் உங்கள் இருவருடைய வார்த்தையையுமே ஏற்றுக்கொள்கிறார் பாருங்கள்? எனவே நீங்கள் வெறுமனே வாக்கு கொடுக்காதீர்கள்... (ஒலிநாடாவின் முதல் பக்கம் முடிகின்றது - ஆசி). 100அவர்கள் அதைக் கத்தரிக்கும் போது.. முன் பாகத்தில் தலை மயிரைக் கத்தரித்தால், அது நீண்ட தலைமயிராகக் கருதப்படுமா? (இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள், இதை நான் புரிந்து கொள்ளட்டும்) அவர்கள்... அது நீண்ட தலைமயிராக நல்லது, ஒருக்கால் அவர்கள், “அவர்கள் தலைமயிரை முன்பாகத்தில் கத்தரிக்கும் போது, அது அப்பொழுதும் நீண்ட தலைமயிராக கணக்கிடப்படுமா?” என்னும் அர்த்தத்தில் கேட்டிருக்கக் கூடும். அது ஒருபோதும் இனி நீண்ட தலைமயிராக கணக்கிடப் படாது, ஏனெனில் அவர்கள் அதை கத்தரித்து விட்டார்கள். பாருங்கள்? ஆனாலும் ஒரு மனிதன் தன் நீண்ட கால் சட்டையை மூன்று முறை வெட்டி அப்பொழுதும் அது மிகவும் குட்டையானதாக இருந்தது போல. என்ன சொல்கிறீர்கள்? என்ன சொல்கிறீர்கள்? (சகோ.பிரான்ஹாம் கூடியிருந்தவர்களில் யாரோ ஒருவரிடம் உரையாடுகிறார் - ஆசி). ஓ, அதைக் குறித்து தான் அவர்கள் கேட்டிருக்கிறார்களா? என் மகளை நான் கேலி செய்வதுண்டு. அவைகளை நான் “பூம்ஸ்” என்று அழைப்பதுண்டு, “பாங்ஸ்”, அது என்ன பெயரானாலும், இப்படி முன்பாகத்தில் கத்தரித்து விடுதல், அது உங்களுக்குத் தெரியும். நல்லது, நான் நினைக்கிறேன், முன் பாகத்தில் தலை மயிரைக் கத்தரித்துக் கெண்டிருக்கும் சிறு பெண்கள்... ஒருக்கால் உங்கள் தாயார் அதைக் குறித்து உங்களிடம் கூறக் கூடும் (பாருங்கள்), நீங்கள் அவ்விதம் கத்தரித்துக் கொள்ள வேண்டும் மென்று அவள் விரும்பினால். நான் நினைக்கிறேன், இருபத்தைந்து வயது பெண் முன் பாகத்தில் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, சிறு பெண்ணைப் போல் காணப்பட விரும்பினால், அவள் காரின் கண்ணாடி வழியாக ஏற்கனவே கடந்து வந்ததை பின் நோக்க முற்படுகிறாள். சகோதரியே, நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய் என்பதை பார், நீ ஏற்கனவே கடந்து வந்ததை அல்ல. பார்? 101இப்பொழுது, தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளும் விஷயத்தில் இதை உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் இவ்வளவுதான் கத்தரித்துக் கொள்ள வேண்டும், இதற்கு மேல் அல்ல என்பதை ஆதரிக்கும் எந்த வேத வசனமும் எனக்கு இல்லை. அதற்கு என்னிடம் எந்த வேத வசனமும் கிடையாது. சகோதரியே, சகோதரனே, யார் இந்த கேள்வியைக் கேட்டிருந்தாலும், என்னால் உங்களிடம் கூற இயலாது. ஆனால் ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன். நான் விரும்புவது என்னவெனில்.... என் மகள்கள் ரெபேக்காவும் - சாராவும் கூட சிறு பிள்ளைகளாயிருந்த போது அவ்விதம் கத்தரித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் முன் பாகத்தில் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, பின்பாகத்தில் தலைமயிரைப் பின்னியிடுவதை நான் கண்டிருக்கிறேன், முன்பாகத்தில் தலைமயிரை இவ்விதம் வாரி விட்டுக் கொள்வார்கள். இப்பொழுது, அவர்களின் சார்பாக நான் பேச வரவில்லை. பாருங்கள்? இல்லை, ஐயா! என்னைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்கள் தலைமயிரில் கத்தரிக்கோலை வைக்காமல் இருந்திருந்தால் நலமாயிருக்கும். ஆனால் தலைமயிர் இவ்விதம் நீளமாக தொங்கிக்கொண்டிருந்து, தங்கள் கண்களின் மேல் விழாதபடி முன் பாகத்தில் மட்டும் ஒருக்கால் சிறு பெண்கள் கத்தரித்துக் கொண்டால், அது தவறா என்று என்னால் கூற இயலவில்லை. அது தவறில்லை என்று நான் நினைக்கிறேன், பாருங்கள்? ஆனால் நீங்கள்... சகோதரிகளாகிய நீங்கள், உங்களால் முடிந்தால், கர்த்தர் அதை எவ்விதம் உண்டாக்கியிருக்கிறாரோ அவ்விதமே அதை விட்டு விடுவதை நான் விரும்புவேன். பாருங்கள்? 102பெண்கள் அழகாக காணப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர் என்று அறிவேன்; அது அவர்களுடைய இயல்பு. அவர்கள் அப்படித்தான் காணப்பட வேண்டும். பாருங்கள்? அது நல்லதுதான், ஆனால் உலகத்தாரைப் போல் காணப்படாதீர்கள் (பாருங்கள்?) உலகத்தாரின் மாதிரியைப் பின்பற்றாதீர்கள். அது தவறு... அதை நீங்கள் அவ்விதம் கத்தரித்துக் கொள்ள விரும்பினால், அதை கத்தரிக்காதீர்கள். உங்கள் தலைமயிர் பின்னப்பட்டு நீளமாக தொங்கி கொண்டிருந்தால், அதை நீளமாகவே விட்டு விடுங்கள். நீங்கள் சிறுமிகளாக இருக்கும் பட்சத்தில்...... 103நியூயார்க்கில் இருக்கும் என் மாமனுக்கு ஒரு சிறுமி இருந்தாள். அவளுக்கு மிகவும் அழகான தலைமயிர் இருந்தது. அது ஆழ்ந்த பழுப்பு நிற தலைமயிர். அவள் தலைமயிரை பின்னி விடுவது வழக்கம். என் தாயாருக்கு... அவர்களுக்கு பின்னின் தலைமயிர் முழங்கால் வரை நீண்டிருக்கும். இந்த சிறுமிக்கும் அதே விதமான பின்னின தலைமயிர் இருந்தது; அவளுடைய பெயர் ஜாக்வலின். அவள் அதன் ஒரு பாகத்தை இப்படி நீளமாக வாரி விட்டு, இதை இப்படி கத்தரித்துக் கொண்டிருப்பாள். அது ஏறக்குறைய பதினைந்து, பதினெட்டு, இருபது ஆண்டுகளுக்கு முன்பு. அவள் ஏன்தலைமயிர் முழுவதையும், இப்படி பின்னால் வாரிக் கொள்ளவில்லை, அது இந்த நவீன 'பீட்டில்ஸ்' வைத்திருப்பது போன்று இருப்பதைக் காட்டிலும் இன்னும் அழகாயிருந்திருக்குமே என்று நான் வியந்த துண்டு .... ஓ, அது உண்மை; நானாயிருந்தால் அவ்விதம் செய்ய மாட்டேன். 'பீட்டில்ஸ்'களைப் போல் காணப்படும் எதுவும், உலகத்தாரைப் போல் தோற்றமளிக்கும், அதை விட்டு விடுங்கள். ஆம்! 104என் கணவருக்கும் எனக்கும் வேதத்தின் பேரில் கருத்து ஒருமைப்பாடு இல்லை - உதாரணமாக நீங்கள் பிரசங்கிக்கும் இந்த சத்தியத்தின் பேரில் அவருக்குப் புரியவில்லை. நான் விசுவாசிக்காத போதகங்களைக் கொண்டிருக்கும் சபைகளுக்கு நான் அவருடன் செல்ல வேண்டுமா? இதைக் குறித்து நான் அதிகம் கலக்கமடைந்துள்ளேன். ஆம்! இந்த கணவனுக்கு நீ மனைவியாயிருப்பாயானால். அவர் உன்னைக் குற்றப்படுத்தவில்லை, நீ அவரைக் குற்றப்படுத்தக் கூடாது (பார்?), ஏனெனில், புருஷன் மனைவியினால் பரிசுத்தமாக்கப்படுகிறான். பார்? நான் நினைக்கிறேன், அவர் ஏதாகிலும் ஒரு ஸ்தாபன சபைக்குச் சென்று, நீ அவருடன் செல்ல வேண்டுமென்று அவர் விரும்பினால். பார்? நீ வேண்டாமென்று ... பார், அங்குள்ள எதுவும் உனக்கு கேடுண்டாக்காது, ஏனெனில் அவர்கள் போதிக்கிறதற்கு நீ எப்படியும் செவிகொடுக்கப் போவதில்லை, ஏனெனில் அவர்களுடைய போதகத்தை நீ விசுவாசிப்பதில்லை என்று நீ இங்கு கூறியிருக்கிறாய். பார்? எனவே அது உனக்கு கெடுதி விளைவிக்காது, ஆனால் நீ உன் கணவருக்கு மரியாதை செலுத்துகிறாய். அவருக்கு உன்னை ஒப்புக் கொடுக்கிறாய், ஒருக்கால் அவ்விதம் செய்வதனால் நீ... அவர்கள் இந்த காரியங்களை அங்கு போதிப்பார்களானால்... உனக்கு அதைக் காட்டிலும் மேலான காரியங்கள் போதிக்கப்பட்டுள்ளது; நீ உப்புத்தன்மை கொண்டவளாய் இருப்பாய்; அவர் உன்னைக் கண்டு கர்த்தரிடத்தில் வருவார். நான் மற்ற கேள்விகளுக்கு செல்கிறேன். என்னே இது. இப்பொழுது மணி என்னவென்று பாருங்கள்? 105சகரியா 4ம் அதிகாரமும், வெளிப்படுத்தல் 11:3-12 வசனங்களும் குறிப்பிடுவது ஒரே நபரையா? சகரியா 4:12-14 வசனங்களையும் வெளிப்படுத்தல் 11:4 ஐயும் பார்க்கவும். அவர்கள்தங்கள் பெயரைக் கையொப்பமிட்டுள்ளனர். இங்குள்ள இந்த சபையைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும். நாம் சகரியா 4ம் அதிகாரத்தைப் பார்ப்போம். ஓ, ஆம், அது அந்த இரு ஒலிவமரங்கள். ஆம். அந்த இரு ஒலிவமரங்கள், வெளிப்படுத்தல் 11 ... ஓ, ஆம், அதுதான் அதே காரியம். அது அவர்கள் இருவரும். அது மோசேயும் எலியாவும், இரு ஒலிவ மரங்கள். எங்களுடைய ஜெபிக்கவும், அது ஜெப விண்ணப்பம். நான் வருந்துகிறேன், இதை உங்களுக்கு முன்னால் படிக்க முடியாது. அது குடும்ப விவகாரம். ஆம், அங்குள்ளதுடன் இதை சேர்த்து விடுகிறேன். இதை எல்லோருக்கும் முன்பாக படிக்க முடியாது. எப்படியும், அவர்கள் தனிப்பட்ட பேட்டிக்கு வருகின்றனர். 106சகோ.பிரான்ஹாமே, இது தவறா.. (சகோ.பிரான்ஹாம் மேடையின் மேலுள்ள ஒருவருடன் உரையாடுகிறார் - 'ஆசி). ஞாயிற்றுக் கிழமையில் வேலை செய்வது தவறா? 107இதை சற்று முன்புதான் விளக்கினேன். மாடு குழியில் விழுந்து விட்டால், அதை தூக்கி வெளியே எடுக்கலாம், ஆனால் அதை ஞாயிறன்று வெளியே எடுப்பதற்காக அதை குழியில் தள்ளி விடாதீர்கள். சகோ. பிரான்ஹாமே, நீங்கள் அடுத்த ஞாயிறு இங்கு பிரசங்கம் செய்வீர்களா? அது ஒரு கேள்வி மட்டுமே. இல்லை, சகோதரியே, சகோதரனே, அது யாராயிருந்தாலும். இப்பொழுது. இவை இங்கு கிடந்திருந்தன. யாராவது அதை உறையில் போட்டிருப்பார்கள். சகோதரனே... இது உங்களுக்கு, சகோ. காப்ஸ், “நீங்கள் 'நாம் ஒருக்காலும் வயோதிபமாவதில்லை' என்னும் பாடலைப் பாடுவீர்களா? நான் இதை... இது எப்படியோ மற்றவைகளுடன் கலந்து விட்டது. 108சகோ.பிரான்ஹாமே, நீங்கள் ஏன் வேதத்தில் சொல்லப்படவில்லை என்று ஒருவர் அறிய விரும்புகிறார். நீங்கள்ஆபகூக்2:1-4 என்று நான் விசுவாசிக்கிறேன். (அதை எடுங்கள், சகோ .நெவில், ஆபகூக் 2:1-4). அவர்கள் இதையும் 3ம் அதிகாரத்தையும் படிக்கட்டும்... நான்கு அதிகாரங்களில் உள்ள பெயர்களும் முன்னடையாளங்களும், நீங்கள்தான் என்று நம்புகிறேன். இப்பொழுது, அவர் அந்த வேத பாகத்தை தேடிக் கொண்டிருக்கும் போது, அது ஆபகூக் 2:1-4. சகோதரனே, சகோதரியே, இந்த கேள்வியைக் கேட்டது யாராயிருந்தாலும் (பெயர் எதுவுமில்லை, அது நல்லது). இது போன்ற கேள்விகளை நீங்கள் கேட்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், உங்கள் இருதயத்தில் என்ன உள்ளதென்று நான் அறிந்து கொள்வேன். (பாருங்கள்?), அதன்பிறகு நான் உங்களிடம் கூறுவேன். இல்லை. பாருங்கள்? உங்கள் பெயர் வேதத்தில் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை (பார்த்தீர்களா, பாருங்கள்?), ஆனால் நீங்கள் வேதத்தில் உள்ள வரைக்கும், நீங்கள் கிறிஸ்துவுக்குள் உள்ள வரைக்கும், நீங்கள் வேதத்தில் இருக்கின்றீர்கள்; நீங்கள் அவருக்குள் வேதத்தில் இருக்கிறீர்கள் (பார்த்தீர்களா?), நீங்கள் கிறிஸ்துவுக்குள் உள்ள வரைக்கும், நீங்கள் வேதத்தின் பரிபூரணத்தில் இருக்கிறீர்கள். பாருங்கள்? நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கும்போது, உங்கள் முழு நிலையில் இருக்கிறீர்கள். எல்லோரும் இதை புரிந்து கொண்டீர்களா? 109அதை வைத்திருக்கிறீர்களா, சகோ.நெவில்? என்ன? ஆம். ஆபகூக்... இதை நான் படிக்கவில்லை, இது இங்கே போடப்பட்டிருந்தது, இன்று காலையில் என்று நினைக்கிறேன். ஆபகூக் 2:1-4. அதுதான் இது. ஆபகூக் 2:1 முதல் 4 வசனங்கள். நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலை கொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும் போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும் கவனித்துப் பார்ப்பேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும் படிக்குப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். 110நல்லது, நான் நினைக்கிறேன், இதைக் கேட்ட இந்த அருமையான நபர்... பார்த்தீர்களா? இது என்னை நேசிக்கின்ற யாரோ ஒருவர், இல்லையென்றால் அவர் இதை எழுதியிருக்க மாட்டார். பாருங்கள்? இப்பொழுது, நான் கூற முடியாது என்... வேதம் என் பெயராகிய வில்லியம் பிரான்ஹாம் என்பதை கூறவில்லை, அல்லது உங்கள் பெயரையும், நீங்கள் யாராயிருந்தாலும் நாம் எப்படியும் அவருக்குள் இருக்கிறோம். இவைகள்... இப்பொழுது, வேதத்தில் உரைக்கப்பட்டுள்ள நன்றாகத் தெரிந்த சில பாகங்கள், குறிப்பிட்ட காரியங்களை உரைப்பதை நீங்கள் காணலாம். பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், வேதத்தில் சரித்திரம் மீண்டும் நிகழ்கிறது. பாருங்கள்? வேதத்திலிருந்து ஒரு உதாரணத்தை உங்களுக்கு கூற விரும்புகிறேன். (உங்களில் பலர் எழுதிக் கொள்வதைக் காண்கிறேன்). இப்பொழுது, மத்தேயு 3ம் அதிகாரத்தில் “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது' என்று கூறப்பட்டுள்ளது. (மத்.2:15) . உங்களுக்கு ஸ்கோ ஃபீல்ட் அல்லது வேறெந்த ஒத்துவாக்கிய வேதாகமம் இருக்குமானால், நீங்கள் ஒத்து வாக்கியங்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டே வருவீர்களானால், அது யாக்கோபை, இஸ்ரவேலை எகிப்திலிருந்து வரவழைத்த வேத வசனத்துக்கு உங்களை கொண்டு சேர்க்கும். பாருங்கள்? யாக்கோபு அவர் எகிப்திலிருந்து வரவழைத்த அவருடைய குமாரன்; இயேசுவும் கூட அவர் எகிப்திலிருந்து வரவழைத்த அவருடைய குமாரன். எனவே (பாருங்கள்?) தேவனுடைய வார்த்தை ஒரு போதும் முடிவு பெறுவதில்லை. பாருங்கள், நாம் வேதத்தில் நம்மை வெவ்வேறு விதமாக அடையாளம் கண்டு கொள்கிறோம்.... கிறிஸ்தவ கதாபாத்திரங்களுடன் உங்களை அடையாளம் கண்டுகொள்ளுதலின் பேரில் நான் அரிசோனாவிலுள்ள, பீனிக்ஸில் பிரசங்கித்தது எத்தனை பேருக்கு ஞாபகமுள்ளது? ஆம், உங்கள் அநேகரிடம் அந்த செய்தியின் ஒலிநாடா உள்ளது. பாருங்கள்? நீங்கள் கிறிஸ்தவர்களாயிருக்கும் பட்சத்தில், நீங்கள் விரும்பும் எந்த இடத்திலும் உங்களை வேதத்தில் அடையாளம் கண்டு கொள்ள இயலும். நீங்கள் கிறிஸ்தவரல்லாத போதிலும், உங்களை நீங்கள் வேதத்தில் அடையாளம் கண்டு கொள்ளலாம். பாருங்கள்? எனவே அது உங்களுக்கு உதவியாயிருக்குமென்று நினைக்கிறேன். என்னால் முடிந்த வரையில் எத்தனை கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமோ அத்தனைக்கும் பதிலளிக்க விரும்புகிறேன். 111சகோ.பிரான்ஹாமே, கிருபை முடிந்து விட்டதென்றும் இனிமேல் வேறு யாரும் இரட்சிக்கப்பட முடியாதென்றும் சிலர் கூறுகின்றனர் (இது என் கையில் கிடைத்ததைக் குறித்து எனக்கு மகிழ்ச்சி). நாங்கள் ஜெப வரிசைகளை கவனித்துக் கொண்டு வருகிறோம், சிலர் இன்னும் கிருபையைப் பெறுகின்றனர் என்பது போல் தோன்றுகிறது.இப்பொழுது, இது முதல் கேள்வி, இரண்டு கேள்விகள் உள்ளன. “கிருபை முடிந்துவிட்டதா? அப்படி ஒரு போதும் நினைக்காதீர்கள். பாருங்கள்? நீங்கள் எடுத்துக் கொள்ளப்படும் வரைக்கும் உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து கொண்டிருங்கள். பாருங்கள்? “ஜெப வரிசைகளில் சிலர் கிருபை பெறுவதை நாங்கள் கவனிக்கிறோம்”. நிச்சயமாக! கிருபை - கதவுகள் திறக்கப்பட்டுள்ளன பாருங்கள்? நான் நினைக்கிறேன் நீங்கள் போகுமிடத்தில் இந்த எண்ணம்... பாருங்கள், இந்த வேத வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் சரியான இடத்தில் பொருத்த எனக்கு நேரமில்லை (பாருங்கள்?). இவை ஒவ்வொன்றையும் சரியான இடத்தில் பொருத்த. அவர்கள்... ஜெப வரிசையில் நீங்கள் கிருபையைப் பெறுகின்றீர்கள், நிச்சயமாக இயேசு இன்று பிற்பகல் வரப் போகிறார் என்று நான் அறிந்தால், இப்பொழுது நான் செய்து கொண்டிருப்பதைஅப்பொழுதும் செய்து கொண்டிருப்பேன் (பாருங்கள்?), அதை அப்படியே தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன். கிருபை எப்பொழுதும் திறந்துள்ளது. பாருங்கள்? 112இப்பொழுது, நான் நினைக்கிறேன், இந்த எண்ணம் எங்கு உங்களுக்கு கிடைத்ததென்றால், ஏழு சபை காலங்களுடனும், ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டு முடிக்கப்பட்டதுடனும் இது சம்பந்தப்பட்டது. பாருங்கள்? ஏழு முத்திரைகள், என்ன நடக்கிறது - என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தினது. ஏழாம் சபை காலம், நாம் ஏழாம் சபை காலத்தின் முடிவில் இருக்கிறாம். நான் முடிவு என்று கூறும்போது, இந்த மணி நேரத்தில், இந்த நிமிடத்தில் என்னும் அர்த்தத்தில் நான் கூறவில்லை. உங்களுக்கு ஞாபகமுள்ளதா, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்திலேயே வேதம் என்ன உரைத்ததென்றால்; பவுல், “காலம் சமீபமாயிருக்கிறது” என்று கூறினான். அது தேவனுடைய நேரத்தின்படி எவ்வளவு காலம் என்று நீங்கள் உணருகிறீர்களா? அது நேற்று. என் காலத்தின்படி அது இரண்டாயிரம் ஆண்டுகள். பாருங்கள்? காலம் சமீபமாயிருக்கிறது. பாருங்கள்? சமீபமாயிருக்கிறது என்று தேவன் அழைப்பது, நாம் சமீபமாயிருக்கிறது என்று அழைப்பது போன்ற ஒன்றல்ல. பாருங்கள்? எனவே தொடர்ந்து விசுவாசித்துக் கொண்டேயிருங்கள், தொடர்ந்து ஜெபித்துக் கொண்டேயிருங்கள், தொடர்ந்து... தேவன் இன்னும் கிருபையை திறந்துதான் வைத்திருக்கிறார். உங்களால் முடிந்தவரை, அதற்குள் வேகமாக பாய்ந்தோடுங்கள். நிறுத்துவதற்கு நேரம் வரும்போது, தேவன் அதை நிறுத்துவார் .பாருங்கள்? 113இப்பொழுது, சகோ.பிரான்ஹாமே, உம்மைத் தவிர வேறு யாரும் பிரசங்கம் பண்ணக் கூடாதென்பது உண்மையா? நீர் மனிதரை அபிஷேகித்து போதகர்களாக நியமிப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அவர்கள் பிரசங்கம் பண்ணக் கூடாதென்றால் நீர் அவ்விதம் செய்திருக்க மாட்டீர் என்பது எங்கள் கருத்து. இரக்கம் வேண்டுகிறேன்!' சகோதரனே, சகோதரியே, என்னைத் தவிர வேறு யாருமே பிரசங்கிக்கக் கூடாதென்று யார் உங்களுக்குச் சொன்னார்களோ! அப்படியானால் நான் தேவனுக்கு மிகவும் மோசமான பிரஜையாயிருப்பேன். இல்லை! தன் வாழ்க்கையில் தேவனுடைய அழைப்பை உணரும் ஒவ்வொரு மனிதனும் ஊழியத்தில் பிரவேசித்து பிரசங்கம் பண்ணத் தொடங்க வேண்டும்; அவர்கள் நமக்குத் தேவை. சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க தேவனுடைய மனிதர் உலகெங்கிலும் அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளனர். பாருங்கள்? நான் கடற்கரையில் உள்ள அநேக பெரிய கற்களின் மத்தியில் ஒரு சிறு கூழாங்கல் மட்டுமே. பாருங்கள்? எனவே நான் .... பிரசங்கிப்பதற்கு என்னைக் காட்டிலும் அதிகம் தகுதி வாய்ந்த, மற்றவைகளை அதிகம் பெற்றுள்ள அநேகர் உள்ளனர்; நான் இங்கு கிடக்கின்ற மிகவும் சிறிய, எளிய ஒருவன். களஞ்சியம் முழுவதிலுமுள்ள கோதுமையில் நான் ஒரு சிறு கோதுமை மணியே. பாருங்கள்? எனவே அது ஒரு... நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு விளங்குகிறதா? தேவனால் அழைக்கப்பட்ட எந்த ஒரு மனிதனும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டியது அவசியம். 114ஒரு கிறிஸ்தவன் தேவனுடைய அன்பில் ஆழமாகச் செல்லக் கூடிய வழி' எது? வேதாகமத்தைப் படித்து ஜெபிப்பதே. தேவனுடைய வசனத்தைப் படித்து ஜெபியுங்கள். நான் வேகமாக செல்லப் போகிறேன். என்னால் கூடுமான வரையில் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போகிறேன், ஒரு கேள்வியை நான் அனுப்பியிருந்தேன், ஆனால் அதை தவறாகக் கேட்டு விட்டேன். நகரத்தை விட்டுச் செல்லும் முன்பு சுகமளிக்கும் ஆராதனை ஒன்றை நடத்துவீர்களா என்று அறிய விரும்புகிறேன். இல்லையெனில், உம்மிடத்தில் தனிப்பட்ட பேட்டி ஒன்றைப் பெறுவது எப்படி? இப்பொழுது, இந்த நபர் காலையில் பேட்டிக்கு வந்திருந்தார் என்று நினைக்கிறேன். நாங்கள் சுகமளிக்கும் ஆராதனை ஒன்றை நடத்தினோம். எங்களுக்கு சுகமளிக்கும் ஆராதனை ஒன்று இருந்தது. 115சகோ.பிரான்ஹாமே, 1 கொரிந்தர் 11ம் அதிகாரம், 4 முதல் 6 வசனங்களை தயவு கூர்ந்து விளக்கவும். அது தலைமயிரைத்தவிர வேறு ஒரு முக்காட்டைக் குறிக்கவில்லையா?அல்லது, நமக்குத் தேவையான ஒரே முக்காடு நீண்ட தலைமயிர் மட்டுமா? (1 கொரிந்தியர் 11ம் அதிகாரத்தை எனக்கு எடுத்துத் தாருங்கள், நாம் பார்ப்போம். 1 கொரிந்தியர் 11:4). அது உரைக்கிறது நாம் ஜெபிக்கும் போது... (ஓ, ஆம் அவர்கள் அதை இங்கு கூறியுள்ளனர். அவர்கள் கூறுகின்றனர்). ஜெபிக்கும்போது அல்லது தீர்க்கதரிசனம் உரைக்கும்போது, நமது தலைமயிரை நாம் எடுத்துவிடலாமா... (நாம் பார்ப்போம், அவர்கள் இங்கு ஒன்றை கோடிட்டுள்ளனர்.) தீர்க்கதரிசனம் உரைக்கும் போது நமது தலைமயிரை நாம் எடுத்துவிடலாமா... (நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்றால்), நாம் தீர்க்கதரிசனம் உரைக்கும் போது, தலைமயிரை எடுத்து விடவும் போட்டுக் கொள்ளவும் செய்யலாமா? நீங்கள் தலைமயிர் துண்டு (hair piece) ஒன்றை அணிந்திருப்பீர்களானால், அவ்விதம் செய்யலாம், ஆனால் வீட்டில் டோப்பாக்கள் அல்லது அது போன்ற ஒன்றை அணிந்து கொள்ளும் விஷயத்தில்... நான் அதில் சரியாக காட்சியளிக்கக் கூடுமானால், நானும் கூட ஒருக்கால் ஒன்றை அணிந்து கொள்வேன், ஆனால் பீட்டில் டோப்பாவை அல்ல, ஒரு தலைமயிர் துண்டை. 116அது உண்மை. உங்களுக்குத் தலைமயிர் இல்லாமல் இருந்து, நீங்கள் ஒன்றைப் பெற விரும்புவீர்களானால், உங்களால் அதை செய்ய முடியுமானால், அதனால் தவறொன்றுமில்லை. ஆம், ஐயா! ஒரு ஸ்திரீக்கு தலைமயிர் போதுமான அளவுக்கு நீளமாக இல்லையென்றால், அவள் சவரி மயிர் போன்ற தலைமயிரை அதனுடன் இணைத்துக் கொள்ள விரும்பினால், அதைப் போட்டுக் கொள்ளுங்கள், சகோதரியே, என்று நான் கூறுவேன். ஒரு மனிதனுக்கு பயங்கர ஜலதோஷம் பிடித்து, ஏதாவதொரு விதத்தில் அதை தடுக்க விரும்பினால், அல்லது தன் மனைவிக்கு நன்றாக காணப்பட விரும்பினால், அவர் ஒரு தலைமயிர் துண்டை அணிந்து கொள்ள விரும்பினால், அப்படியே செய்யுங்கள். அதனால் தவறொன்றும் இல்லை (இல்லை, ஐயா!) நீங்கள் பல் கட்டிக் கொள்வது அல்லது செயற்கை கை வைத்துக் கொள்வது போல. இயற்கை உங்களிடமிருந்து ஏதாவதொன்றை எடுத்து விட்டு, இவைஅதற்கு பதிலாக நமக்கு கிடைக்கிறதென்றால், அதை செய்யுங்கள். அது முற்றிலும் சரி. ஆனால் அது இங்கு என்ன கூறுகிறதென்றால், “ஜெபிக்கும் போது அல்லது தீர்க்கதரிசனம் உரைக்கும் போது, நாம் தலை மயிரை எடுத்துவிடவும் போட்டுக் கொள்ளவும் செய்யலாமா?” இதன் அர்த்தம் என்ன? 117சரி, அதை படியுங்கள் சகோ. நெவில்.. 4 முதல் 6 வசனங்கள். சரி, சரி. ஜெபம் பண்ணுகிற போதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற போதாவது, தன் தலையை மூடிக் கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான். (அதாவது. அவனுக்கு நீண்ட தலைமயிர் இருக்குமானால். சரி). ஜெபம் பண்ணுகிற போதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற போதாவது, தன் தலையை மூடிக் கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும், தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்... (அது அவளுடைய கணவன்). அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டது போலிருக்குமே. ஸ்திரீயானவள் முக்காடிட்டுக் கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப் போடக்கடவள்.. (அவள் தலைமயிரை 'பாப்' செய்து கொள்ள விரும்பினால், அதை முழுவதும் சிரைத்து விடக்கடவள். பாருங்கள்? அவளுக்கு முடியாதென்றால்...); தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக் காடிட்டுக் கொண்டிருக்கக் கடவள். அங்கு, தலைமயிரை எடுத்து விடுவதையும் போட்டுக் கொள்வதையும் குறித்து எதுவும் சொல்லப்பட்டதாக என்னால் காண. முடியவில்லை. அவள் தலைமயிரை கத்தரித்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால், அதை முழுவதுமாக சிரைத்துப் போடக்கடவள் என்றுதான் அவர் கூறியிருக்கிறார். பாருங்கள்? ஏனெனில், அவள் தலைமயிரை வைத்துக் கொள்ள விரும்பாமல் போனால்; ஏனெனில் தலைமயிர்தான் அவள் முக்காடு. ஆனால் ஒரு மனிதன் தன் தலையை மூடிக் கொண்டால், ஸ்திரீயைப் போல் நீண்ட தலைமயிர் வைத்துக் கொண்டு பிரசங்க பீடத்தில் நின்றால், அங்கு அவன் ஸ்திரீயைப் போல் காணப்படுவான். பாருங்கள்? ஆகையால் அவன் அவ்விதம் வைத்துக் கொள்ளக் கூடாது. பாருங்கள்? 118தலைமயிரை எடுத்து விடுவதும் போட்டுக் கொள்வதும் என்பதை என்ன அர்த்தத்தில் கூறியிருப்பார் என்றால்.... ஒரு மனிதன் தன் தலையை முக்காடிட்டுக் கொண்டு தீர்க்கதரிசனம் உரைப்பதென்றால், அவன் அந்த முக்காட்டை எடுத்து விட வேண்டும் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கக் கூடும். பாருங்கள் இல்லை. அதுவல்ல. அவனுக்கு நீண்ட தலைமயிர் இருந்தால் அவன் தலையை மூடிக் கொண்டதாக அர்த்தம். இப்பொழுது, இந்த கேள்வியைக் கேட்டவரே, நீங்கள் இன்னும் சிறிது கீழே வாசிப்பீர்களானால், ஸ்திரீக்குத் தலை புருஷன் என்பதாக நீங்கள் கண்டு கொள்ளலாம். எத்தனை பேருக்கு அது தெரியும்? புருஷனின் தலை கிறிஸ்து; எனவே கிறிஸ்துவுக்காக ஒரு மனிதன் தன் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவருக்குள் மனிதன், ஸ்திரீ, எல்லாருமே உள்ளனர். அவர் தகப்பன், தாய், சகோதரி எல்லாமுமாய் இருக்கிறார். ஆனால் ஒரு மனிதனுக்குள் ஆண்மை மட்டுமே உள்ளது. எனவே அவன் கிறிஸ்துவின் நிமித்தம் அதை கத்தரித்து விட வேண்டும். ஆனால் ஒரு ஸ்திரீக்குள் பெண்மை மட்டுமே உள்ளது. எனவே அவள் தன் தலையை மூடிக் கொண்டிருக்க வேண்டும்; ஏனெனில் அவளுடைய புருஷன் அவளுக்கு மேல் இருக்கிறான். அவன் அவளுடைய ஆண்டவன், ஆளுகை செய்பவன்; எனவே அவள் நீண்ட தலைமயிர் வைத்திருக்க வேண்டும். பிறகு, அவள் அதை கத்தரித்து விட வேண்டுமென்று சொன்னால், அதை முழுவதும் சிரைத்து விடக்கடவள். ஆனால் அழகாக காணப்பட வேண்டிய ஒரு ஸ்திரீக்கு தன் தலைமயிரை சிரைத்துக் கொள்வது வெட்கமாகவோ அல்லது அவமானமாகவோ இருந்தால், அவள் தன் தலையை மூடிக் கொள்ளக் கடவள்; அவள் நீண்ட தலைமயிரை வைத்துக் கொள்ளக் கடவள். பாருங்கள். எனவே அது... எவருக்குமே... எல்லாருக்கும் விளக்கப்பட்டு விட்டதா? அது சரியாக தொனிக்கிறதா? அப்படியானால், அது உங்களுக்கு விளங்கி விட்டால் “ஆமென்' என்று சொல்லுங்கள் (சபையோர் ”ஆமென்“ என்கின்றனர் - ஆசி), சரி. 119சகோ.பிரான்ஹாமே, நமக்கு இன்னும் பத்து நிமிடம் மட்டுமே உள்ளது) - சகோ.பிரான்ஹாமே, நாங்கள் வாழுமிடத்தில் பிரசங்கி எவருமில்லை, ஆனால் ஞாயிறு இரவு மட்டும் நாங்கள் ஒலிநாடா ஆராதனை நடத்துகிறோம். எங்கள் பிள்ளைகளை ஞாயிறுபள்ளிக்காக வேறொரு சபைக்குக் கொண்டு செல்ல வேண்டுமா? ஒலிநாடா ஆராதனைகள் போதுமானதா? நல்லது, உங்கள் பிள்ளைகள் செல்லும் வழியை அனுசரித்து அது இருக்கட்டும். பாருங்கள்? உங்கள் பிள்ளைகள் வாலிபமுள்ளவர்கள்; அவர்கள் அறியத்தகாததை திணிக்கின்ற ஏதாவது ஒரு கூட்டம் மக்களிடையே நீங்கள் அவர்களைக் கொண்டு செல்வீர்களென்றால், நான் அவ்விதம் செய்ய மாட்டேன். அவர்கள் ஒலிநாடாக்களின் வாயிலாக போதுமானதை அறிந்து கொள்வார்களானால்... நீங்கள் அவர்களை ஒரு கத்தோலிக்க சபைக்கோ அல்லது அத்தகைய வேறொரு சபைக்கோ கொண்டு செல்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம்; அந்தவிதமான ஆலோசனையை நான் உங்களுக்கு கூற மாட்டேன். பாருங்கள்? அவர்கள்... ஆனால், அங்கு ஒரு நல்ல சபை உங்களுக்கிருந்து, அவர்கள் ஒருக்கால் உங்களுடன் இரண்டு மூன்று காரியங்களில் ஒத்துப் போகாமல் இருந்தாலும், அவர்கள் முழு சுவிசேஷ ஜனங்களாக இருந்து, உங்கள் பிள்ளைகள் அங்கு ஞாயிறு பள்ளிக்கு செல்ல விரும்பினால், அது முற்றிலும் சரி. ஆனால், பாருங்கள், நீங்கள் ஒரு இடத்தை அடைவீர்களானால்... உங்கள் பிள்ளைகள் அதை எவ்விதம் எடுத்துக் கொள்கின்றனர் என்பதைப் பொறுத்தது. பாருங்கள்? உங்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றனர், அவர்களில் ஏற்படும் விளைவு என்னவென்பதை கவனித்து வாருங்கள். 120நாம் பார்ப்போம். உங்களுக்கு போக ஒரு சபை இல்லாவிட்டால், நீங்கள் ஒலிநாடாக்கள் மட்டும் கேட்கலாமா? ஆம்! அது - நான் .... அது நல்லதாயிருக்கும்.... 121உங்கள் பிள்ளைகள் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு அவர்களுக்கு ஒரு அனுபவம் தேவையா? அவர்கள் கடைசி கால செய்தியைப் புரிந்து கொண்டால், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளனரா? ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் தேவை. நீங்கள் செல்லும் அதே வழியைத் தவிர வேறு வழியில் உங்கள் பிள்ளைகள் செல்ல முடியாது. பாருங்கள்? அவர்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும். தேவனுடைய ராஜ்யத்தில் பேரப்பிள்ளைகள் கிடையாது, அவர்கள் அனைவரும் பிள்ளைகளே. அவர்கள் அதைப் பெற்றிருக்க வேண்டும், உட்பிரவேசிப்பதற்கு அவர்கள் தேவனிடம் ஒரு அனுபவத்தைப் பெற்றிருத்தல் அவசியம், நீங்கள் பெற்றிருப்பது போல். நான் புரிய வைத்துவிட்டேன் என்று நம்புகிறேன். அது .. 122அன்பார்ந்தவரே (நாம் பார்ப்போம்), எபேசியர் 4ம் அதிகாரம் 11 முதல் 13 வசனங்களில் உரைக்கப்பட்டுள்ளபடி (நாம் பார்ப்போம்) - ஒலிநாடாக்களின் மூலமாக நாம் பரிசுத்தவான்களின் சீர்பொருந்துதல் அனைத்தையும் பெற்றுக் கொள்கிறோமா, அல்லது நாங்கள் சீர்பொருந்துவதற்கு எங்களுக்கு உதவ, நாங்கள் ஆவியின் வரங்களும் சபையின் வெவ்வேறு உத்தியோகங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்ற இந்த இடத்துக்கு வர வேண்டுமா, எங்கள் இருதயங்கள் கர்த்தருடைய வார்த்தை அனைத்தும் விசுவாசித்து விட்டன. இந்த நபர் ஆரிகானைச் சேர்ந்தவர். இப்பொழுது, என் . அருமை... இது யாரென்று எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். பாருங்கள்? அது... ஓ, ஆமாம், எனக்குத் தெரியும், எனக்கு நிச்சயமாகத் தெரியும். உங்கள் மகன்... அந்த நபர் இங்கு இருப்பாரானால்... நீங்கள் இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். இல்லையென்றால், நீங்கள் போன வாரம் இருந்திருப்பீர்கள். பாருங்கள்? அது போன வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுடன் வந்திருக்கும். உங்கள் மகன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார், பாருங்கள், அது - அவர் கட்டுப்படுத்துகிறார். அவர்தான் உங்களுடன் ஆரிகானில் வேட்டைக்கு செல்ல எனக்கு அழைப்பு விடுத்தார் என்று நினைக்கிறேன். அங்கு... அது சரியென்று எண்ணுகிறேன். எனக்கு இந்த நபரை கடிதம் மூலமாகத் தெரியும். எனவே... - இல்லை! சீர்பொருந்துதலுக்காக (perfecting) அவர்கள் இந்த சபைக்கு வர விரும்புகின்றனர். பாருங்கள்? நாங்கள் இங்குள்ள இந்த சபையில் ஒருவரோடொருவர் ஐக்கியம் கொள்கிறோம், ஆனால் சீர்பொருந்துதல் நமக்கும் தேவனுக்குமிடையே உண்டாகின்ற ஒன்று. கிறிஸ்துவின் இரத்தமே நம்மை பரிசுத்த ஆவியில் சீர்பொருந்தப் பண்ணுகிறது. பரிபூரணப்படுத்துகிறது. 123220, இப்பொழுது சபையில், “வரங்கள் இயங்குகின்றன” என்று அவர் கூறியுள்ளார். இங்கு நிறைய வரங்கள் இயங்குவதில்லை, ஆனால் சில வாரங்கள் எங்களிடையே காணப்படுகின்றன. எங்களிடையே அந்நிய பாஷை பேசும் வரங்களும், தீர்க்கதரிசனம் உரைக்கும் வரங்களும் உள்ளன (இரண்டு மூன்று வரங்கள்). நான் நினைக்கிறேன் இங்குள்ள சகோ.ஹிக்கின்பாதம், அவர் இப்பொழுது எங்கிருந்தாலும், அவருக்கு அந்நிய பாஷை பேசும் வரம் உள்ளது. சகோ. ஜூனியர் ஜாக்சன் இன்று நம்முடன் 'இருக்கிறார், அவரும் அந்நிய பாஷை பேசுவார். பிறகு பாஷைக்கு அர்த்தம் உரைக்கும் இரண்டு மூன்று பேர் நமக்குள்ளனர். நமது போதகர் சகோ.நெவிலும் கூட அந்நிய பாஷை பேசுகிறார், சில நேரங்களில் தீர்க்கதரிசனமும் உரைக்கிறார். கர்த்தர் அவர் மேல்... அன்றொரு நாள் அவர் ஒன்றை தீர்க்கதரிசனமாகக் கூறினார். நான் சென்றிருந்த ஒரு வீட்டில் அவர் தொலைபேசியில் கூப்பிட்டு, அவர் ஒருவரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்ததாகவும், குடிகாரன் ஒருவனின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாறுதல் உடனே உண்டாகும் என்றும் அவர்களிடம் கூறினார், அப்படி ஏதோ ஒன்று. அந்த மனிதன் குடிபழக்கம் உள்ளவர்களை சீர்திருத்தம் பண்ணும் விடுதியிலிருந்து குடிகாரனாகவே வெளியே வந்து, அறுபத்தெட்டு நாட்களாக மதுவைத் தொடவேயில்லை, அதற்கான மருந்து ஒன்றும் சாப்பிடவேயில்லை. அது சகோ.நெவில் அவரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்ததாகும். ... எனவே, எங்கள் மத்தியில் சில வரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன, உங்கள் எவரோடும் எங்களுக்கு ஐக்கியங் கொள்ள மிக்க மகிழ்ச்சி. அதற்கான ஒரு வாய்ப்பு இருக்குமானால், உங்களுக்கு வேலை அருகில் எங்காகிலும் இருக்குமானால், அல்லது எங்களிடம் வந்து ஐக்கியம் கொள்ள விரும்பினால், எங்களால் எதை செய்ய முடிந்தாலும், அதைக் குறித்து நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைவோம். பாருங்கள்? ஆனால் பரிபூரணப்படுதல் கிறிஸ்துவுக்கே உரியது. இப்பொழுது, பார்ப்போம், இன்னும் ஒன்று அல்லது இரண்டு கேள்விகள். 124சகோ.பிரான்ஹாமே, சகோ. ஆர்கன்பிரைட் எடுத்த படத்தை தயவாய் விளக்குவீர்களா? முதல் கேள்வி. சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கிற இரண்டாம் படம், உங்களைச் சுற்றியுள்ள ஒளி, வார்ப்பூட்டு (buckle) போன்றவை. நல்லது, இப்பொழுது, நான் என்னவென்று உங்களுக்கு கூறுகிறேன். அவர்கள் தங்கள் பெயரைக் கையொப்ப மிட்டுள்ளனர், அவர்கள் இப்பொழுது இங்கில்லை. அது என்னவென்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். அது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி ஜாக்சன். அவர்கள் திரும்பிப் போய் விட்டனர். நமக்கு அது என்னவென்று தெரியும்; அதை நாம் ஏற்கனவே விளக்கியிருக்கிறோம்.' 125சபை எப்பொழுது - உபத்திர காலத்தில் மரித்த சபை எப்பொழுது உயிரோடெழுந்திருக்கும்? அவர்களும் தேவ பக்தியில்லாதவர்கள் உயிரோடெழும் வரைக்கும் காத்திருக்க வேண்டுமா? அவர்கள் ஆயிரம் வருட அரசாட்சியின் போது மறுபடியும் உயிரோடிருப்பார்களா? இப்பொழுது, அது ஒரு நல்ல கேள்வி. என்னால் இதற்கு கொடுக்கக் கூடிய நேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் பெற இது தகுதி வாய்ந்தது. ஆனால் நான்... பாருங்கள்? எனக்கு நேரமில்லை... நான் காலையில் தொடங்கி இரண்டு மணி நேரமாகியும், இன்னும் மூன்றில் இரண்டு பாகம் கேள்விகள் உள்ளன. அதிகமான கேள்விகள், அவை அனைத்தையும் பார்க்க முடியாது. பாருங்கள்? என்னால் எத்தனை கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமோ, அவைகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். அவை எங்குள்ளது என்று காணாமலே, அவைகளை பொறுக்கி எடுக்கிறேன், இதில் மிகவும் நல்ல சில கேள்விகள் உள்ளன என்று அறிவேன், அவைகளுக்கு விடை தெரிய வேண்டும் - உதாரணமாக சர்ப்பத்தின் வித்து போன்றவை விளக்கப்பட வேண்டும். ஆனால் நான் துரிதப்பட்டு, இவைகளை வேகமாகப் பார்க்கப் போகிறேன். 126“உபத்திரவ காலத்தில் மரித்த சபை (பாருங்கள்?) உயிர்தெழுதலில் இருக்குமா? - இரண்டாம் உயிர்த்தெழுதலில். “அவர்களும் தேவபக்தியில்லாதவர்கள் உயிரோடெழும் வரைக்கும் காத்திருக்க வேண்டுமா?” நீதியுள்ளவர்களும் அநீதியுள்ளவர்களும் ஒரே நேரத்தில் எழுந்திருப்பார்கள். “அவர்கள் ஆயிரம் வருட அரசாட்சியின் போது மறுபடியும் உயிரோடிருப்பார்களா?” இல்லை! மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை“ (வெளி. 20:5). இப்பொழுது, இது மிகவும் சுருக்கமான பதில், ஆனால் நான் உறுதி கொண்டிருக்கிறேன்... 127கிறிஸ்துவுக்குள் சுதந்தரம் என்று பவுல் கூறுவதன் அர்த்தம் என்ன? நியாயப்பிரமாணத் திலிருந்து விடுதலையாக்கப்படுதல் எப்படி? நல்லது, நீங்கள் நியாயப்பிரமாணத்துக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. உதாரணமாக, இங்கு அதே காரியம்; இதை நான் இயற்கை வழியில் வேகமாக விளக்குகிறேன். உதாரணமாக, நீங்கள் தெருவில் அதிகபட்சம் மணிக்கு முப்பது மைல் வேகத்தில்தான் 'செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். சரி, இப்பொழுது நான் தெருவில் மணிக்கு நாற்பது மைல் வேகத்தில் செல்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது நான் சட்டத்தினால் (பிரமாணத்தினால்) குற்றவாளி யென்று தீர்க்கப்படுகிறேன். ஆனால் நான் தெருவில் மணிக்கு முப்பது மைல் மட்டும் செல்வேனானால், நான் பிரமாணத்தின் கீழ் இல்லை. பாருங்கள்? அதுதான் கிறிஸ்துவுக்குள் சுதந்தரம் (பாருங்கள்?) அதே காரியம். நீங்கள் செய்யாத வரைக்கும் பிரமாணத்துக்கு கட்டுப் பட்டவர்கள் அல்ல... நான் திருடாமல், பொய் சொல்லாமல், புகை பிடிக்காமல், விபச்சாரம் செய்யாமல், இவை ஒன்றையும் நான் செய்யாமலிருந்தால், நான் பிரமாணத்துக்கு கட்டுப்பட்டவன் அல்ல. பாருங்கள்? நான் நியாயப் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கப் பட்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன் ... 128குடும்பக் கட்டுப்பாட்டைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இன்று காலையில் நடந்த பேட்டிகளில் இது போன்ற சில கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன. இப்படிப்பட்டகாரியங்களைக் குறித்து நான் தனிப்பட்ட முறையில் உங்களிடம் பேசுவது நலம் (பாருங்கள்?), ஏனெனில் நான் கூற வேண்டிய சொற்களும் காரியங்களும்.... இதை நான் கணவன் மனைவியிடம்... இதை சரியான முறையில் செய்வதற்குரிய வாய்ப்புண்டு. இதை நான் பொதுவாக கூறுகிறேன். ஒரு ஸ்திரீயின் வாழ்க்கையில், அவள் கருத்தரிக்க இயலாத எத்தனையோ நாட்கள் உண்டு உங்களுக்குப் புரிகிறதா? சரி, ஏன்... இப்பொழுது, சில நேரங்களில் வயிற்றிலுள்ள குழந்தை ஸ்திரீயின் உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூடும். அவளுக்கு குழந்தை உண்டானால், அது அவளைக் கொன்று விடக் கூடும். எனவே அதன்பேரில் நீங்கள் கவனமாயிருக்க வேண்டும். பாருங்கள்? எனவே அதைக்குறித்து மிகவும் கவனமாயிருங்கள். பாருங்கள், அது உயிரைத் தோன்றச் செய்தல், நீங்கள் பூமியில் எதை தோன்றச் செய்கிறீர்களோ, அதைப் பொறுத்தது. உங்கள் மனைவி வியாதிப்பட்டவளாயிருந்து, அவள் கருத்தரித்தல் அவளை கொன்று விடுமானால், அதை நான் செய்யவே மாட்டேன். நீங்கள் அவ்விதம் செய்ய கர்த்தர் விரும்புவார் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த காரியங்களைக் குறித்து என்னிடம் தனியே வாருங்கள், தனிப்பட்ட முறையில் பேட்டி காணுங்கள். உங்களிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசட்டும், (பாருங்கள்?), அப்பொழுது நான்... 129பாருங்கள், தனிப்பட்ட நபர் ஒவ்வொருவரும், அவர்கள் என்னிடம் பொய் சொல்லுகிறீர்களா இல்லையா என்று என்னால் கூற இயலும். பாருங்கள்? அவர்கள் என்னிடம் வித்தியாசமான காரியங்களைக் கூறுகின்றனர். நான் உங்களை தனிப்பட்ட முறையில்... பாருங்கள்? ஏனெனில் நீங்கள் இவ்விதமாக தெரியப்படுத்துகிறீர்கள். உங்களுக்குத் தெரிவதில்லை. அது ஏனென்றால், ஒரு தனிப்பட்ட நபர் அதில் ஈடுபட்டிருக்கிறார், அப்படிப்பட்ட காரியங்கள்; அதை என்னால் கூற முடியும், நீங்கள் உண்மையை கூறுகிறீர்களா இல்லையா என்று. பாருங்கள்? 130சாத்தான் ஏன் வெளி. 20:3ன்படியும் 20:7ன்படியும் அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது தன் காவலிலிருந்து கொஞ்சக் காலம் விடுதலையாக வேண்டும்? அவன் ஏன் விடுதலையாக வேண்டும்? இரண்டாம் உயிர்த்தெழுதலின் போது அவனுடைய ஜனங்களை ஒன்று சேர்க்க.ஏனெனில் சாத்தானும் நியாயத்தீர்ப்பின் போது. நிற்க வேண்டும். பாருங்கள்? அவன் குற்றவாளியென்று தீர்க்கப்பட வேண்டும். . ஓ, என்னே, ஒரு புத்தகம் முழுவதும் கேள்விகள். நான் நினைக்கவில்லை. இங்கு வேறொரு கடிதம் நிறைய கேள்விகள். இங்கு நான் மிகவும் வேகமாக பார்க்கட்டும்.. 131361: சகோ.பிரான்ஹாமே, அப்போஸ்தலர் 9ம் அதிகாரம் 7ம் வசனத்தையும், அப்போஸ்தலர் 20ம் அதிகாரம் - 22ம் அதிகாரம் 9ம் வசனத்தையும் தயவு கூர்ந்து விளக்குங்கள் (சகோ.நெவில், அதை எனக்காக எடுப்பீர்களா?). அப்போஸ்தலர் 9ம் அதிகாரம் 7ம் வசனத்தை விளக்குங்கள். இப்பொழுது, அவர் அதை எடுக்கும்போது, வேறொரு கேள்விக்கு வேகமாக பதிலளிக்க முடியுமா என்று பார்க்கிறேன். உங்களுக்கு களைப்பாயிருக்கிறதா? நீங்கள் களைப்புற்றிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். மணவாட்டி மறுரூபப்படுதலின் இரகசியத்தை தயவு கூர்ந்து விளக்கவும். அது எப்படி எங்கே நடக்கும்? மணவாட்டி எந்த இடத்துக்கு செல்கிறாள்? இவை அருமையான கேள்விகள் அல்லவா? இவை உண்மையில் நல்ல கேள்விகள். இங்கு என்னால் நாள் முழுவதும் நின்று கொண்டு... (சகோ பிரான்ஹாம் 361ம் கேள்விக்கு விடையளிக்கிறார் - ஆசி) இப்பொழுது ஒரு நிமிடம், வசனம்... அப்போஸ்தலர் 9ம் அதிகாரம் 7ம் வசனம் (நன்றி, சகோ. நெவில்). அவனுடனே கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் பிரமித்து நின்றார்கள். 132நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று கண்டு கொண்டேன். பாருங்கள்? மற்ற வசனத்தில் வேறுவிதமாகக் கூறப்பட்டுள்ளது. அங்கு என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாதுஎன்னால் கூற இயலாது. ஏனெனில் மற்ற வசனத்தில் அவர்கள் சத்தத்தை கேட்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஓரிடத்தில் அவர்கள் அதை காணவில்லை என்றும் மற்ற இடத்தில் அவர்கள் கண்டனர், ஆனால் சத்தத்தைக் கேட்கவில்லை என்றும் கூறுகிறது. இதை எத்தனை பேர் முன்பு வேதத்தில் கண்டிருக்கிறீர்கள்? நான் கண்டிருக்கிறேன், ஆனால் என்னால் அதை விளக்க இயலாது. பாருங்கள். எனக்குத் தெரியாது, நான் வருந்துகிறேன், என்னால் விளக்க முடியாதென்றால், என்னால் விளக்க முடியாதென்று உங்களிடம் கூற நான் போதிய அளவுக்கு உண்மையுள்ளவனாயிருப்பேன். எனக்குத் தெரியாத போது அதற்கு நான் பதில் கூற முயற்சி செய்ய மாட்டேன். என்னால் அதை விளக்க முடியாது. ஏனெனில் ஓரிடத்தில் வெளிச்சத்தைக் கண்டார்கள், ஆனால் சத்தத்தைக் கேட்கவில்லை என்றும், அப்படி ஏதோ ஒன்று: மற்ற இடத்தில் அவர்கள் சத்தத்தைக் கேட்டனர்,' . ஆனால் வெளிச்சத்தைக் காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. என்னால் அதை விளக்க இயலாது. பாருங்கள்? என்ன நடந்தென்று எனக்குத் தெரியாது. கர்த்தர் எனக்கு அதை வெளிப்படுத்தும் வரைக்கும் எனக்குத் தெரிய வழியில்லை; விவாகமும் விவாகரத்தும் என்னும் விஷயத்தைக் குறித்து என்னால் உங்களால் கூற முடியாதிருந்தது போல. அவர் அதை எனக்கு வெளிப்படுத்தும் வரைக்கும் நான் அறிந்திருக்கவில்லை . 133இன்று காலையிலும் கூட - வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த தேவனாகிய கர்த்தர் இது உண்மையென்று அறிவார் - இன்று காலையில் அவர் விவாகமும் விவாகரத்தும் என்பதன் பேரில் என்னிடம் முழுவதும் கூறி முடித்து விட்டார். அது உண்மை. ஆகையால்தான், இவையெல்லாவற்றையும் ஒன்றாக கோர்க்கட்டும் என்கிறேன். ஆராய்ந்து... சர்ப்பத்தின் வித்தைப் போன்ற ஒன்று எனக்கு முன்பாக வைக்கப்பட்ட போது, என்னால் அதை புரிந்து கொள்ள இயலவில்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் அதை நான் பின்தொடர்ந்து கொண்டே வந்தேன். முதலாவதாக என்ன தெரியுமா... நீங்கள் தனியான ஒரு இடத்துக்குச் செல்ல வேண்டும், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அதை திறந்து கொடுக்கத் தொடங்குகிறார். இப்பொழுது, சர்ப்பத்தின் வித்து தவறென்று யாராகிலும் குறை கூறட்டும் பார்க்கலாம். பாருங்கள்? அவர்களால் முடியாது. 134மணவாட்டி மறுரூபப்படுதலின் இரகசியத்தை தயவு கூர்ந்து விளக்கவும். அது ஒரு மாறுதல் மட்டுமே (பாருங்கள்?), நமது சரீரங்கள்... நமது என்று நாம் சொல்வோம். அதை நான் கூறும் போது என்ன குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்குத் தெரிகிறதா? நான் அவபக்தியாய் இருக்க விரும்பவில்லை; நான் இந்த சபை மட்டும் என்று கூறவில்லை; ஒவ்வாரு விசுவாசியும் என்றுதான் குறிப்பிடுகிறேன். ஆபிரகாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை எதிர்நோக்கியிருந்தான். அது அவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணப் பட்டிருந்தது. அது சரியா? சபையும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனுக்காக காத்திருக்கிறது. மணவாட்டி (அதுசரியா?), மணவாட்டி அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனுக்காக காத்திருக்கிறாள். சாராளுக்கும் ஆபிரகாமுக்கும் வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட குமாரன் வருவதற்கு முன்பு, அவர்களுடைய சரீரங்கள் மாற வேண்டும். அது சரியா? குழந்தை பெறுவதற்கு சாராள் மிகவும் வயது சென்றிருந்தாள். அவளுடைய மார்பகத்தில் பால் சுரப்பிகள் இருக்க வில்லை; அவளுடைய மார்பகம் உலர்ந்து போயிருந்தது. அவளுடைய கர்ப்பப்பை கருத்தரிக்க முடியாத நிலையில் இருந்தது; அவள் மலடியாயிருந்தாள். அவளுக்கு குழந்தை பெற முடியாது; பிரசவ வேதனையைத் தாங்கிக் கொள்ள அவளுடைய இருதயம் மிகவும் வயது சென்று பலவீனமடைந்திருந்தது. எனவே என்ன நடந்தது? தேவன் அவளை மீண்டும் இளம் பெண்ணாக மாற்றினார். அவர் ஆபிரகாமுக்கும் அதையே செய்தார். ஏனெனில் அவனுடைய சரீரம் செத்துப் போயிருந்தது என்று அவர் கூறினார். பாருங்கள்? அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனைப் பெற்றுக் கொள்வதற்கென, அவர் அவர்களுடைய சரீரத்தை மாற்ற வேண்டியதாயிருந்தது. நாமும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த சரீரங்களில், நமக்கென இன்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள குமாரனைப் பெற முடியாது; இந்த சரீரங்கள் பாவமுள்ளவை. 135முதலாம் மனச்சாட்சி, பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல் என்னும் புலன்களைக் கொண்ட இந்த சரீரத்தை கட்டுப்படுத்துகிறது, அது நம்மெல்லாரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நாம் அறிவைப் பயன்படுத்தி யோசிக்கிறோம், மற்றெல்லாவற்றையும் செய்கிறோம். ஆனால் மறுபடியும் பிறந்ததனால் உண்டான அந்த புது சரீரமோ (இந்த முதலாம் மனச்சாட்சி அல்ல, அது கடந்து போகும்)..... அது ஜீவிக்கின்ற, உள்ளில் உள்ள ஒன்று. இதைப் புரிந்து கொண்ட ஒவ்வொருவரும் “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). அது இந்த வெளிப்புறத்தில் உள்ள பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல் அல்ல. அதுவல்ல. அது மரணத்துக்குக் கீழ்ப்பட்டுள்ளது. அது மரித்து விடும். ஆனால் உங்களுக்குள் இருக்கும் அந்த பாகம், உள்ளே உள்ளது, அந்த நபர் மரிக்கவே முடியாது. பாருங்கள்? அந்த நபரிலிருந்துதான், இந்த புதிய பிறப்பின் மூலமாக, புது ஜீவன் தொடங்குகிறது. அது உங்கள் சாயலிலே வேறொரு நபரை, அந்த ஜீவனைச் சுற்றிலும் உண்டாக்குகிறது. உங்களுக்குப் புரிகிறதா? 136எனவே அது இங்கு மறைவாக உள்ளது. அது என்ன? உலக தோற்றத்துக்கு முன்பு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை . இது 'நெகடிவ்'வையே பிரதிபலிக்கிறது; - ஆனால் அதுவோ 'பாஸிடிவ்வை, வார்த்தையை, பிரதிபலிக்கும். பாருங்கள்? அதே காரியம் தான் - மணவாட்டி மறுரூபப்படுதலும் அதே காரியமாகத் தான் இருக்கும். உங்களுக்குள் இருக்கும் அந்த வார்த்தையைச் சுற்றிலும் ஒரு சரீரம் உருவாகும், சாராளுக்கு நேர்ந்தது போல். அதற்கு முன்பு ... அவள் பெற்றிருந்த அந்த பழைய சரீரம், அந்த முதல் சரீரம், ஒரு குமாரனைப் பெறுவதற்காக மாற வேண்டியதாயிருந்தது உங்களுக்கு விளங்குகின்றதா? அந்த சரீரத்தினால் அதை செய்ய முடியவில்லை. அது போன்று நம்முடைய இந்த சரீரமும் அதை செய்ய முடியாது. குமாரனைப் பெற்றுக் கொள்ள இதுவும் அதே விதமாக மாற வேண்டும். 137அது எப்படி எங்கே நடக்கும்? மணவாட்டி எந்த இடத்துக்குச் செல்கிறாள்? அது மகிமைக்கு, பரலோகத்துக்கு, கலியாண விருந்துக்கு செல்கிறது. ஈசாக்கும் ரெபேக்காளும் அதற்கு முன்னடையாளமாயுள்ளனர், ஈசாக்கை சந்திக்க ரெபேக்காள் புறப்பட்டுச் சென்ற போது. ஆபிரகாமிடமிருந்து புறப்பட்டுச் சென்ற செய்திக்கு எலியேசர் எடுத்துக்காட்டாய் இருக்கிறான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஈசாக்குக்கு மணவாட்டியை கண்டு பிடிக்க எலியேசர் புறப்பட்டுச் சென்றான். அவன் குளிர்ச்சியான சாயங்கால வேளையிலே அழகான ரெபேக்காளைக் கண்டான் - தண்ணீர் குடம் சுமந்து கொண்டு வருகின்ற கறுப்பு நிறத் தோலைக் கொண்ட பெண்ணை எலியேசர், “தேவனாகிய கர்த்தாவே, என் பிரயாணத்தை வாய்க்கச் செய்து என் ஆண்டவன் ஆபிரகாமுக்கு வெற்றியைத் தருவீராக” என்று ஜெபம் பண்ணினான். ஆபிரகாம் “நீ பெலிஸ்தியரின் மத்தியில் பெண் கொள்ளாமல் என் ஜனத்தாரிடம் போ” என்றான் - கிறிஸ்துவின் மணவாட்டிக்கும் கிறிஸ்துவுக்கும் இரத்த சம்பந்தமான உறவு என்பதை இது காண்பிப்பதாய் உள்ளது, ஏனெனில் ஈசாக்கும் ரெபேக்காளும் இரத்த சம்பந்தமான உறவினர். 138எனவே அவன் புறப்பட்டுச் சென்றான், அப்பொழுது இந்த அழகான ரெபேக்காள், வெளியே வந்து தண்ணீர் மொண்டாள். அவன், “அவள் 'ஒட்டகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பேன் என்று சொன்னால்' என்று ஜெபித்தான். அதன் பிறகு, நீங்கள் கவனிப்பீர்களானால், ரெபேக்காளுக்கு... முடிவான தீர்மானம் ரெபேக்காள் தான் செய்ய வேண்டும். எலியேசர் அவள் தகப்பனிடம் பெண் கேட்டான்; அவன் தாயிடமும் பெண் கேட்டான். அவர்கள் இருவருமே இணங்கவில்லை. அவள் சிறிது காலம் தங்கியிருக்க வேண்டு மென்று அவர்கள் விரும்பினர். அவன், ”என் பணியில் என்னைத் தடை செய்யாதீர்கள்“ என்றான். அப்பொழுது ரெபேக்காள் தான், தீர்மானத்தை தெரிவிக்க வேண்டும். அவன், “அவள் தான் பெண்; அவளே சொல்லட்டும்” என்றான். அவளைக் கேட்டவுடனே, வேகமாக அவள் மனதில் தீர்மானித்தாள். அவள், “நான் போகிறேன்” என்றாள். அவள் ஓட்டகத்தின் மேலேறி ஈசாக்கைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றாள்..... பாருங்கள், அவள் தண்ணீர் வார்த்த அதே ஒட்டகம் அவளை தன் மணவாளனிடம் கொண்டு சென்று, அவளுடைய வெற்றி அனைத்துக்கும் காரணமாயிருந்தது. அவ்வாறே நாம் தண்ணீர் வார்த்து துதியை ஏறெடுக்கும் (ஆமென்! பாருங்கள்?) அதே ஒட்டகம், அதே வல்லமை தான் (வேதத்தில் மிருகம் வல்லமைக்கு எடுத்துக்காட்டாய் உள்ளது), தண்ணீர் ஜீவனைக் குறிக்கிறது. துதி வார்த்தைக்கு ஏறெடுக்கப்படுகிறது - நாம் மணவாளனைச் சந்திக்க நம்மை மகிமையின் தேசத்துக்கு கொண்டு செல்கிறது. ஆம். ஐயா! ஆமென்! அந்த மகிழச்சியான ஆயிரம் வருட அரசாட்சி நாள் வரக் காத்திருக்கிறோம். அப்பொழுது ஆசிர்வதிக்கப்பட்ட நமது கர்த்தர் வந்து, காத்திருக்கும் தம் மணவாட்டியை எடுத்துச் செல்வார் 139இதை ஞாபகம் கொள்ளுங்கள், ஈசாக்கு தன் கூடாரத்தை விட்டுப் புறப்பட்டு வந்து பிற்பகலில் வயலில் தியானித்துக் கொண்டிருந்தான். (ஆமென்!) ரெபேக்காள் வருவதை அவன் கண்ட போது .... அவள் அவனை கண்டதில்லை, அவனும் அவளைக் கண்டதில்லை, அது முதற்பார்வையிலே அன்பு. அவள் அவன் மேல் அன்பு கொண்டாள். அவனும் அவள் மேல் அன்பு கொண்டான், அவள் திரையிட்டு முகத்தை மறைத்திருந்தாள். ஆமென்! ஓ, என்னே! கவனியுங்கள். அவள் அவனைக் கண்டபோது, அவள் இருதயம் மகிழ்ச்சியினால் பொங்கினது. அவள் யாரை விவாகம் செய்து கொள்ளப் போகிறாள் என்று அறிந்திருக்கவேயில்லை, ஆனால் விசுவாசத்தில் புறப்பட்டுச் சென்றாள். ஆமென்! அவன் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்று, விவாகம் செய்து கொண்டு, தன் தகப்பனுக்கிருந்த சர்வத்துக்கும் சுதந்தரவாளியானான். ஆமென்! ஓ, பரிபூரணமாயுள்ளது, மிகவும் பரிபூரணமாயுள்ளது. சரி. கேள்வி: தேவன் மனிதனையும் மனைவியையும் பிரிக்கிறாரா.. 140258..இதை நான் படிக்காமல் விட்டு விடுவது நலம். பாருங்கள்? பாருங்கள்? நான் ஒரு வார்த்தை சொல்ல நேரிடும். பாருங்கள்? உங்கள் எல்லோரையும் எனக்குத் தெரியும், ஆனால்இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது (பாருங்கள்?), எனவே நான் விட்டு விடுவது நலம். அது எதைக் குறித்தது என்றால்... இந்த கேள்வியை எழுதின நபரே, உங்களுக்கு அது என்னவென்று தெரியும்; உங்களை நான் தனிப்பட்ட பேட்டியில் காண்பது நலம். இதை படிப்பது நன்றாயிருக்காது என்று எண்ணுகிறேன். பாருங்கள்? அந்த நபர் இந்த கேள்வியைக் கேட்டதில் எந்த தவறுமில்லை; அவர் ஒரு நியாயமான கேள்வியைத்தான் கேட்டிருக்கிறார், ஆனால் அதற்கு தனிப்பட்ட பேட்டியில் அவரைக் கண்டு விடையளிப்பது நலமென்று கருதுகிறேன். நீங்களும் அவ்வாறு கருதுகிறீர்கள் அல்லவா? அது யாராயிருந்தாலும்... அது நன்றாயிருக்கும் என்று உங்களுக்குத் தெரியும், அது யாராயிருந்தாலும். 141ஓ. என்னே! ஓ, நண்பர்களே, நமது நேரத்தை நாம் எப்பொழுதோ கடந்து விட்டோம். நாம் முடித்து விட்டு, பகல் உணவு அருந்தச் செல்வது நலம். நான் இன்னும் எவ்வளவு நேரம் இங்கு கழிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? ஓ, என்னே, என்னே! இன்னும் சிறிது நேரம். யாருக்காகிலும் உடனே செல்ல வேண்டுமென்ற அவசியம் இருக்குமானால், உங்கள் பகல் உணவு கரிந்து போகும்படி விடாதீர்கள். நான் ஒருக்கால் ப்ளு போர் அல்லது ப்ரையார்ஸ் அல்லது வேறெந்த இடத்திலாகிலும் உணவு உண்பேன். நாம் தாமதித்து சென்றால், அவர்கள் நம்மை ஒருக்கால் தொல்லைப்படுத்த மாட்டார்கள். நீங்கள் போக வேண்டு மென்றால், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எனக்குப் புரிகிறது. பாருங்கள்? நான் இன்னும் சிறிது நேரம் மட்டுமே எடுத்துக் கொள்வேன். இங்கு வைக்கப்பட்டுள்ள இந்த கேள்விகளுக்கு மட்டுமே நான் விடையளிக்கப் போகிறேன். அதன் பிறகு நான்.... இங்குள்ளவை... எனக்கு பதினைந்து நிமிடங்கள் அல்லது சற்று அதிகமான நேரம் பிடிக்கும், அதன் பிறகு நான் உணவு உண்ண செல்லப் போகிறேன். 142எனக்கு இரண்டு குமாரத்திகள் உண்டு, அவர்கள் ஸ்தாபனங்களிலுள்ள மனிதர்களை விவாகம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் இந்த செய்தியை விசுவாசித்து, இதற்கென்று உறுதியாக நிற்கின்றனர். அவர்களுக்கு எதிர்ப்பு உள்ளது. அவர்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் உறுதியாய் நில்லுங்கள்! முற்றிலுமாக. உங்கள் நிறத்தைக் காண்பியுங்கள். அதுதான்; அவர்களுக்கு விட்டுக்கொடுக்காதீர்கள். வேண்டாம், ஐயா! நீங்கள் அவர்கள் மத்தியில் சென்று ஐக்கியம் கொள்ள வேண்டும், அப்படி ஒன்றும் செய்ய வேண்டாமென்று நான் கூற வரவில்லை. உங்களால் அவர்களுடன் ஐக்கியம் கொள்ள முடியுமானால். ஆனால் அவர்கள் உங்கள் ஆகாரத்தை மாற்ற வேண்டும் என்று நினைப்பார்களானால், ஒரு புறா ஒரு பருந்துடன் ஆகாரம் புசிக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியும். 143சகோ.பிரான்ஹாமே, தயவு கூர்ந்து மாற்கு 13:27ஐ விளக்குவீர்களா? மேலும் சகோ.பிரான்ஹாமே, வெளி20:7-9ல் கூறப்பட்டுள்ள பரிசுத்தவான்களோடு யுத்தம் பண்ணும் ஜனங்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வருகின்றனர்? நோவாவின் குடும்பத்தைப் போல அவர்களும் உபத்திரவக் காலத்தில் உயிர் தப்பினவர்களா? வெளிப்படுத்தல் 16 - இல்லை, மாற்கு 13:27, சகோ. நெவில். வெளிப்படுத்தல் 20: சகோ. காப்ஸ், உங்களிடம் வேதாகமம் உள்ளதா? வெளிப்படுத்தல் 20, 7 முதல் 9 வசனங்கள் என்பது போல் தான் தோன்றுகிறது. நான் நினைக்கிறேன், நான், அவர்கள் அதை எடுத்துக் கொண்டிருக்கும் போது... இதோ, அவர் அதை எடுத்து விட்டார். வெளிப்படுத்தல், அது என்ன? மாற்கு 13:27, 13ம் அதிகாரம் 27ம் வசனம். அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி தாம் தெரிந்து கொண்டவர்களைப் பூமியின் கடைமுனை முதற் கொண்டு, வானத்தின் கடைமுனை மட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார். அது உயிர்த்தெழுதலை, மறுரூபப்படுதலை, மேலே செல்வதைக் குறித்துப் பேசுகிறது. அவர் கூட்டிச் சேர்ப்பதற்காக. தமது தூதர்களை அனுப்புவார். இந்த தூதர்கள் யாரென்று நீங்கள் எப்பொழுதாகிலும் நினைத்ததுண்டா? அவர்கள் செய்தியாளர்கள். அவர் அவர்களை கூட்டிச் சேர்ப்பார், ஒன்றாக கூட்டுவார் (பாருங்கள்?), அவர்களை பூமியின் கடைமுனை முதற்கொண்டு வானத்தின் கடைமுனை மட்டுமுள்ள திசைகளிலிருந்து கொண்டு வந்து, பூமியில் வெளிப் படுத்தப்பட்டுள்ள வார்த்தையாகிய அவர்களை ஒன்றாக கட்டி இணைப்பார். பாருங்கள்? விளங்குகிறதா? வார்த்தை உரைக்கப்பட்டது; இதோ அது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாருங்கள்? சரி, சகோ.காப்ஸ், நாம் பார்ப்போம். அந்த ஆயிரம் வருஷம் முடியும் போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, சரி சற்று முன்பு தான் அதை விளக்கினேன், இல்லையா, அவன் எவ்வாறு ஆயிரம் வருஷம் முடியும் போது காவலிலிருந்து விடுதலையாவான் என்று? சரி வேறொரு கேள்வி இங்குள்ளது ஒரு நிமிடம். 144சகோ. பிரான்ஹாமே, நடந்த காரியங்கள் தேவனால் உண்டானதா, அல்லது நானே உண்டாக்கிக்கொண்டதா; சோதிக்கப்பட்ட போது... அது... (உங்களால் படிக்க முடிகிறதா என்று பாருங்கள், அது நல்ல கையெழுத்து, ஆனால் என் கல்வி குறைவுள்ளது அங்கே என்ன சொல்லப்பட்டிருக்கிறது? [சகோ பிரான்ஹாம் சகோ. நெவிலுடன் உரையாடுகிறார் - ஆசி) என்னால் இதற்கு விடையளிக்க முடியுமென்று நான் நினைக்கவில்லை. சகோ. காப்ஸுக்கும் எனக்கும் என்ன எழுதியிருக்கிறதென்று படிக்க முடியவில்லை .... அது என்ன சொல்கிற தென்றால்). அது... (நாம் பார்ப்போம், அது ஒரு நாஸ். அது நாஸ் பணியைக் குறித்து ஏதோ ஒன்று). நான் நர்ஸ் வேலையை விட்டு நின்றது தேவனால் உண்டானதா, அல்லது அது என் தவறா? 264, எனக்குத் தெரியாது. அதை நான் தனிப்பட்ட பேட்டியில் காண்பது நலமாயிருக்கும். பாருங்கள்? இப்பொழுது, நாள் வேலை நியாயமான ஒன்று, நர்ஸ் வேலை பார்ப்பது. நான் என்ன சொல்கிறேன் என்றால்... இப்பொழுது, அந்த நபர் ஒன்றும் கூறவில்லை. அதற்கு விடையளிக்கக் கூடாது என்பதற்காக அந்த கேள்வியை நான் எறிந்து விடவில்லை, ஏனெனில் உங்கள் கேள்வி உங்களுக்கும் அல்லது என் கேள்வி எனக்கும் எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ, அப்படித்தான் இந்த கேள்வியும் இந்த ஸ்திரீக்கு முக்கியம் வாய்ந்தது. பாருங்கள்? ஆனால் இப்பொழுது, அது ஒரு நர்ஸ் ஆக இருக்குமானால், நீ வேலை செய்யக் கூடாது என்பதற்காக நர்ஸ் வேலையை விட்டு நீங்கி விட்டாய்... நல்லது, நர்ஸ் வேலை பச்சாதாபத்துடன் செய்யப்படவேண்டிய ஒன்று என்பது என் கருத்து. நீங்கள் டாக்டரைப் போல் சேவை மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும். 145ஒரு டாக்டர், ஒரு நல்ல டாக்டர், நோயாளியிடம் பணம் இருந்தாலும் இல்லாமல் போனாலும், அவனுக்கு சிகிச்சை அளிப்பார், அவர்தான் உண்மையான டாக்டர். பாருங்கள்? ஒரு ஊழியக்காரன், அல்லது யாரானாலும், நாம் ஒருவருக்கொருவர் சேவை செய்து, ஒருவர் மற்றவருடைய வாழ்க்கையை சிறிது மேம்படுத்த வேண்டும் என்பது என் கருத்து. நான்... இந்த சபையிலிருந்து வார்த்துக்கு நூறு டாலர் நான் ஊதியமாக பெற்றுக் கொள்ள வேண்டுமென்று அவர்கள் ' என்னிடம் கூறின போது, அது என்னைக் கொன்றே போட்டு விட்டது. இப்பொழுது, எனக்குத் தெரியும், திருமதி. வில்ஸனும், ஒருக்கால் அவர்களுடைய மகனும், இங்கு உட்கார்ந்திருக்கிற மற்றவர்களும், அநேக ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை ஞாபகம் வைத்திருப்பார்கள். இங்கு நான் பதினேழு ஆண்டுகள் பிரசங்கித்து, ஒரு காசு கூட வாங்கிக் கொள்ளவில்லை. நான் சம்பாதித்த சிறு தொகையுைம் கூட நான் இதற்கே கொடுத்து விட்டேன். பாருங்கள்? இந்த கூட்டங்களில் நான் பங்கு கொள்ள வேண்டுமானால், நான் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் என்னிடம் கூறின போது, அது என்னை அழித்துவிடும் போல எனக்குத் தோன்றினது. பாருங்கள்? அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை, ஆனால் என்னைப் பொறுத்தவரையில் (பாருங்கள்?) எனக்கு எதுவுமே, எந்த பணமுமே வேண்டாம். எனக்குத் தேவையான ஒன்றே ஒன்று உங்கள் நட்பும், நம்மிடத்தில் உள்ள தேவனுடைய கடாட்சமே. உங்களை நான் நேசிக்கிறேன் (பாருங்கள்?), உங்களை நான் நேசிக்கிறேன், நீங்கள் சரியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன், நானும்கூட சரியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன் இப்பொழுது, நீங்கள் என்னை நம்ப வேண்டுமென்று விரும்புகிறேன், நானும் உங்களை நம்புகிறேன். நீங்கள் என்னிடம் ஒரு கேள்வியுடன் வருவீர்களானால், நான் உங்களிடம் உண்மை யுள்ளவனாயிருக்க விரும்புகிறேன். நான் உங்களிடம் கர்த்தருடைய நாமத்தில் எதையாகிலும் உரைத்தால், நான் உங்களிடம் என்ன செய்யக் கூறினேனோ, அதை நீங்கள் அப்படியே செய்ய வேண்டு மென்று விரும்புகிறேன். அதிலிருந்து சிறிதும் கூட மாறாதீர்கள், அப்பொழுது நாம் சரியாக இணைந்து செல்வோம் என்று எண்ணு கிறேன். பாருங்கள்? பிறகு, மற்றவர்கள்.... 146எனவே இப்பொழுது, அது நர்ஸ் வேலையாயிருக்கு மானால்... நான் நினைக்கிறேன், நீ உன் இருதயத்தில் நர்ஸ் ஆக. விருப்பம் கொண்டால்... எல்லோருமே நர்ஸ் ஆகி விட முடியாது. நர்ஸ் என்பவள் சாந்த குணமுள்ளவளாயும், ஜனங்களிடம் தயவா. யும் நடந்து கொள்ள வேண்டும். ஓ, நான் நினைக்கிறேன், ஒரு உண் மையுள்ள நர்ஸ்... நீங்கள் எப்பொழுதாகிலும் வியாதிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால், உங்களை செளகரிய மாக வைத்துக் கொள்ளும் உண்மையான, நல்ல நர்ஸை நீங்கள் அப்பொழுது காணலாம். நான் சுடப்பட்ட அந்த சமயத்தில் எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது; அப்பொழுது நான் மருத்துவமனைக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு ஒரு நர்ஸ் இருந்தாள். அவளை நான் “இனிய ஊறுகாய்” என்று அழைப்பதுண்டு. ஏனெனில் அவள் எப்பொழு துமே வாயில் ஊறுகாயை வைத்து தின்றுக் கொண்டிருப்பாள். எல்லா நேரங்களிலும் அப்படித்தான். அப்பொழுது எனக்கு வயது பதினான்கு மட்டுமே, நான் சுடப்பட்டேன். அவள் ஒரு சிறு உருவம் படைத்தவள், அவள் கால்களில் குண்டு பாய்ந்து, இரண்டு கால்களிலுமே இப்படி மாம்சம் பிய்ந்து வந்திருந்தது. அவள் ஒரு தலையணையை இங்கேயும் ஒரு தலையணையை அங்கேயும் வைப்பாள்; அவள் எந்நேரமும் எனக்கு உதவி செய்து கொண்டேயிருப்பாள். நான் அப்பொழுது சிறு பையன், அவள் என்னிடம் தயவாயும் நல்லவளாகவும் நடந்து கொண்ட காரணத்தால், அவளை விவாகம் செய்து கொள்ளலாம் என்று எண்ணினேன். நல்லது நான்... அது ... பாருங்கள். இவ்விதம் ஒரு நல்ல காரியத்தைச் செய்வது முக்கியமானது. 147உங்களை ஒரு கேள்விகேட்க விரும்புகிறேன். முதலாம் கேள்வி: பெண்கள் அணியும் பைஜாமாக்கள்... (இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள், இதை நான் படிக்கட்டும் (சகோ.பிரான்ஹாம் கேள்வியை தனக்குள் படிக்கிறார் - ஆசி] இல்லை, இது சரியா யிருக்கும்). பெண்கள் அணியும் பைஜாமாக்கள் ஆண்களின் உடை யாகுமா? இவர்கள் என்னை கடினமான கேள்வி கேட்க முடியா தென்று என்னிடம் கூறாதீர்கள். எனக்குத் தெரியாது. அதைக்குறித்து நீங்களே தீர்மானித்து கொள்ளும்படி உங்களை விட்டு விடப் போகிறேன். அதை அணிந்து கொண்டு நீங்கள் ஜனங்களுக்கு முன்பாக இங்கும் அங்கும் நடக்கக் கூடாது; அது எனக்குத் தெரியும். அந்த விதத்தில் அது சரியல்ல. ஆனால் அதை அணிந்து கொண்டு படுக்கைக்குச் செல்லும் விஷயத்தில், எனக்குத் தெரியாது. அதை நான் வேத வசனங்களைக் கொண்டு ஆதாரப்படுத்த வேண்டும். எனக்குத் தெரியாமலிருந்தால், நான் உண்மையுள்ளவனா யிருப்பேன் என்று உங்களிடம் கூறினேன். என் சொந்த கருத்தை அதில் நான் நுழைக்க மாட்டேன் (சரி), நீங்கள் என் சொந்த கருத்தை அறிய விரும்பினாலொழிய, அது உங்களுக்கு வேண்டு மானால், நான் உங்களிடம் கூறுவேன். பாருங்கள்? இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இது கோடிக்கணக் கான மைல்கள் தவறாயிருக்கக் கூடும். இரவில் நீண்ட ஆடை (Night gown) அணிந்து கொள்வது நலமென்று கருதுகிறேன். ஆனால் உங்களால்... அது உங்களைப் பொறுத்த விஷயம். அதை என்னால் உங்களிடம் கூற இயலாது, ஏனெனில் அதை வேத வசனங்களைக் கொண்டு என்னால் ஆதாரப்படுத்த முடியாது. இப்பொழுது, இது நான் உரைப்பது, அவரல்ல, ஞாபகம் கொள்ளுங்கள். பாருங்கள்? 148ஸ்திரியின் தலைமயிரின் முனையை கத்தரிப்பது தவறா? சில நிமிடங்களுக்கு முன்புதான் அதைக் குறித்து பார்த்தோம் என்று நினைக்கிறேன் (பாருங்கள்?), சிறு சிறு தலைமயிர் முன்னால் இப்படி தொங்கிக்கொண்டிருப்பதை அவர்கள் என்ன அழைக் கின்றனர் என்றால்... 149சகோ.பிரான்ஹாமே, ஏழு சபை காலங்கள் ஒலி நாடாக்கள் ஒன்றில் நீங்கள், யூதாஸ் நீதிமானாக்கப்பட்டு பரிசுத்த மாக்கப்பட்டான் என்று கூறியிருக்கிறீர்கள். அவை உண்மையான (இது ஒரு நல்ல கேள்வி - அவன் பெற்றுக் கொண்ட கிருபையின் உண்மையான அனுபவங்களா இவை? நீங்கள் மேலும், யூதாஸின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்ததாக கூறியிருக்கிறீர்கள். இருப்பினும், அவன் பாதாளத்துக்குச் சென்று இழக்கப் பட்டான் என்று நாமறிவோம். ஒரு நபரின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருக்கும்போது, அவன் எப்படி இழக்கப்பட முடியும்? ஒருவன்முடிவில் இழக்கப்படுவான் என்று தேவன் அறிந்த பிறகும், அவனுடைய பெயரை ஏன் அவர் ஜீவபுஸ்தகத்தில் எழுதி வைக்க வேண்டும்? இப்பொழுது, இது நல்ல கேள்வி. இல்லையா? இதற்கு விடையளிக்க நான் கர்த்தர் பேரில் சார்ந்திருக்க வேண்டியவனா யிருக்கிறேன்; ஏனெனில் நான் இதை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் கவனியுங்கள்! சபை காலங்கள் பிரசங்கித்த போது, யூதாஸின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்தது என்று நான் கூறினேன். இப்பொழுது, அது உண்மை . அது நமக்குத் தெரியும், ஏனெனில் இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் வெளியே அனுப்பி (மத்தேயு 10ம் அதிகாரம்), அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் அவர்களுக்கு கட்டளையிட்டார். “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவச மாய்க் கொடுங்கள்” என்றார். பிசாசு அவர்களுக்குக் கீழ்படிகிறதனாலே அவர்கள் சந்தோஷத் தோடு திரும்பி வந்தனர். அது சரியா? இயேசு அவர்களிடம் கூறினதாவது, அவர் அவர்களுடைய நாமங்களைக் கூறினார் (மத். 10:2-4) (அவர்கள் யாரென்றும், எத்தனை பேர் அனுப்பப்பட்டனர் என்றும்); அவர்கள் திரும்பி வந்தனர், அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத் தும் அவர்களில் ஒருவன்... பாருங்கள்? அவர்கள் சந்தோஷத்தோடே திரும்பி வந்தனர், ஏனெனில் பிசாசு கள் அவர்களுக்குக் கீழ்படிந்தன. இப்பொழுது, பாருங்கள், அவர்களுடைய மனப்பான்மை அங்கு தவறாயிருந்தது. பாருங்கள்? பிசாசை அசைக்க உங்களுக்கு வல்லமை இருப்பதனால் நீங்கள் சந்தோஷப்படக் கூடாது. பாருங்கள்? நீங்கள் அவ்விதம் செய்யக் கூடாது. நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு போதிய கிருபை பெற் றுள்ளதால் சந்தோஷப்பட வேண்டும். பாருங்கள், பாருங்கள்? நீங்கள் சந்தோஷப்படக் கூடாது. அப்படித் தான் ஜனங்கள்.... 150வழக்கமாக, வரங்களைப் பெற்றுள்ள ஜனங்கள் வரங் கள் பெற விரும்பாதவர்கள். பாருங்கள்? பவுல் அதை விட்டு ஓடிப் போக முயன்றான், மோசேயும் கூட. அப்படிப்பட்ட பெரிய தலைவர்கள் அவர்களுடைய வேலையை விட்டு ஓடிப்போக முயல்கின்றனர்; அவர்களுக்கு முன்னால் என்ன வைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். தேவன்.பாருங்கள், “ஓ, தேவனே, என்னை வல்லமையினால் நிரப்பும் நான் இங்கு செல்வேன், நான் பிசாசுகளைத் துரத்துவேன் என்று' சதா கூறும் ஒரு மனிதனை நீங்கள் எடுத்துக் கொள்வீர்களானால் அவன் அதை செய்யவே மாட்டான். அப்படிப்பட்ட எவனையும் நம்பக் கூடாது என்பதை தேவன் நன்கு அறிந்திருக்கிறார் பாருங்கள்? அவன் செய்யவே மாட்டான். அதனுடன் எவ்வித தொடர்பும் வைக்க விரும்பாத மனிதன் தான். பாருங்கள்? அப்படிப்பட்ட ஒருவனை தான் தேவன் எடுத்து என்றாகிலும் ஒரு நாள் எதையாகிலும் போதிக்க முடியும். பாருங்கள்? எனவே, யூதாஸ் சந்தோஷத்தோடே திரும்பி வந்தான், அவர்கள் அனைவருமே, அவர்களுடைய பெயர்கள். அவர், “ஆவிகள் 2 ங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்கு நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப் படுங்கள்” என்றார் (லூக்.10:20). இப்பொழுது, நீங்கள் கவனிப் பீர்களானால், தானியேலின் புத்தகத்தையும் எடுத்துக் கொள் ளுங்கள். பாருங்கள். உங்கள் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருப்பதனால் (அது பரலோகத்தில் இருப்பதனால், உங்கள் பெயர் அடையாளங் கண்டு கொள்ளப்பட்டதனால்), நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று அர்த்தமல்ல. பாருங்கள்? நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரைக்கும் இரட்சிக்கப்படவில்லை. அதை நீங்கள் ஞாபகம் கொள் ளுங்கள். நீங்கள் மறைமுகமாக (Potentially) இரட்சிக்கப்பட்டிருக் கிறீர்கள். பாருங்கள்? 151நீங்கள் என்னிடம் ஒரு 'ஓக்' மரத்தை கேட்டு நான் உங்களுக்கு அதன் விதையைக் கொடுத்தால், மறைமுகமாக உங்களுக்கு ஒரு 'ஓக்' மரம் கிடைத்துள்ளது, ஆனால் அது இன்னும் வளரவில்லை. ஆகையால் தான் நான் நித்திய! பாதுகாப்பில், நான் விசுவாசிக்கும் விதமாக விசுவாசிக்கிறேன் நான் தானிய வயலைக் கேட்டு, தானியக் கதிர்கள் இவ்வளவு.! உயரத்தில் வளர்ந்திருப்பதை நான் காணும் போது, கறைமுகமாக நான் தானியம் நிறைந்த வயலைப் பெற்றிருக்றேன். அது இன்னும் வளரவில்லை, ஏதாகிலும் ஒன்று நடக்கும். பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக் குதல், இவைகளின் வழியாக பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அடையும் பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உண்மை யான பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றுக் கொண்டால் மட்டுமே, இராஜ்யத்தில் இருக்கிறீர்கள். நீங்கள், “சகோ. பிரான்ஹாமே, அது உண்மையா?” எனலாம். 152வேத வசனங்களை உங்களுக்கு அளிக்க எனக்கு நேர மில்லை. நீங்கள் வீடு திரும்பின பிறகு அதைப் பாருங்கள், ஏனெனில் எனக்குத் தெரியவில்லை... என் சிந்தை. அந்த வசனங்களை எடுக்க வேண்டுமானால் நான் என் கன் கார்டன்ஸில் தேட வேண்டும். இயேசு, இரட்சிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டிருந்த பேதுருவிடம்.... அவன் இயேசுவை விசுவாசித்தான் , பரிசுத்தமாக்கப்பட்டிருந்தான் . யோவான் 17:17. இயேசு “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” என்று பிதாவிடம் ஜெபம் பண்ணினார். அவரும் வசனமும் ஒன்றுதான். அவர்கள் வசனமாகிய சத்தியத்தினாலே மறைமுகமாக பரிசுத்தமாக்கப்பட் டிருந்தனர். பிறகு இயேசு யூதாஸிடம், இல்லை பேதுருவிடம், அவன் மறுதலித்த அந்த இராத்திரியில், “நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” என்றார். (லூக்.22:32) - நீ குணப்பட்ட பின்பு . 153அந்த மனிதன் அவரை மூன்று ஆண்டு காலமாக பின்பற்றினான். அவனுடைய பெயர் ஜீவபுஸ்தகத்தில் எழுதப் பட்டிருந்தது. அவன் பிசாசுகளைத் துரத்தி மகத்தான கிரியைகளைச் செய்து, பிணியாளிகளை சொஸ்தமாக்கி, இன்னும் பல்வேறு காரி யங்களை... வார்த்தையைப் பிரசங்கித்து எல்லாவற்றையும் செய்த போதிலும், அவன் இன்னும் குணப்படவில்லை. பாருங்கள் அந்த நீங்கள் குணப்படுதலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். பாருங்கள்? குழந்தையானது ... முட்டைக்கும் ஆண் அணுவுக்கும் இடையே அந்த செயல் நடந்த பிறகு... ஆனால் அவர்கள். அந்த செயல் நடந்த பிறகு குழந்தை மறைமுகமாக உள்ளது. அதன் பிறகு உடல் வளர்கிறது. இரண்டாம் கட்டம்; ஆனால் அந்த குழந்தை இங்கு பிறக்க வேண்டும், அப்பொழுது அது ஜீவ சுவாசத்தைப் பெறுகிறது. அதுவரைக்கும் அது ஜீவ சுவாசத்தை பெறவில்லை. ஆனால் நீங்களோ, “ஓ, அது உயிரோடிருக்கிறது” என்கிறீர்கள் இல்லை, அது இல்லை! அந்த சிறு நரம்புகள் தசைகளை அசைச் கின்றன. பாருங்கள்? குழந்தை பிறக்கும் வரைக்கும் ஜீவனைப் பெற்றிருக்கவில்லை. நீங்கள் குதிக்கலாம், அசைக்கலாம், ஆனால் நீங்கள் பெற்றிருக்கவில்லை... பாருங்கள், பாருங்கள்? நீங்கள் பிறக்க வேண்டும். நான் கூறுவது விளங்குகிறதா? சரி. 154இப்பொழுது, இப்பொழுது, அவர் கேட்டிருப்பது.. “யூதாஸின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்ததாக கூறியிருக்கிறீர்கள் இருப்பினும் அவன் பாதாளத்துக்குச் சென்று இழக்கப்பட்டான் என்று நாமறிவோம். ஒரு நபரின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருக் கும்போது, அவன் எப்படி இழக்கப்பட முடியும்?” இந்த அருமையான நபருக்கு நான் இன்னும் ஒரு சிறு காரியத்தை இங்கு கூறட்டும். இப்பொழுது கவனியுங்கள், வேதம் உரைக்கிறது, தானியேல் கண்டபோது... தானியேல் முதலாம் வெளிப்படுத்தல் புத்தகத்தை எழுதினான். நாம் கவனிப்பது என்னவெனில், தரிசனத் தில் அவன் நீண்ட ஆயுசுள்ளவர் முன்பாக கொண்டு வரப்பட்டான். அவருடைய சிரசின் மயிர் பஞ்சை போல் வெண்மையாயிருந்தது. எத்தனை பேருக்கு அது படித்தது ஞாபகமுள்ளது? நீங்கள் கவனித்தீர்களா? யோவானும் அதே காரியத்தைக் கண்டான், வெளிப்படுத்தல் முதலாம் அதிகாரத்தில் அவர் அங்கு நின்று கொண்டிருந்தார், அவருடைய சிரசின் மயிர் பஞ்சைப் போல் வெண்மையாயிருந்தது, அவருடைய பாதங்கள் அது காணப்பட்ட விதமாக இருந்தன - நீண்ட ஆயுசுள்ளவர். நீண்ட ஆயுசுள்ளவர் என்றால், அவருக்கு காலம் என்பதே கிடையாது - அவர் நித்திய மானவர். அவர் வந்தார். இப்பொழுது கவனியுங்கள்! பரிசுத்த வான்கள் பூமிக்கு வந்தனர், அப்பொழுது புத்தகங்கள் திறக்கப் பட்டன, ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது, ஒரு புத்தகம். அவர்கள் நியாயத் தீர்ப்புக்கு வந்தனர். அவர் வந்தார், அவருடன் கோடாகோடி பேர் வந்தனர். அது சரியா? அவரைச் சேவித்தனர், மணவாட்டி , ராணியும் ராஜாவும். 155உங்கள் வீட்டில் உள்ள உங்கள் சிறு ராணி யார்? அவள் உங்களுக்கு உணவு பரிமாறி சேவை செய்கிறாள். அது சரியா? (உங்களுக்கு இப்பொழுது நேரமாகிறது). அவள் உங்களுக்கு சேவை செய்கிறாள், அதுதான்... மணவாட்டியும் வார்த்தையாகிய கிறிஸ்துவுக்கு சேவை செய்கிறாள். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்?. (மத் 4:4). பாருங்கள்: அவள் ராஜாவுக்கு வார்த்தையை அளித்து, அவள் வாழுகின்ற காலத்திற்கென வாக்களிக்கப்பட்டுள்ள அவருடைய வார்த்தையை வெளிப்படுத்துபவளாயிருக்கிறாள். ஆமென்! ஆ, நான் அப்பொழுது ஒன்றைச் சொன்னேன், நீங்கள் புரிந்து கொள்ளவில்லை, ஆனால்... கவனியுங்கள்! ஓ, என்னே! அது நல்ல ஒன்று. பாருங்கள்? இந்தக் காலத்தில் வார்த்தைக்கு ஊழியம் செய்தல். அவர் வந்தார், ஆயிரமாயிரம் பேர் அவரிடம் வந்தனர்; நியாய சங்கம் உட்கார்ந்தது. புத்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது, அவர்கள் அதன்படி நியாயந் தீர்க்கப்பட்டனர். வந்தது யார்? நியாயத் தீர்ப்புக்கு வர அவசியமில்லாத மணவாட்டி . அவள் நியாயத்தீர்ப்பிலிருந்து விடு பட்டிருக்கிறாள். 156ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப் பட்டது, ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டிருக்கிறவர்கள், அந்த புத்தகத்தில் எழுதப்பட்டவைகளின் படியே நியாயத்தீர்ப்படைந் தார்கள். யூதாஸ்காரியோத்து தன்னை விசுவாசியென்று காண்பித் துக் கொண்டான், அவனுடைய பெயர் மற்ற பெயர்களுடன் கூட ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அது சரியா? அவன் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டதாக உரிமை கோரினான். அவனுடைய பெயர் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. எனவே அவன்... அப்படியானால், அவன் ஜீவ வார்த்தையை முப்பது வெள்ளிக் காசுக்கு ஏன் காட்டிக் கொடுத்தான் என்பதற்காக நியாயத் தீர்ப் படைய வேண்டும். சிலா மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, இன்னும் மற்றவர்களாக இருக்க விற்றுப் போடுகிறார்கள். அவன் ஜீவ புஸ்தகத்திலுள்ள அவனுடைய பங்கை விற்றுப் போட்டான். அவன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் பேரில் நியாயந் தீர்க்கப்பட வேண்டும். பாருங்கள்? யூதாஸ் நியாயாசனத்துக்கு முன்பாக வர வேண்டும். அவனுடைய பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்தது, அதன் காரணமாக அவன் இரட்சிக்கப்பட்டான் என்று அர்த்தமல்ல. அவன் நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டும். 157நித்திரையடைந்த கன்னிகைகளும் அதே காரியங் களுக்காக அங்கு நிற்க வேண்டும். கவனியுங்கள், இயேசு, “என் வசனத்தைக் கேட்டு (அதாவது அதை ஏற்றுக்கொள்கிறவன், அது பிரசங்கம் பண்ணப்படுவதைக் கேட்டு முட்டாள்தனம்' என்று சொல்லி விட்டு செல்பவன் அல்ல, பாருங்கள்?) , என் வசனத்தைக் கேட்டு, என்னை (அதாவது வார்த்தையை) அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு (பாவனை யாக விசுவாசிக்கிறவன் அல்ல, உண்மையாக விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி (இறந்த காலம்) ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” என்று யோவான் 5:24ல் கூறியுள்ளார் (ஆங்கிலத்தில் “Hath passed” அதாவது. அவன் ஏற்கனவே மரணத்தை விட்டு நீங்கள் ஜீவனுக்குட்பட்டு விட்டான் என்று இறந்த காலத்தில் கூறப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) பாருங்கள்? அதுதான் 158எனவே யூதாஸின் பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்தது (அது முற்றிலும் உண்மை ), ஆனால் அவன் ஆக்கினைத் தீர்ப்படைந் தான், ஏனெனில், அவன் என்ன செய்தான்? தன் பிறப்புரிமையை விற்றுப் போட்டான். ஏசா தேவனுடைய வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்த குடும் பத்தில் பிறந்தான். மூத்தவனுக்கு தான் சேஷ்ட புத்திர பாகம் கொடுக்கப்பட்டிருந்தது. எத்தனை பேருக்கு அது தெரியும்? தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மூலம், ஏசாவின் பெயர் சேஷ்ட புத்திரபாகம் பெற்றிருந்தவரின் பெயர்கள் அடங்கிய புத்தகத்தில் இருந்தது. (அது சரியா?), ஆனால் அவனோ ஒரு பானை கூழுக்காக அதை மாற்றிக் கொண்டான். பசியாயிருந்த அவனுடைய வயிற்றை நிரப்புவதற்கென்று, அவனுடைய ஆகாரச் சீட்டுக்காக அவன் தன் சேஷ்ட புத்திர பாகத்தை மாற்றிக் கொண்டான். அதன் விளைவாக அவன் மனந்திரும்புவதற்கு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் போயிற்று. தேசத்தை வேவு பார்க்க சென்றவர்கள் திரும்பி வந்து யோசுவாவும் காலேபும் கொண்டு வந்த திராட்சை பழங்களையும் தின்றனர். இருப்பினும், அவர்கள் என்ன செய்தனர்? தங்கள் சேஷ்ட புத்திர பாகங்களை விற்றுப் போட்டனர். 159இயேசு கூறினார் - இல்லை, கிறிஸ்துவின் ஏவுதலினால் பவுல் 6ம் அதிகாரத்தில், “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம் ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசி பார்த்தும் மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் பாவை யில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புவதற் கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்” என்று உரைத்திருக்கிறான். (எபி.6:4-6). அவர்கள் “தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தங்களைப் பரிசுத்தஞ் செய்த 2 டன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபை யின் ஆவியை நிந்திக்கிறவர்கள்” (எபி.10:29). அந்த நபர் திரும்பி வருவது கூடாத காரியம் யோசுவாவும் காலேபும் தவிர, மற்றவர் ஒவ்வொருவரும் வனாந்தரத்தில் மரித்து அழிந்து போயினர். அவர்கள் விசுவாசிகளே, அவர்களுடைய பெயர்கள் புத்தகங்களில் இருந்தன. 160பவுல் இங்கு பேசுகையில், ஒரு மனிதன் இரட்சிக்கப் பட்டு, பரிசுத்தமாக்கப்படும் கட்டத்தை அடைந்து (இரத்தம் பரிசுத் தம் செய்கிறது; எபி.13:12-13. இரத்தம் பரிசுத்தம் செய்கிறதாக உரைக்கிறது), அதன்பிறகு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்னும் வாசல் வரைக்கும் வந்து, பிரக்கியாதியின் காரணமாகவோ அல்லது ஸ்தாபனத்தின் காரணமாகவோ அதற்குள் நடக்க மறுத்தால், “அந்த மனிதன் இழக்கப்படுவான், அவன் இழக்கப்படுவான்” என்று உரைக்கிறான் (பாருங்கள்?); ஏனெனில் அவனை அந்த இடத்துக்கு அழைத்து வந்து அதை அவனுக்குக் காண்பித்த கிருபையின் ஆவியை அவன் நிந்தித்து. அங்கிருந்து திரும்பி நடந்து சென்று விடுகிறான். அவன் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் சிந்தப்பட்ட 2 டன் படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்று எண்ணுகிறான். ஏனெ னில் அந்த இரத்தம் தான் அவனை இரட்சித்து, நீதிமானாக்கி, பரிசுத்தப்படுத்தி, அவனை பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வரைக்கும் கொண்டு வந்தது. அவனோ அதை விட்டு விலகி, நடந்து சென்று விடுகிறான். 161இப்பொழுது, மாதிரியைக் கவனியுங்கள். நான் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன், ஆனால் பாருங்கள்! யூதாஸ்காரி யோத்து அதே பாதையைத் தொடர்ந்தான். அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு நீதிமானாக்கப்பட்டான். அவன் பரிசுத்தமாக் கப்பட்டு, ஆவிகளைத் துரத்த அவனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட டிருந்தது. அவனுடைய பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அவன் பெந்தெகொஸ்தேவுக்கு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துக்கு, வார்த்தையின் முழுமைக்கு வந்த போது, அவன் தன் உண்மையான நிறத்தைக் காண்பித்தான். கானானுக்குச் சென்ற வேவுகாரர்களும் அதைதான் செய்தனர்; ஏசாவும் அதைதான் செய்தான் அதையே தான் சாத்தானும் ஏவாளுக்கு ஏதேன் தோட்டத்தில் செய்தான். “நிச்சயமாக தேவன் செய்ய மாட்டார்...” அவள், “தேவன் சொல்லியிருக்கிறார்” என்றாள். அவன், “ஆம், அது அதை சொல்லுகிறது, இதை சொல்லு கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் நிச்சயமாக...' என்றான். பாருங்கள், அதே காரியங்கள்தான் காலங்கள்தோறும் இன்று வரைக்கும். 162சபையானது மார்டின் லூத்தர் காலத்தில் நீதிமானாக் கப்படுதலின் வழியாகவும், வெஸ்லியின் காலத்தில் பரிசுத்த மாக்கப்படுதலின் வழியாகவும் கடந்து வந்தது. ஆனால் அது பரி சுத்த ஆவியின் அபிஷேகம் பெறும் நேரத்தை அடையும் போது, அவர்கள் தங்கள் சுய நிறத்தைக் காண்பிக்கின்றனர், அதனுடன் அவர்கள் எந்த சம்பந்தமும் கொள்ளப் பிரியப்படவில்லை. நசரீன் கள், யாத்திரீக பரிசுத்தர், தேவ சபை, இவர்கள் அனைவரும் பரிசுத்தமாக்கப்படுதலில் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதில் உங்கள் விரலைச் சுட்டிக் காட்ட முடியாது. அது உண்மை. ஆனால் எல்லைக் கோட்டுக்கு அது வரும் போது, புதிய பிறப்பை பெற பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அந்த கட்டத்தை அது அடையும் போது, பிசாசு என்ன செய்கிறான்? அவன் வந்து அதை திரித்து விடுகிறான். ஓ, ஜனங்களை அதிலிருந்து விலக்கிவிட தன் அதிகாரத்தில் இருக்கும் எதையும் அவன் செய்வான். அவர்கள் அதை சுற்றி வளைத்து, “நீங்கள் அந்நிய பாஷை பேச வேண்டும். உங்களுக்கு உணர்ச்சி உண்டாக வேண்டும். நீங்கள் இதை செய்ய வேண்டும்' என்று கூறுகின்றனர். நீங்கள் அதற்குள் பிறக்க வேண்டும். பரிசுத்தமாக்கப்படுதலும் பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் இரண்டும் ஒன்றுதான் என்று எவரும் உங்களிடம் கூற அனுமதிக்காதீர்கள். ஏனனில் அது அப்படியல்ல! நிச்சயமாக அல்ல! பின்னால் உள்ள நசரீன் ”அது அப்படியல்ல“ என்று கூச்சலிடுவதைக் கேளுங்கள். பாருங்கள்? அவ்விரண்டுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை அவர் அறிந்துள்ளார். ஏனெனில் நிச்சயமாக வித்தியாசம் உண்டு - சகோ காப்ஸ், நமது தீரமுள்ள சகோதரன். பாருங்கள்? 163நிச்சயமாக, நசரீன்கள். அவர்களுக்கு விரோதமாக யாரும் ஒரு வார்த்தையும் கூற இயலாது, அருமையான, மதப்பற்றுள்ள ஜனங்கள், அவர்கள் மிகவும் நல்லவர்கள். தேவ சபை யினர், நசரீன்கள், சுயாதீன மெதோடிஸ்டுகள், இவர்கள் அனைவரும் உண்மையான வர்கள், ஆனால் ஆவியின் கிரியைகளுக்கு அது வரும் போது அவர்கள், “ஓ, ஓ, அது பிசாசு” என்று சொல்லி விடுகின்றனர். அவர்கள் அங்கு என்ன செய்கின்றனர்? பரிசுத்த ஆவிக்கு விரோத மாய் தேவ தூஷணம் சொல்கின்றனர். அவர்கள் அதைச் செய்யும் போது .... இப்பொழுது, தேவ தூஷணம் என்றால் என்ன? அதற்கு மன்னிப்பே கிடையாது. அது சரியா? ஒருதரம் பிரகாசிப்பிக் கப்பட்டும், பர்ம ஈவை ருசிபார்த்தும் (தேவனுடைய பரிசுத்தமாக் கப்படுதலை ருசி பார்த்தல் : புகை பிடித்தல், அசுத்தமான பெண்களுடன் ஈடுபாடு, அத்தகைய வாழ்க்கை அனைத்தினின்றும் விடுபடுதல்), 'பரம் ஈவை ருசிபார்த்தும் (அந்த திராட்சை குலையிலிருந்து ஒரு பாகத்தை ருசித்த அந்த வேவுகாரர்கள் போல் எல்லைக்கோடு வரைக்கும் வருவதைக் கண்டு... ஆனால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் தங்கள் ஸ்தாபனங்களிலிருந்து விடுபட்டு இங்கு கடந்து வரவேண்டும். 'பாருங்கள்?), பரம ஈவை ருசிபார்த்தும்; தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து, தங்களைப் பரிசுத்தஞ் செய்த உடன் படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்று எண்ணுகிறவர்கள். 164பரிசுத்தமாக்கப்படுதல் என்பது, விசுவாசி என்னும் முறையில் உங்கள் பெயர் அந்த புத்தகத்தில் எழுதப்படும் போது. உங்களுடைய பெயர் அவருடைய இரத்தத்தினால் எழுதப்படுகிறது. பாருங்கள்? பரிசுத்தமாக்கப்படுதல் அதை செய்கிறது, நீங்கள் தொடர்ந்து வருகிறீர்கள். அவர் உங்களை இதுவரைக்கும் நம்பின பிறகு, நீங்கள் அங்கு அடைந்து, “நல்லது, அவருக்குத் தெரியுமா?” என்று கேட்கிறீர்கள். ஆம், அவர் அறிந்திருந்தார். நீங்கள் அதை செய்ய மாட்டீர்கள் என்று தொடக்கத்திலேயே அவர் அறிந்திருந்தார். அவர் அவனை தொடக்கத்திலிருந்தே அறிந்திருந்தார்; அவன் கேட்டின் மகன். ஆனால் இந்த காரியங்கள் நிறைவேற வேண்டும். பாருங்கள்? வார்த்தையானது நிறைவேற வேண்டும், அவை முன்னடையாளங்களாகவும் சாயல்களாகவும் இருந்த போதிலும். ஓ, என்னே! நாம் அதில் மணிக்கணக்கில் நிலைத்திருக்கலாம். 165சகோ.பிரான்ஹாமே, நீர் எழுபது சபை வாரங்களின் பேரில் செய்தி அளித்த போது- (என்னை மன்னிக்கவும்) தானியேலின் எழுபது வாரங்களின் பேரில், முழு கடைசி வாரம் அல்லது கடைசி ஏழு வருஷங்கள் மணவாட்டி எடுத்துக் கொள்ளப்படுதலில் எடுக்கப்படும் போது தொடங்குகிறது என்று நீர் கூறினீரென்று நினைக்கிறேன். இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை! நீங்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் (பாருங்கள்?) முழு வாரம் அல்லது கடைசி ஏழு வருடங்கள் அல்ல. இயேசு இவ்வுலகில் வந்த போது அந்த வாரம் தொடங்கினது- அவன், “மேசியா, அதிபதி, வந்து தீர்க்க தரிசனம் உரைப்பார், அந்த வாரத்தின் நடுவில் அவர் அறுப்புண்டு போவார்” என்றான். இயேசு சரியாக மூன்றரை ஆண்டு காலம் பிரசங்கித்தார், அது ஏழு நாட்களாகிய வாரத்தின் நடுவில். பாருங்கள்? இன்னும் மூன்றரை ஆண்டுகள் மீதமுள்ளது. இப்பொழுது, மோசேயும் எலியாவும் பூமிக்கு வரும் போது அது வெளிப்படுதல் புத்தகத்திலும் சகரியாவிலும் காணப்படுகிறது... (சகோ. கூமர், உங்கள் கேள்வியும், சகோதரி கூமரின் கேள்வியும் அதன் பேரில்தான்). இப்பொழுது, அவர் கள்... சகரியா 4ம் அதிகாரத்திலும், வெளிப்படுத்தல் 11ம் அதிகாரத் திலும் இந்த இரு ஒலிவ மரங்கள் - அது மோசேயும், எலியாவும் - அவர்கள் பூமிக்கு வரும் போது சரியாக 1260 நாட்கள் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள் . அது என்ன? சரியாக மூன்றரை ஆண்டு காலம். அது சரியாக அதே காரியம்தான். பாருங்கள்? இதை கேட்ட அருமையான நபர் யாராயிருப்பினும், மிகவும் அழகாக தாளில் எழுதப்பட்டுள்ளது, வேத சம்பந்தமான தலைப்பு, கோடுகள் இங்கேயும் மற்றவைகளும், அது மிகவும் அழகாயுள்ளது. இது ஒரு நல்ல கேள்வி, ஆனால் நான் கூறினதை நீங்கள் புரிந்து கொள்ள வில்லை. அந்த முழு வாரமும் இப்பொழுது முடிவடையும் என்று நான் ஒரு போதும் நினைத்ததேயில்லை. மேசியா அறுப்புண்டு போகிறார். இதை நான் இங்கு பிரசங்கித்தது எத்தனை பேருக்கு 'ஞாபகமுள்ளது? நிச்சயமாக! பாருங்கள்? ஏழு நாட்கள். 166அப்பொழுது முதற்கொண்டு, முதல் மூன்றரை ஆண்டுகள் இயேசுவின் ஊழியத்தின் போது நிறைவேறினது போல் தோன்றுகிறது (நல்லது, இங்கு அதை நீங்கள் சரியாக கூறியிருக் கிறீர்கள்) ஆனால் “வாரத்தின் நடுவில்” என்று கூறப்படுவது அந்தி கிறிஸ்து தான் செய்த உடன்படிக்கையை முறிப்பதை குறிப்பிடுவது போல் தோன்றுகிறது... (இல்லை, அந்திகிறிஸ்து கடைசி மூன்றரை ஆண்டுகள் முடிவில் தான் தன் உடன்படிக்கையை முறிக்கிறான். பாருங்கள்?). தானியேலின் செய்தி ஒலிநாடாவை நான் எவ்விதம் புரிந்து கொண்டேன் என்றால், இயேசு எருசலேமுக்குள் கி.பி. 20ம் ஆண்டில் சவாரி செய்து சென்ற போது, முதல் அறுபத்தொன்பது வாரங்கள் முடிந்து விட்டது, எனவே அவருடைய ஊழியத்தின் அந்த மூன்றரை ஆண்டுகள் அறுபத்தொன்பது வாரங்களில் சேர்க்கப்படும்: கடைசி முழு வாரம் அல்லது ஏழு ஆண்டுகள் இனிமேல் நிறைவேற வேண்டும், அது எடுத்துக் கொகர்ளப்படுதலின் போது தொடங்கும். இதை தயவுகூர்ந்து எனக்கு தெளிவாக்கும். உங்களுக்குத் தெரியுமா, சகோதரனே ,சகோதரியே, இந்த கேள்வியைக் கேட்டவர் யாராயிருந்தாலும் மிகவும் அழ கானது (பாருங்கள்?), ஆனால் நான் கூறினதை நீங்கள் சிறிது தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பாருங்கள்? இயேசு எருசலேமுக்கு வந்த போது (அது முற்றிலும் உண்மை), அது... பாருங்கள்? அவர் அங்கிருந்து நேராக சென்று சிலுவை யிலறையப்பட்டார். பாருங்கள்? அவர் ஒரு வாரம் பாதியில் தீர்க்க தரிசனம் உரைத்தார் என்பது உண்மையே. அது மூன்றரை ஆண்டு காலம். இப்பொழுது , அவர் அறுப்புண்டு போனார், அவருடைய ஆத்துமா பலியாக செலுத்தப்பட்டது. இப்பொழுது, இன்னும் வர வேண்டியது. இந்தக் கடைசி நாட்களில் இன்னும் மூன்றரை ஆண்டுகள் யுதர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. தற்போது, எடுத்துக் கொள்ளப்படுவதற்காக பரிசுத்தவான்களின் ஒன்று கூடுதல் உண்டாகும். இப்பொழுது இவையனைத்தையும் நான் பார்க்கப் போவ தில்லை, சகோதரனே, சகோதரியே. 167தயவு கூர்ந்து 1 கொரிந்தியர் 7ம் அதிகாரம் 1 முதல் 9 வசனங்களை விளக்குவீர்களா? (சகோ.நெவில், அதை எடுங்கள், 1 கொரிந்தியர், 7ம் அதிகாரம் முதல் வசனம்). 168ஒவ்வொரு உண்மையான விசுவாசியும் யோவான் 14:12ல் இயேசு கூறியுள்ள அந்த கிரியைகளை செய்வானா? (அல்ல!) பிணியாளிகளை சொஸ்தப்படுத்தி, பிசாசுகளைத் துரத்தி, மரித்தோரை உயிரோடெழுப்புவானா? (அது யோவான் 14ல் அல்ல என்று நினைக்கிறேன், அதனால் பரவாயில்லை. அது மாற்கு 16). அல்லது, இதை செய்வது எலியா மட்டும்தானா? ஒரு உண்மையான விசுவாசி இவையனைத்தையும் செய்ய வேண்டுமா? அவன் உண்மையான விசுவாசியாயிருந்தால், மரித்தோரை உயிரோடெழுப்பி மகத்தான அற்புதங்களை செய்வானா? இப்பொழுது, இது விசுவாசிகளின் மத்தியில் நடை பெறும். பாருங்கள்? ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த வரங்கள் அனைத்தும் இருக்காது, ஒரு மனிதன் இதைச் செய்வான் என்று அர்த்தமல்ல; அது ஒரு கூட்டம் ஜனங்களாயிருக்கும். உதாரணமாக இந்த சபையில் ஒரு சிறு பெண், அல்லது ஒரு சிறு பையன், அல்லது நாம் அதிகமாக நேசிக்கும் யாராகிலும் இருந்து, அவருடைய உயிர் பிரிந்து போனது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது முழு சபையும் ஒன்று கூடி ஜெபம் பண்ணி உபவாசித்து, “ஆண்டவரே, அந்த பிள்ளையின் மேல் இரக்கமாயிரும்” என்று விண்ணப்பிக்கும். பாருங்கள்? தேவன் அந்த பிள்ளையை உயிரோ டெழுப்பக்கூடும். எத்தனை பேர் நிசாயா பிதாக்கள் இன்னும் மற்ற புத்தகங் களைப் படித்திருக்கிறீர்கள்? உங்களுக்குத் தெரியுமா, அப்படித்தான் அவர்கள் ஆதிகாலத்து சபையில் செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, சில நேரங்களில் போதகரையும் கூட, இன்னும் மற்றவர்களையும் உயிரோடெழுப்பின துண்டு - அதை செய்வது நலமென்று தேவன் காண்பாரானால்; அவர்கள் அதை செய்தனர். 169சபையானது எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லாமல் போனாலும், அவள் சுத்திகரிப்புக்காக உபத்திரவகாலத்தின் வழியாக சென்று இரட்சிக்கப்படுவாள் என்று நீர் போதித்தரென்று எண்ணுகிறேன். அப்படியானால் மரித்தோரைக் குறித்தென்ன? அவர்கள் எவ்விதம் சுத்திகரிக்கப்படுவார்கள்? சரி, இதை பெற்றிருக்கிறவர்கள். மணவாட்டிக்கு சுத்திகரிப்பு அவசியமில்லை. அவள் ஏற்கனவே சுத்திகரிக்கப்பட்டு விட்டாள். முன் காலத்தில் மரித்துப் போனவர்கள். பாருங்கள்? இங்குள்ள இந்த சபை பெற்றுள்ள வெளிச்சத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை; அவர்கள் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்த மாக்கப்படுதல் போன்றவைகளின் கீழ் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பெற்றிருந்த வெளிச்சத்தில் அவர்கள் வாழ்ந்தனர். ஒருக்கால் அவர்கள் துன்பம் அனுபவித்திருக்கக் கூடும். அவர் களுடைய உபத்திரவங்கள்... ஆனால் இப்பொழுது, எடுத்துக் கொள்ளப்படுதல் நேரம் வர வேண்டிய இப்பொழுது, மண வாட்டியின் தலை பாகத்தை புறக்கணிக்கின்றவர்கள், அவர்கள் புறக்கணித்ததன் காரணமாக துன்பம் அனுபவிக்க வேண்டிய நேரம் ஒன்று வரும். ஆனால் முன் காலத்தில் இருந்தவர்களுக்கு, இன் றுள்ளது போல சுவிசேஷமானது தெளிவாக்கப்படவில்லை. பாருங் கள்? நீங்கள் அவரைத் தெளிவாக காண்கிறீர்கள். இத்தனை ஆண்டுகள் உங்களுக்கு இருந்தது - உங்களுக்கு உதாரணங்கள் அளிக்கப்பட்ன, முத்திரைகள் திறக்கப்பட்டு விட்டன, சபை காலங் கள் உங்களுக்கு முன்பாக வெளிப்படையாக வைக்கப்பட்டது, எல்லாமே அவ்விதமாக தெளிவாக்கப்பட்டுவிட்டது. அது அவ்வளவு தெளிவாயுள்ளதால், அதை நீங்கள் காணத் தவற முடியாது. பாருங்கள்? இவையனைத்துக்கும் பிறகு, நீங்கள் முழுவதுமாக இதைப் புறக்கணிப்பீர்களானால், செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று, நீங்கள் அதற்காக துன்பம் அனுபவிக்க வேண்டும். 170அதை எடுத்து விட்டீர்களா, சகோ.நெவில்? அது எதைக் குறிக்கும் ஒன்று? நான் இப்பொழுது முடித்து விட்டு போய் விடுவது நல்லது. ஏனெனில் நேரம் அதிகமாகிக் கொண்டிருக் கிறது. பாருங்கள்? ஏழு, - ஏழு ஒன்பது ... நாம் பார்ப்போம். ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக் கூடாதிருந்தால் விவாகம் பண்ணக் கடவர்கள்; வேகிறதைப் பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம், சரி, அது அசுத்தமான வாழ்க்கை வாழ்வதைக் குறிக்கிறது. ஒரு மனிதன், ஒரு பையன், ஒரு பெண், அப்படி யாரோ ஒருவர், அவர்கள் ஒன்றாக சென்று, அவர் விவாகம் பண்ண வேண்டுமென்று அறிந்திருந்தால், நீங்கள் போய் விவாகம் செய்து கொள்ளுங்கள். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு விளங்குகிறது என்று நினைக்கிறேன். பாருங்கள்? அசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்காதீர்கள். ஏனெனில் அது சரி யல்ல. பாருங்கள்? நீங்கள் கிறிஸ்தவாரயிருந்தால், அது ஒரு விதத்தில் உங்கள் சகோதரி. அது உலகமாயிருக்குமானால், அது உலகமே; நாய் நாயைத் தின்கிறது. ஆனால் நீங்கள் கூட சென்று கொண்டிருக்கிற இந்த பெண், அது உங்கள் சகோதரியும் கூட! அது வரப்போகிற உங்கள் பிள்ளைகளுக்குத் தாய். அவளுடன் அசுத்த மான வாழ்க்கை வாழாதீர்கள், நீங்கள் பண்புள்ள கிறிஸ்தவர் என்பதை அவளுக்குப் காண்பியுங்கள். நற்பண்புள்ள கிறிஸ்தவர் வாழ வேண்டிய விதத்தில் வாழுங்கள். பாருங்கள்? அவளை உங்கள் சகோதரி போல நடத்துங்கள், நீங்கள் அவளை விவாகம் செய்து கொண்ட பிறகும், அதே போல் அவளை நடத்துங்கள். 171இதற்கு நான் இப்பொழுதே பதில் கூறி விடலாம். பெந்தெகொஸ்தே ஜனங்கள், பரிசுத்தம் ஜனங்கள், அவர்கள் விவாகம் செய்து கொண்டிருந்த போதிலும் அவர்கள் ஆபாசமான வாழ்க்கை வாழ்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதில் எனக்கு நம்பிக்கையே கிடையாது. இல்லை, ஐயா! சில ஆபாசமான காரி யங்கள், அவை மிகவும் பயங்கரமானவை.... சில நேரங்களில் அப்படிப்பட்டவர்கள் இங்கு வருகின்றனர். இன்று காலையில் அல்ல, அதை நான் கூறவில்லை, ஆனால் சில நேரங்களில் நான் கலி போர்னியாவுக்கும் வெவ்வேறு இடங்களுக்கும் சென்றிருக்கும் போது, அங்கு நான் போதகர்களை சந்திக்கிறேன். சிந்தனைகளைப் பகுத் தறிதலின் வரத்தின் மூலமாக அவர்களைக் காணும் போது, அவர் களை என் முழங்கால்களின் மேல் கிடத்தி, அவர்களுக்கு சுவி சேஷ அடி கொடுக்கலாம் போல் எனக்குத் தோன்றுகிறது. ஆம், ஐயா! என்னே , ஒரு மனிதன் தன் மனைவியிடம் ஆபாசமாக நடந்து கொள்ள முயல்வதைக் காணும்போது... நான் என்ன கூறுகிறேன் என்று விளங்குகிறதா? தேவனுடைய மனிதன் என்னும் முறையில் நீங்கள் உங்களைக் குறித்து வெட்கப்பட வேண்டுமென்று நினைக்கிறேன். நீங்கள் ஒரு கணவனாக, இனியவராக இருங்கள். அவளை எப்பொழுதும் போல மதியுங்கள். இந்த பாலுணர்ச்சி புத்தகங்களில் காணப்படும் முட்டாள்தனமான காரியங்களில் கவனம் செலுத்தாதீர்கள் - நீங்கள் படிக்கும் அவ்விதமான ஆபாச மான காரியங்களில், அந்த ஆபாசமான காரியத்தை உங்கள் சிந்தையிலிருந்து எடுத்துப் போடுங்கள். 172நீங்கள் பரிசுத்தத்தை பெற்றுள் ள தாக கூறிக் கொள்ளும் போது, ஒரு ஆபாசமான சம்பாஷணையும் உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது என்று வேதம் உரைக்கிறது. இந்த சிறு மாது சிரோமணியை உங்கள் மனதுக்கு இனியவளாக நடத்துங்கள். அவளுக்கு அறுபது வயது இருக்குமானால், அப் பொழுதும் அவளிடம் அதே விதமாக இருங்கள். நீங்கள் அவளுக்கு தீரமான ஆண் நண்பனாக (boy friend) இருங்கள்; ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் அதுதான். இந்த புதிதான காரியங்கள் ஒன்றையும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம், நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்று நான் அறிந்திருக்கிறேன். நீங்கள் ஒரு கணவனாக, ஒரு உண்மையுள்ள சகோதரனாக, உண்மையுள்ள கிறிஸ்தவனாக இருங்கள். அது மோசமாக தொனிக்கிறதென்று எனக்குத் தெரியும்... ஆனால் அந்த ... நீங்கள் என் பிள்ளைகள், உங்களிடம் கூற விரும்புவதைக் கூற எனக்கு உரிமையுண்டு, பாருங்கள்? நீங்கள் என் பிள்ளைகள்; நீங்கள் சரியாக வாழுங்கள். ஸ்திரீகளாகிய நீங்களும், உங்கள் கணவனிடம் சரியான விதத்தில் வாழுங்கள். கணவன் மாராகிய நீங்களும் உங்கள் மனைவிமார்களிடம் சரியான விதத்தில் வாழுங்கள். நீங்கள் மிக மிக அருமையாக இருந்து ஒருவருக்கொருவர் மதிப்பு செலுத் துங்கள். உங்கள் குடும்ப உறவு போன்றவை, அது மிகவும் பயபக்தியாயும், தேவ பக்தியுமுடையதாய், நீங்கள் ஒருவருக்கொருவர் ஒத்துப் போங்கள். நீங்கள் தள்ளியும் திணித்தும், ஆபாசமாகவும் அவலட்சணமாகவும் நடந்து கொள்ளாதீர்கள். 173புரிந்து கொள்ளுங்கள், உங்கள் மனைவியுடன் உரை யாடுங்கள். உங்களுக்கு ஒரு சுபாவமும் அவளுக்கு வேறொரு சுபாவமும் இருந்தால் அவளிடம் அதைக் குறித்து பேசுங்கள் சகோதரியே, நீயும் அதையே அவரிடம் செய். அதேவிதமாக ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, உண்மையான நற்பண்புள்ள கிறிஸ்தவராகவும், உண்மையான மாது சிரோமணியாகவும் இருந்து ஒருவருக்கொருவர் சகோதரனாயும் சகோதரியாயும் இருங்கள் நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்திருங்கள். நீங்கள் ராஜ குடும்பத்தில் பிறந்தவர்கள், நீங்கள் ராஜ குடும்பத்தின் இரத்தத்தைக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் இரத்தத்தைக் காட்டிலும் உயர்ந்த இரத்தம் இவ்வுலகில் எதுவு மில்லை. அது உண்மை! ராஜ குடும்பத்தின் இரத்தம் தன்னை யாரென்று காண்பிக்கும். அதுதான் அது, அது ராஜ குடும்பத்தின் இரத்தம். அதை நம்புகிறவர் எல்லோரும் “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). ஆம், ஐயா! நீங்கள் யாரென்று காண்பியுங்கள். நான் ராஜாவின் மகன், நான் ராஜாவின் மகன். என் மனைவி ராஜாவின் குமாரத்தி. நான் அந்த ராஜகுமாரத்தியை எப்படி நடத்துவேன்? அவள் அந்த ராஜகுமாரனை எப்படி நடத்துவாள்? நான் கூறுவது விளங்குகிறதா? நீங்கள் உண்மையுள்ளவர்களாயிருங்கள். 174மணவாட்டி இங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு பரிசுத்த ஆவியின் அசைவு இருந்து, அவளால் அற்புதங்களும் அடை யாளங்களும் செய்யப்படுமா? அல்லது அவருடைய பிரத்தி யட்சமாகுதலுக்காக மட்டும் நாம் காத்திருக்கிறோமா? இந்தக் கேள்வியுடன் நான் முடித்துக் கொள்ள வேண்டி யிருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் பதில் சொல்வதற்கு இன்னும் அநேக கேள்விகள் உள்ளன. அதிக நேரமாகிவிட்டது. இப்பொழுது நேரம் ஒரு மணிக்கு இருபது நிமிடங்கள். இங்கு இன்னும் முப்பது அல்லது ஒருவேளை நாற்பது கேள்விகள் கே. கூடும். எனக்கு உள்ள நேரத்தில் நான் இதற்கு சிறந்த முறையில் பதிலளிக்கிறேன். நான் மூன்று நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறேன். மற்ற கேள்விகளை என்னால் முடியும் போது எடுத்துக் கொள்கிறேன். பாருங்கள்? எப்பொழுது இவைகளை எடுத்துக் கொள்ள முடியும் மென்று எனக்குத் தெரியவில்லை. என்னால் முடிந்தவரையில் அதை சிறப்பாக செய்வேன். நீங்கள் இவைகளை அனுபவித்து மகிழ் கின்றீர்களா? நான் .... அது எனக்கும் உதவியாயுள்ளது. பாருங்கள்? இங்கு வந்து இக் கேள்விகளை முன்பு காணாமல் பொறுக்கி எடுக்கும் போது (பாருங்கள்?), உங்களால் பதில் கூற இயலாத சில கேள்விகள் கிடைத்து விடுகின்றன. நான் நம்பியிருந்தேன். நான் பொறுக்குவேன் என்று... சர்ப்பத்தின் வித்தைக் குறித்த ஒரு கேள்வி இங்குள்ளது என்று எனக்குத் தெரியும். அதை எப்படியாவது பொறுக்கி எடுத்து அதை விவரிக்க வேண்டுமென்று விரும்பினேன். பாருங்கள்? அதை எடுக்கத் தவறி விட்டேன், எனவே நான்.... ஒருக்கால் அதை அந்த விதமாக செய்வது கர்த்தருக்குப் பிரிய மில்லை போலும், அது சர்ப்பத்தின் வித்தின் பேரில், இந்த ஒலி நாடாவைக் கேட்கிறவர்கள் ஒருக்கால், “நல்லது, அவர் அதற்கு பதில் கூறாமல் விட்டு விட்டார்” என்று சொல்லாதபடிக்கு, அதற்காக எத்தனை பேர் இன்னும் இரண்டு நிமிடங்கள் சகித்துக் கொள்வீர் கள்? சரி. 175இப்பொழுது பொறுங்கள், இதற்கு முதலாவதாக நான் பதில் கூறட்டும். இங்குள்ள கேள்வி இது: “மணவாட்டியினால் அற்புதங்கள் செய்யப்படுமா? ஆம், ஐயா. அது இப்பொழுது செய் யப்பட்டு வருகிறது. அது உண்மை. பாருங்கள்? ஆனால் மகத்தான அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைத்தல் போன்றவைகளை. அது யூதர்களுக்கு செல்லவிருக்கிறது. பாருங்கள்? அது இங்கு சம்பந்தப்பட்டதல்ல; அது மோசேயும் எலியாவும் யூதர்களிடம் செல்லுதல், அது இந்த சபைக்கு அல்லவே அல்ல. நீங்கள் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின் முதல் மூன்று அதிகாரங்களைப் படியுங்கள். சபை என்னவென்று அங்கு புரிந்து கொள்வீர்கள். சபைக்கு அவ்வளவு தான். அது மணவாட்டியுடன் திரும்ப வரும்போது, அவள் திரும்ப வரும் போது... படியுங்கள்... சபையைக் குறித்து நீங்கள் அறிய வேண்டுமானால், அதனுடன் சம்பந்தப்பட்டுள்ளது எதுவென்று, வெளிப்படுத்தின விசேஷம் முதல் மூன்று அதிகாரங்களைப் படித்து விட்டு, அங்கிருந்து 19ம் அதிகாரத்துக்கு சென்று அதிலிருந்து தொடங்கி படியுங்கள், அங்கு நீங்கள் மணவாட்டியை காணலாம். மற்றது யூதரைக் குறித்தது. 176இப்பொழுது, சர்ப்பத்தின் வித்தைக் குறித்த கேள்வியை என்னால் இங்கு கண்டு பிடிக்க முடியவில்லை, ஏனெனில் (பாருங்கள்), இவை இங்கு ஒரு பெரிய குவியலாக உள்ளன. ஆனால் அந்த நபர், “அது சர்ப்பத்தின் வித்தாயிருக்குமானால்... அந்த ஸ்திரீ 'நான் கர்த்தரால் ஒரு குமாரனைப் பெற்றேன்' என்று எப்படிச் சொன்னாள்?” என்று கேட்டிருக்கிறார். நல்லது, அவள் கர்த்தரால் எவ்விதம் அவனைப் பெற்றாள் என்று போன ஞாயிறு விளக்கினேன் என்று நினைக்கிறேன். அவளுக்கு அது கிடைத்திருக்குமானால், அது கர்த்தரிடமிருந்து தான் அவளுக்கு கிடைத்திருக்க வேண்டும் (பாருங்கள்?) ஏனெனில் அது கர்த்தரிடமிருந்து தான் வரவேண்டும். ஏனெனில் தேவனுடைய பிரமாணம்... அது தேவனுக்கு கீழ்படியும். நிச்சயமாக! சூரியன் பிரகாசிக்க வேண்டுமென்று அவர் அதை உண்டாக்கினார்; அது பிரகாசிக்கிறது. மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்ய வேண்டுமென்று அவர் தீர்மானித்தார்; அது அப்படியே நடக்கிறது. வயலில் விதைக்கப் படும் விதைகள், நல்லவையானாலும் கெட்டவையானாலும், வளர்ந்து மேலே வருகிறது; ஏனெனில் அது ஒரு விதை. ஒரு விதை நடப்பட்டால்... இந்த சர்ப்பம் தன் விதையை நடக்கூடிய ஒரே வழி, அந்த மிருகம் மட்டுமே மானிட வர்க்கத்துக்கு அடுத்தபடியாக இருந்தது. ஏனெனில் மானிட வர்க்கத்தின் தோற்றத்தின் போது, தேவன் பூமியின் மேல் அசைவாடின் போது .... அவர் பறவைகளைத் தோன்றச் செய்தார். பறவைகளிலிருந்து அவர் வெவ்வேறு ஜீவ ராசிகளுக்கு வந்தார். பிறகு வாலில்லாக் குரங்கு (Chimpanzee), வாலில்லாக் குரங்கிலிருந்து சர்ப்பம். 177அவர் இந்த சந்ததியை குழப்பும் வகையில் அந்த சர்ப்பத்தை மாற்றிப் போட்டார் (அது அவ்விதம் செய்யப்பட வேண்டியதாயிருந்தது; இவர்கள் ஏதோ ஒரு மிருகத்தைப் போல் காணப்படும் ஒரு எலும்பைக் கண்டு பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். அது பாதி மனிதனும் பாதி மிருகமுமாயிருந்தது), அங்கிருந்து தான் மனிதன் தோன்றினான் என்று கூறுவதற்கு அவர்கள் வாலில்லாக் குரங்குக்குப் பிறகு இதை இழந்து போயினர், குரங்குக்கு அறிவு கிடையாது. அதற்கு ஆத்துமா கிடையாது. அதனால் சிந்திக்க முடியாது. அது... அதனால்... சத்தம் மட்டுமே உண்டாக்க முடியும். குதிரை “கீ, ”ஹா' என்று அப்படி ஏதோ ஒரு சத்த மிட்டு கனைக்கிறது. நாயிடம், “இங்கு வா, ஃபீடோ, ஒரு வித்தை (rick) காட்டு. இதைத் தாண்டு” என்றால் - கே கட்டைகள் மற்றும் அடுக்கி வைத்தால், அது உணர்ச்சியினாலும், கேட்பதனாலும், அப்படிப்பட்ட காரியங்களினாலும் செயல் புரிகிறது. ஆனால் அவைகளால் சிந்தித்து புரிந்து கொள்ள முடியாது. அவை நிர்வாணமாயுள்ளன என்பது அவைகளுக்குத் தெரியாது. அவை களுக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாது. அவைகளுக்கு எந்தவித பிரமாணமும் கிடையாது. பாருங்கள்? அவைகளால் அதை செய்ய முடியாது. மனிதன் ஒருவன் மட்டுமே. மானிட வர்க்கத்துக்கு அடுத்தபடியாக இருந்தது சர்ப்பமே. பூமியிலுள்ள எல்லா மிருகங்களைக் காட்டிலும் அது மிகவும் தந்திரமுள்ளதாய் இருந்ததாக வேதம் உரைக்கிறது. மிகவும் சாமர்த்தியமுள்ளது, அதற்கு ஏறக்குறைய ஒரு ஆத்துமா இருந்தது. அதற்கு ஆத்துமாவுக்காக ஒரு இடம் இருந்தது. ஆனால் அது என்ன செய்தது? தேவனை வஞ்சிக்க எண்ணி தன்னை சாத்தானுக்கு விற்றுப் போட்டது - தேவனை வஞ்சிக்க முயன்று. இவ்வளவு தூரம் நான் சொன்னதை எத்தனை பேர் புரிந்து கொண்டீர்கள்? 178சாத்தான், சர்ப்பத்துக்கு, ஏறக்குறைய ஆத்துமா இருந் தது. அவர்கள் அந்த எலும்புகளைத் தேடுவார்கள் என்று தேவன் அறிந்திருந்தார். மனிதனைப் போல் காணப்படும் எந்த ஒரு எலும்பும் பாம்பில் இப்பொழுது இல்லை. அது... அது சபிக்கப் பட்டது. அது முன்பு மனிதனைப் போல் காலூன்றி நின்றிருந்தது கவனியுங்கள், அப்பொழுது அந்த வித்து அது மனித வித்துக்கு அடுத்தபடியாக இருந்தது.... சாத்தான், அந்த ஆவி, அந்த ஒரு வித்து மட்டுமே ஸ்திரீயை கர்ப்பந்தரிக்கச் செய்ய முடியும் என்பதை அறிந்திருந்தான்; மனித குரங்கால் அதை செய்ய முடி யாது. அவர்கள் அதை கலந்து என்னவெல்லாமோ செய்து பார்த்தனர்; ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. மனித குரங்கில் இருந்த ஜீவகிருமி ஸ்திரீயின் வயலுக்கு - அந்த முட்டைக்கு - வரமுடியா தென்று அவன் அறிந்திருந்தான். ஆனால் சர்ப்பத்தின் வித்து அதைச் செய்யுமென்று அவனுக்குத் தெரியும், எனவே அவன் சர்ப்பத்துடன் ஈடுபடத் தொடங்கினான். 179இந்த செயலைப் புரிய முடியும் என்று ஆதாம் அறிந் திருக்கவேயில்லை. பாருங்கள்? அவள் பெண்ணாக உண்டாக்கப்பட்ட டிருந்தாள். நிச்சயமாக, அவள் அதற்கு பின்னால் வந்திருப்பாள். ஆனால் பாருங்கள், தம்மை இரட்சகராக காண்பிக்க வேண்டும் என்னும் தேவனின் இராஜாதிபத்தியம்-அதை விளக்கியிருக்கிறேன். ஆனால் சாத்தான் இதை அறிந்திருந்தான், அவன் அவளிடம் சர்ப்பத்தின் ரூபத்தில் வந்தான். சர்ப்பம் ஒரு மிருகம். அவன் அவளை அணுகினான். அவள் முதலாவதாக சாத்தானால் கருத் தரிக்கப்பட்டாள். நீங்கள் கவனிப்பீர்களானால், இந்த செயல் இருமுறை மட்டுமே செய்யப்பட்டது. ஆனால் மூன்று பிள்ளைகள் பிறந்தனர். வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவள் இரட்டை பிள்ளைகளை பிரசவித்தாள். ஒருவன் சர்ப்பத்தின் வித்து; மற்றவன் ஆபேல். அவள் தன் கணவனை வசீகரித்து ஆசை காட்டி அவனிடம் கூறினாள். பாருங்கள்? அவள் தன் கணவனிடம் அது என்னவென்று காண்பித்தாள், அதன்பிறகு அவனும் அவளுடன் கூட வாழ்ந்தான், அதன் மூலமாக அவள் இந்த பிள்ளையைப் பெற்றெடுத்தாள். இரு வெவ் வேறு நபர்களால் அவள் இரட்டை பிள்ளைகளை கருத்தரித்தாள் என்பதை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். அவள் ஒரு அவள் கன்னிகை. 180அவர்களுடைய வித்து பலம் வாய்ந்தது. உதாரணமாக இங்கு பாருங்கள். ஆபிரகாம் தன் சொந்த சகோதரியை மணந்து கொண்டான். இன்று ஒருவன் தன் சகோதரியை மணந்தால், அவனுக்குப் பிறப்பது மூடப் பிள்ளைகளாக இருக்கும். பாருங்கள்? ஆனால் மானிட... இங்கு யாக்கோபு , இல்லை ஈசாக்கு, ரெபேக்காளை மணந்து கொள்கிறான், நெருங்கின உறவு, இரத்த சம்பந்தமான உறவு, ஆபிரகாமின் சகோதரனின் மகள். கவனியுங்கள், இப்பொழுது கவனியுங்கள் (பாருங்கள்?), மானிட வர்க்கம் மிகவும் பலமுள்ளதாயிருந்தது. இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், அது எப்பொழுதுமே வழிவழியாக இரட்டை பிள்ளைகளாக இருந்து வந்துள்ளது. அங்கு ... காயீனும் ஆபேலும் இரட்டை பிள்ளைகள், ஏசாவும் யாக்கோபும் இரட்டை பிள்ளைகள். இயேசுவும் யூதாஸும் ஒரே கோத்திரத்திலிருந்து, ஒரே சபையிலிருந்து வந்தவர்கள். பரிசுத்த ஆவியும் அந்திகிறிஸ்துவும் கூட இரட்டை பிள்ளைகளே, “கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்ட வர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக மிகவும் நெருக்கமாக இருக்கும். நீங்கள் புரிந்து கொண்டீர்களா? சரி. 181இதை நீரூபிக்க, நீங்கள் யூதா நிரூபத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். அது 17ம் வசனம் என்று நினைக்கிறேன், அல்லது 14ம் வசனம்... இப்பொழுது, இப்பொழுது, இதைக் கவனி யுங்கள். நான் முடித்து விடுகிறேன். கவனியுங்கள், மற்றெல்லாவற் றையும் விட்டு விட்டு, இதை சரியாக பொருத்த முதலாவதாக அவர், “உன் வித்துக்கும் (சர்ப்பத்தின் வித்துக்கும்) அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்” என்றார் (ஆதி.3:15). பாருங்கள்? அவளுக்கு வித்து இருக்கவில்லை. எனவே அவள் பெற்றுக் கொண்ட வித்து சாத்தானின் வித்தே. காயீன் சாத்தானின் குமாரன். அவளுக்கு வித்து இருக்கவில்லை, எனவே அவள் அதை இன சேர்க்கையின் மூலம் பெற்றுக் கொண்டாள். அவள் அவ்விதம் பெற்றுக்கொண்ட போது, அது தேவனுடைய சத்துருவால் அவளுக்குக் கொடுக் கப்பட்டது. பிறகு, தேவன் அவளுக்கு ஒரு வித்தைக் கொடுத்த போது, அதில் இன சேர்க்கை சம்பந்தப்பட்டிருக்கவேயில்லை. உங்களுக்கு விளங்குகிறதா? அடிமைப் பெண்ணும் அவளுடைய பிள்ளையும் புறக்கணிக்கப்பட்டனர், ஏனெனில் சுயாதீனப் பெண்ணு டனும் அவள் பிள்ளையுடனும் இவர் கள் சுதந்தரவாளியா யிருப்பதில்லை. 182கவனியுங்கள், பிறகு அவளுக்கு ஒரு வித்து கொடுக் கப்பட்டது, அது கிறிஸ்து. அவளுடைய முட்டை... இப்பொழுது, பிராடெஸ்டெண்டுகள் அது கன்னியின் மூலம் பிறந்த 'ஹிமோ க்ளோபின்' என்று நம்புகின்றனர். அது சிருஷ்டிக்கப்பட்ட தேவ னுடைய இரத்தம் என்றும் அதில் கிருமிகள் உண்டாயிருந்தன என் றும், ஆனால் முட்டை அவளுடையது என்றும் அவர்கள் நம்புகின் றனர். இல்லை, ஐயா! உணர்ச்சி இல்லாவிட்டால், அந்த முட்டை அந்த குழாயின் வழியாக கருப்பைக்குள் வர முடியாது . அப்படியா னால் ஆவியாகிய தேவன் ஒரு ஸ்திரீயுடன் இன் சேர்க்கையில் ஈடு பட்டார் என்று நீங்கள் கூறுவது போல் ஆகிவிடுகிறது. அது எப்படி முடியும்? அது முழுவதும் தேவனுடைய சிருஷ்டிப்பினால் உண்டான பொருட்கள் - முட்டை, கிருமி இரண்டுமே. அவர் தேவனுடைய குமாரன், மரியாளின் குமாரன் அல்ல. அவர் அவளை “தாய்” என்று ஒரு போதும் அழைக்கவில்லை. “ஸ்திரீ” என்றுதான் அழைத்தார். அவர் அவளை ஒரு போதும் “தாய்” என்று அழைக்கவில்லை. அவள் அவருடைய தாய் அல்ல. அது தேவனுடைய குமாரன், தேவன் ஒருவரே. புரிந்து கொண்டீர்களா? 183இப்பொழுது, இதை நிரூபித்து ஆணித்தரமாகப் பதிய வைக்க வேறொரு காரியம், யாராகிலும் உங்களிடம் இவ்விஷயத்தில் சர்ச்சை உண்டாக்குவார்களானால், யூதாவின் நிரூபத்துக்கு செல் லுங்கள், அது 17ம் வசனம் என்று நினைக்கிறேன் (அது 14ம் வசனம் அல்லது 17ம் வசனம்). அவன், “ஏனோக்கு... நான் அதைப் படிக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? உங்களுக்கு அவ்வளவு நேரம் உண்டா? அப்படியானால், அதை நான் எடுக்கிறேன். அப்பொழுது நான் அறிந்து கொள்வேன். ஏனெனில் ஒலிநாடா இங்கு ஒடிக் கொண்டிருக்கிறது, இதில் நாம் தவறு செய்யக் கூடாது. அது எந்த வசனம் என்று பார்க்கட்டும்... பதினான்காம் வசனம். ஆதாமுக்கு ஏழாந் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக் குறித்து ; இதோ... ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங் கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். 184இப்பொழுது. ஆதியாகமம் 5ம் அதிகாரத்துக்குச் செல்லுங் கள், பிறகு லூக்கா சுவிசேஷத்துக்கும் செல்லுங்கள் (இதை என்னால் கண்டு பிடிக்க முடிந்தால் நலமாயிருக்கும்; இதை யெல்லாம் நான் இங்கு எழுதி வைத்திருந்தேன்), அங்குள்ள வம்ச வரலாற்றில் நீங்கள் காணலாம். வேதத்தில் எங்கும் சொல்லப் படவில்லை..... பாருங்கள்! நோவா - ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாந்தலை முறையானால், வேதம், “ஆதாம், அதன் பிறகு அவனுடைய குமாரன் சேத் என்றுரைக்கிறது (ஆதி. 5:3; லூக்.3:38). ஏனெனில் காயீன் ஆதாமின் சந்ததி அல்ல. அது ”ஆதாம் சேத்தைப் பெற்றான் ... என்கிறது. சேத், யாரேதைப் பெற்றான். யாரேத் பெற்றான். இப்படி வழிவழியாக ஏனோக்கு வரைக்கும். ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாந் தலைமுறை. தேவனுடைய வம்ச வரலாற்றில் காயீன் ஒருவனாக கருதப்பட்டதாக எங்கும் கூறப்படவில்லை. 185அது அப்படித்தானா இல்லையாவென்று நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்; அதைப் பாருங்கள், லுக்காவும் கூட ஆதாமிலிருந்து பிறந்த சந்ததியாரின் பெயரைக் குறிப்பிடுகிறான். ஒரு முறையாவது காயீனின் பெயர் கூறப்படவில்லை. ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாந் தலைமுறையானால் (பாருங்கள்?), காயீன் அதில் எங்கு வருகிறான். ஏனெனில் வேதம் வம்ச வரலாற்றில் ஆதாம் தன் குமாரனாகிய சேத்தைப் பெற்றான்; சேத் யாரேதைப் பெற்றான்; யாரேத் இன்னாரைப் பெற்றான் என்று வழிவழியாக உரைக்கிறது. ஒருமுறையாவது காயீனின் பெயர் கூறப்படவில்லை. அப்படியானால் அவன் ஆதாமின் குமாரனாக இருக்க முடியாது. எனவே அவன் சர்ப்பத்தின் குமாரனாக இருக்க வேண்டும். இன சேர்க்கை இல்லாமல் அவன் குமாரனாக பிறந்திருக்க முடியாது. ஆமென்! அப்படியில்லாவிட்டால், அவன் கன்னிகையின் மூலம் பிறந் திருக்க வேண்டும். அப்பொழுது அவன் தேவனுடைய குமாரனாக ஆகி விடுவான். அவர்கள் ஒரு முறையாவது இதை தவற விடக் கூடாதென்று விரும்புகிறேன். 186இப்பொழுது, இதை வெளிப்படுத்தின அதே தேவன் தான் உங்கள் விவாகமும் விவாகரத்து பிரச்சினை பற்றியும் என்னிடம் கூறினார். அவர் இந்த காரியங்களைக் கூறும் போது, என் சகோதரனே, சகோதரியே... நான் உங்கள் சகோதரன், ஒரு மனிதன். ஆனால் அவர் அதைக் கூறும் போது, அது இங்கு உள்ளே பதியும் போது, என்னால் அதை உங்களிடம் விவரிக்க முடியவில்லை. அதை நான் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் என்னால் முடியாது. ஆனால் அரு ஒரு முறையாவது தவறாய் போனதில்லை. என்னால் அதை புரிந்து கொள்ள இயலாமல் போனாலும், அதை நான் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறேன்; அதன்பிறகு அவர் அதை வெளிப்படுத்தத் தொடங்குகிறார், அப்பொழுது அது என்னை திகைப்பில் ஆழ்த்துகிறது. அது அங்கேயே உள்ளது, ஆனால் அதை நான் புரிந்து கொள்ளவில்லை. உங்கள் கல்வி தள்ளிவைக்கப்படு கிறது, உங்கள் யோசனை தள்ளி வைக்கப்படுகிறது. மற்றெல் லாமே; அவ்விதமாகத்தான் காயினும் தள்ளி வைக்கப்பட்டான். இப்பொழுது, நாம் ஆதியாகமத்துக்குத் திரும்பிச் சென்று அதை படிக்க நமக்கு நேரம் இருக்குமானால்... அதை நான் கண்டு பிடிக்க முடியுமா என்று பார்க்கட்டும். என்னால் கண்டு பிடிக்க முடியுமா இல்லையாவென்று நிச்சயமாக எனக்குத் தெரியவில்லை. திருமதி வுட், அதை நான் அன்றொரு நாள் உங்களுக்குள் காண்பித் துக் கொண்டிருந்தேனே, அந்த அதிகாரம் உங்களுக்கு ஞாபகமுள் ளதா? அது என்ன .... அது 5ம் அதிகாரமா? 5ம் அதிகாரம், உ ஊ சரி. ஆதாமின் வம்சவரலாறு; தேவன் மனுஷனைச் சிருஷ் டித்த நாளிலே அவனைத் தேவ சாயலாக உண்டாக்கினார். அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசிர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்' (ஆங்கில வேதாகமத்திலே, “அவர் களுக்கு ஆதாம் என்று பேரிட்டார்' என்று எழுதப்பட்டுள்ளது . - தமிழாக்கியோன்). ஆதாம் நூற்று முப்பது வயதான போது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சேத் என்று பேரிட்டான் (காயீன் என்ற பெயரிட்டான்? அவனுடைய பெயர் என்ன வென்று அழைத்தான்? சேஷ்ட புத்திர பாகத்தைப் பெற்ற முதற்பேறானவன் எங்கே? அவனுடைய பெயர் இங்கு சொல்லப்படவும் இல்லை. சேத் அவன் குமாரன்). 187நாம் இங்கு மறுபடியும் வந்து அங்கு என்ன கூறப்பட்ட தென்று காண்கிறோம்... காயீன் ஆபேலைக் கொன்று போட்டதனால் ஏவாளுக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டான். நான் படிக்கையில் இதைக் கவனியுங்கள். ஆதாம் நூற்று முப்பது வயதான போது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சேத் என்று பேரிட்டான். ஆதாம் சேத்தை பெற்றபின் எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து. குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான். சேத் நூற்றைந்து வயதான போது ஏனோசைப் பெற்றான். (இப்படி வழிவழியாக போய், ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாந் தலை முறையாய் பிறக்கிறான்). இப்பொழுது, அது லூக்காவில் எங்குள்ளது என்று எனக்கு ஞாபகமில்லை. திருமதி வுட், அந்த பாகத்தையும் கூட குறித்து வைத்திருக்கிறீர்களா? அவர்களும் நானும்... அன்றொரு நாள் அவர்களுக்கு நான் காண்பித்துக் கொண்டிருந்தேன்..... என்ன சொல்லுகிறீர்கள்? (சகோ.பிரான்ஹாம் சகோதரி வுட்டுடன் உரை யாடுகிறார் - ஆசி). சகோதரி வுட், நீங்கள் கூறுவது சரி. அதை நாங்கள் அவர்களுடைய வேதாகமத்தில் கோடிட்டு வைத்திருந் தோம், நான் அவர்களுக்குக் காண்பித்துக் கொண்டிருந்த போது .. இதோ அது உள்ளது, வம்ச வரலாறு. சரி. 188இப்பொழுது, இங்கு 'நீங்கள் கவனிப்பீர்களானால்... லூக்கா 3ம் அதிகாரத்தில் அதையே நாம் காண்கிறோம்.... “நோவா லாமேக்கின் குமாரன். லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேதின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கேனான் ஏனோஸின் குமாரன்; ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்” (லூக். 3:36-38) காயீன் எங்கே இங்கு காணப்படுகிறான்? முதற்பேறான காயீன் எங்கே? சேஷ்ட புத்திர பாகம் அவனுக்குத்தான் சொந்தம்; அவன் எங்கிருந்து வந்தான்? அவன் சாத்தானின் வித்து, தேவனுடைய வித்தல்ல, ஆதாமின் வித்தும் அல்ல. ஏனெ னில் ஆதாமின் குமாரனின் பெயர் சேத். சர்ப்பத்தின் வித்தாகிய காயீன் ஆபிரகாமின் முதற்பேறானவனை கொன்று போட்டான் , அது சர்ப்பம் அவனுடைய மற்றொரு குமாரனாகிய இயேசுவை கொன்று போட்டதற்கு முன்னடையாளமாகவும் சாயலாகவும் உள்ளது. வம்ச வரலாற்றில் சேத் அவனுடைய இடத்தை எடுத்துக் கொண்டான். அது உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது. தேவனுடைய வம்ச வரலாறு இவ்விதம் தொடர்ந்து கொண்டே செல்லுகிறது. 189யாராகிலும் ஒருவர் அவனை அந்த வம்ச வரலாற்றில் பொருத்தி, அவன் சர்ப்பத்தின் வித்தல்ல என்று கூறுவதைக் காண விரும்புகிறேன். அவன் தேவனுடைய வம்ச வரலாற்றில் அங்கீ கரிக்கப்படவில்லை. மனித வம்ச வரலாற்றிலும் - ஆதாமின் வம்ச வரலாற்றிலும் மற்ற வம்ச வரலாற்றுகளிலும் அங்கீகரிக்கப்பட வில்லை. அது சரியா? இதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள். “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்ற னர் - ஆசி). நிச்சயமாக அவன் அதில் கிடையாது. அவன் சர்ப்பத் தின் வித்தேயன்றி ஆதாமின் வித்தல்ல. ஏவாள் அவன் ஆதாமின் குமாரன் என்றாள். அவன் -ஆதாமின் குமாரன் அல்ல. அவள், “கர்த்தரால் நான் ஒரு மனு ஷனைப் பெற்றேன்” என்றாள். அவள் அவ்விதம் தான் கூற வேண்டும். அது ஒரு வித்து. ஆனால் அது சர்ப்பத்தின் வித்து. பாருங்கள்? நடந்த இந்த இனசேர்க்கை செயலை நீக்கிப் போட, அவர் ஒரு கன்னிகையின் மூலம் வர வேண்டியதாயிருந்தது. ஆதாம் இங்கு பூமியில் வைக்கப்பட்டான். ஆனால் அவன் தகப்பனாயிருக்க வேண்டும் என்பதை அவன் ஒரு போதும் கண்டு கொள்ளவேயில்லை. நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு விளங்குகிறதா? சாத் தான் இதை அறிந்தவனாய். ஆதாம் ஏவாளை அடைவதற்கு முன்பு அவன் அடைந்து விட்டான். அங்கு தான் முழு காரியமும் இன்று அடங்கியுள்ளது. சகோதரனே, அதுதான் விவாகமும் விவாகரத்தும் போன்றவைகளையும் மற்றவைகளையும் இன்று பிரச்சனைக்குள் ஆழ்த்தி யுள்ளது. அது மிகவும் பரிதாபகரமானது. பாருங்கள்? ஆனால் நான்... தேவன் ஒரு வழியை உண்டு பண்ணி விட்டார், அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 190நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அவர் அற்புத மானவர் அல்லவா? இப்பொழுது. சர்ப்பத்தின் வித்து என்பது சரியா? ஒலிநாடாவைக் கேட்கிற யாராகிலும் இதைக்குறித்து விவாதிக்க நான் பயந்து விட்டேன் என்று நினைக்கக் கூடும் என்று நான் எண்ணினேன். பாருங்கள்? அவர்கள், “பாருங்கள், அவர் இரண்டு முறை அதைக் குறித்து ஒன்றும் கூறாமல் கடந்து மற்ற கேள்விகளுக்கு போய் விட்டார். அதை விவாதிக்க அவருக்கு பயம்” என்று சொல்லக் கூடும். நாங்கள் அப்படிப்பட்டவர் அல்ல. தேவன் அதில் உள்ள வரைக்கும், அது சரியானதே. உங்களுக்கு என்னவென்று தெரியுமா , அன்றொரு நாள் அந்த கழுகின் செட்டைகளில் உள்ள உணர்வை நான் கவனித்துக் கொண்டிருந்தேன், அது உங்களுக்குத் தெரியும். நான், “உனக்கு என்னை பயமில்லையா?' என்று நினைத்துக் கொண்டேன். நான் துப்பாக்கியை நிறுத்தி வைத்திருந்தேன். நான், ”என்னால் உன்னை சுட்டு விழ்த்த முடியும்“ என்றேன். அதை என்னால் சுட்டு வீழ்த்த முடியும் என்று அது அறிந்திருந்தது; நான் அந்த துப்பாக்கிக்கு அதிக தூரத்தில் இருந்தேன். நான், ”உனக்கு பயமாயிருக்கிறதா?“ என்றேன். அது தன் பெரிய கண்களினால் என்னை முறைத்துப் பார்த்தது. அங்கு ஒரு சிறு குரங்கு உட்கார்ந்து கொண்டு ”சா, சா, சா, சா, சா; உன்னை நான் துண்டு துண்டாக கிழித்து விடுவேன் என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தது. அந்த கழுகு அந்த குரங்கு போட்ட சத்தத்துக்கு எந்த கவசம் செலுத்தவில்லை. அது போடும் சத்தத்தைக் கேட்டு அதற்கு அலுத்துப்போனது. எனவே சற்று கழிந்து, அது தன் செட்டைகளை விரித்து ஒரு சுற்று சுற்றி வந்தது அதன் செட்டைகளை எவ்விதம் உபயோகிப்பது என்பதை அது அறிந் திருந்தது. அது பறந்து, கண்ணுக்கெட்டாத உயரத்துக்கு சென்று விட்டது. பாருங்கள்? அது ஒரு சிறு உருவமாக, ஒரு சிறு புள்ளி போல் ஆவதை நான் கவனித்துக் கொண்டேயிருந்தேன். 191சகோ. ஃபிரட், நான் உங்களுக்குக் காண்பித்தேன் என்று நினைக்கிறேன். சகோ ஃபிரட் பின்னால் உட்கார்ந்து கொண்டு “ஆமென்” என்று சற்று முன்பு சத்தமிட்ட போது, அவர் அங்கு உட்கார்ந்திருப்பதை கண்டேன். மலையின் உச்சியில் இது நடந்த இடத்தை உங்களுக்கும் சகோ. வுட்டுக்கும் - அவர் இப்பொழுது எங்கிருந்தாலும் - காண்பித்தேன் என்று நினைக்கிறேன். அந்த கழுகை நான் கண்டேன்.... புயல் அடித்ததனால் அது இறங்கி வருவதற்கு நிர்ப்பந்தம் உண்டானது. நான் அங்கிருந்த ஒரு மரத் தின் பின்னால் நின்று கொண்டிருந்தேன். சற்று கழிந்து நான் கலைமான் வேட்டையாடினேன். அது அக்டோபர் மாதம், பனி பெய்து கொண்டிருந்தது. இங்குள்ள சகோ.ஜானும் மற்றவர்களும் சென்ற இலையுதிர் காலத்தின் போது எங்களுடன் அங்கு வந்திருந்தனர். அந்த இடம் கோரல் சிகரத்தின் உச்சியில் இருக்கிறது. 192அங்கு நான் ஒரு மரத்தின் பின்னால் நின்று கொண்டி ருந்தேன். சிறிது பனி பெய்கிறது, சிறிது மழை பெய்கிறதுமாயிருந்தது. அங்கு நான் நின்று கொண்டிருந்தேன். அது கீழே இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அது அங்கு பறந்து கெண்டிருந்தது. மிகப் பெரிய உருவம் படைத்த பழுப்பு நிறக் கழுகு. அது ஒரிடத்தில் உட்கார்ந்து சுற்று முற்றும் பார்த்தது - நான், “நல்லது...' என்று எண்ணினேன். நான் மிகவும் நல்ல ஒரு தருணம் அனுபவித்துக் கொண்டேயிருந்தேன். நான் ”கர்த்தருக்கு ஸ்தோத் திரம். அல்லேலூயா' என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தேன். நான் மரங்களைச் சுற்றி சுற்றி வந்து அவ்வாறு கூச்சலிட்டுக் கொண் டிருந்தேன். நான் அங்கு பார்த்தேன். அப்பொழுது ஒநாய் ஊளை யிடும் சத்தத்தைக் கேட்டேன். அவைகள் எவ்வாறு ஊளையிடும் என்று உங்களுக்குத் தெரியும். சென்ற ஆண்டு அங்கு நான் சென்றிருந்த போது, மழை பெய்யத் தொடங்குவதற்கு சற்று முன்பு, அவைகள் ஊளையிடத் தொடங்கின; அந்த ஊளையிடும் சத்தத்தைக் கேட்க எனக்கு மிக வும் பிரியம். 193மற்ற பக்கத்தில் கலைமான் “வீஹீ” என்று இடும் சத் தத்தை நான் கேட்டேன் (சகோ. பிரான்ஹாம் கலைமான் சத்தமிடுவது போல சத்தமிடுகிறார் - ஆசி). அவை அப்படித்தான் சத்தமிடும். உடனே அதன் ஜோடி மற்ற பக்கத்தில் சத்தமிட்டு பதிலளிக்கும். (அடுத்த வாரம், அதற்கும் அடுத்த வாரம், கர்த்தருக்குச் சித்தமானால் அவைகளை வேட்டையாடச் செல்வேன்). எனவே, இச்சத்தத்தை அங்கு கேட்கும் போது, ஓ அங்கு தெய்வீகப் பிரசன்னமாக இருக் கும். ஓ, நான் .... அங்கு தான் என் ஆலயம் உள்ளது. அங்கு நான் அவருடன் உரையாடி விட்டு, பிறகு கீழே இறங்கி வந்து, உங்க ளிடம் பேசுகிறேன். பாருங்கள்? அங்கு மேலே, ஓ, அது மிகவும் அற்புதமாயுள்ளது, அங்கு நான் நன்றாக இளைப்பாறுகிறேன். அங்கு நின்று கொண்டு நான், “ஓ, தேவனே...” என்று எண்ணினேன். நான் பார்த்த போது, மழை பெய்யத் தொடங்கின து, பசுமையானவைகளின் மேல் பனி உறைந்திருந்தது, ஒரு வானவில் கோரல் சிகரத்திலிருந்து ஆட்டு மலை வரைக்கும் வானத்தில் அவ்வளவு பெரிதாக வியாபித்திருந்தது. “ஓ, தேவனே ,இங்கு பாரும், உம்” என்று எண்ணினேன். நான், “இதோ நீர் அல்பாவும் ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறீர். இதோ அது இங்கே அங்கே கீழே வந்திருக்கிறது. நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர், நீரே ஏழு சபையின் காலங்கள், ஏழு பொன் குத்து விளக்குகள். அதிலெல்லாம் நீர் இருக்கிறீர். தேவனே, நீர் எவ்வளவு அற்புதமானவர்” என்று எண்ணினேன். 194நான் இவ்வாறு சத்தமிட்டுக் கொண்டே என் துப் பாக்கியை கீழே வைத்தேன். நான் மரத்தைச் சுற்றி சுற்றி வந்து “தேவனுக்கு மகிமை! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தேன். நான் எனக்குள் அருமையாக தருணம் அனுபவித்துக் கொண்டிருந்தேன், கர்த்தரும் நானும் மட்டுமே. சிறிது நேரம் கழித்து அந்த கழுகு புதர்களுக்கு வெளியே வந்து என்னை முறைத்தது. “என்ன நான் சத்தமிடுவது உனக்குப் பிரியமில்லையா?” என்று எண்ணினேன். நான், “கடக உண்டாக்கின அதே தேவனைத் தான் நான் தொழுது கொண்டிருக்கிறேன்” என்றேன். பாருங்கள்? அது தன் பெரிய சாம்பல் நிறக் கண்களை சிமிட்டி, அவ்விதம் சத்தமிட்டுக் கொண்டி ருக்கிற என்னை உற்றுப் பார்த்தது. ஒரு சிறு அணில் (யாராகிலும் எப்பொழுதாகிலும் மலைகளில் வேட்டையாடி இருந்தால், அதுதான் காட்டுக்கு போலீஸ் காரன்) அங்கு ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு தாவிக் கொண்டி ருந்தது (பெரிதாக ஒன்றும் செய்வதற்கான ஒரு அமைப்பை அது பெற்றிருக்கவில்லை, ஆனால், ஓ, என்ன கூச்சல்). அது மேலும் கீழும் தாவிக் கொண்டு, “யா, யா, யா, யா, யா” என்று தொடர்ந்து சத்தமிட்டுக் கொண்டிருந்தது. 195கழுகு அதை கவனித்துக் கொண்டிருந்தது; அதன் பிறகு அது என்னை உற்றுப் பார்த்தது. நான், “என் தேவனே , அப்படிப்பட்ட ஒன்றிற்காக நான் துதிப்பதை நீர் நிறுத்தின காரணம் என்ன? உம்மை நான் தொழுது கொண்டிருந்தேனே. அந்த கழுகில் நான் ஒன்றைக் காண வேண்டுமென்று நீர் விரும்புகிறீரா? அப்படியானால் நான் அதை ஆழ்ந்து படிப்பேன். அல்லது அணிலைக் கண்டு நான் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டுமா?” என்று கேட்டேன். அங்கு நான் நின்று கொண்டு இரண்டையும் கூர்ந்து கவனித்தேன். “சரி, இந்த கழுகை சற்று ஆராய்ந்து பார்க்கலாம்” என்று எண்ணினேன். அதில் நான் கண்ட ஒரு காரியம், அதற்கு பயமேயில்லை. அது எனக்குப் பிரியம், அது எதற்கும் பயப்படுவதேயில்லை. அந்த பெரிய பறவை அங்கு நின்று கொண்டிருந்தது. நான் அதனிடம் “உனக்குத் தெரியுமா?” என் றேன். (என் துப்பாக்கி ஒரு மரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது). நான், “உன்னை என்னால் சுட்டு விழ்த்த முடியும் என்று உனக்குத் தெரியுமல்லவா?” என்றேன். அதற்கு அதைக் காட்டிலும் அதிகம் தெரியும். அதற்கு ஒரு காரியம் தெரியும், அதாவது அதை நான் செய்ய மாட்டேன் என்று. அதை நான் அதிகமாக மனதில் பாராட்டிக் கொண்டிருந்தேன். பாருங்கள்? அது அங்கு நின்று கொண்டி ருந்தது, அது சிறிதும் கூட பயப்படவில்லை. “உன்னை என்னால் சுட்டு வீழ்த்த முடியும்” என்று எண்ணினேன். இப்பொழுது, அதை நான் கவனித்துக் கொண்டே வந்தேன். அது என்னை இப்படி உற்றுப் பார்க்கும், பிறகு செட் டைகளை இப்படி விரிக்கும், அது உங்களுக்குத் தெரியும். கழுகுகள் தங்கள் செட்டைகளை எப்படி விரிக்குமென்று நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். பெரிய அகலமான செட்டைகள், இவ்வளவு நீளம். அது பெரிய உருவம் படைத்ததாயிருந்தது. அது அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தது. அதை நான் உற்று நோக்கினேன். (இது இவைகளை நான் அறிந்து கொள்வதற்கு அநேக ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம், ஒருக்கால் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருக்கலாம்). 196அதை நான் கவனித்தேன்; சிறிது கழிந்து அதை நான் பார்த்தேன்.“ அது என்ன - அது என்ன... அதற்கு பயமேயில்லை, அதை நான் பாராட்டுகிறேன். ஆனால் அந்த கழுகுக்கு என்ன தேவ அம்சம் உள்ளது?” என்று நினைத்துக் கொண்டேன். அதன் பெரிய அலகு இப்படி வெளியே வந்து, அதன் கண்களும் பெரிதாயுள்ளன. நான், “அது உண்மையில் ஒரு கம்பீரமான பறவையே” என்று எண்ணி னேன். இப்பொழுது. யாருமே.. ஒரு பருந்து அதைப் பின்தொடர் முயன்றால், அது சுக்குநூறாகிவிடும். அதை எதுவுமே பின் தொடர முடியாது. இல்லை, இல்லை! அதை ஒரு விமானம்தான் செய்ய முடியும். அது மிகவும் உயர பறக்கிறது. பிறகு, அதன் கண்களால் அது உயரத்திலிருந்து தரை வரைக்கும் காண முடியும், அவ்வளவு தொலைவிலிருந்து. இப்பொழுது யேகோவா தம் தீர்க்கதரிசிகளை கழுகு களுக்கு ஒப்பிடுகிறார் (பாருங்கள்?) அவர் அவர்களை இப்படி உயர தூக்குகிறார். அவர்கள் விசேஷமாக உண்டாக்கப்பட்டிருக்க வேண்டும். நாம் பார்ப்போம். முன் குறிக்கப்பட்டு, அந்த நோக்கத் துக்காக பிறந்து (பாருங்கள்?), இப்படி மேலே உயர்த்தப்படு கின்றனர். அதன்பிறகு நீங்கள்... நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று உங்களால் காண முடியாமல் போனால், அங்கு நீங்கள் போவதனால் என்ன பயன்? பாருங்கள்? நீங்கள் என்ன செய்து கொண்டிருக் கிறீர்கள் என்று அறியாமல் போனால் அந்த இடத்துக்கு போவ தனால் என்ன பயன்? பாருங்கள், பாருங்கள்? நீங்கள் மேலும் கீழும் குதித்து, கூச்சலிட்டு, அந்நிய பாஷைகள் பேசினாலும், இதெல்லாம் என்னவென்று நீங்கள் அறியா மல் போனால் என்ன பயன்? பாருங்கள், பாருங்கள்? நீங்கள் அங் குள்ள போது, நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாருங்கள்? 197எனவே, அந்த கழுகை நான் கவனித்துக் கொண்டி ருந்தேன். அது அங்கு அசைந்து கொண்டிருந்தது. அதை நான் கண்டு ரசித்தேன்; அது மிகவும் அழகான பறவை. இருப்பினும், அது ஒருக்கால் நான் கொன்ற மான் மாம்சத்தைப் புசிக்கும் என்று எண்ணினேன். அதை நான் கவனித்துக் கொண்டேயிருந் தேன். சற்று கழிந்து நான், “உங்களுக்குத் தெரியுமா? அது என்ன ...” என்று எண்ணினேன். சிறிது கழிந்து அதற்கு களைப்புண்டானது. அது என்னைப் பார்த்துக் கொண்டிருந்ததனால் அதற்கு களைப்புண்டாயிற்று என்று எனக்குத் தோன்றவில்லை. அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த அந்த குரங்கு போட்ட சத்தத்தைக் கேட்டு தான் அதற்கு அலுப்பு உண்டாயிற்று என்று எனக்குத் தோன்றின து. இன்று பாளையத்தில் நம்மிடையே அத்தகைய அநேக குரங்குகள் உள்ளன. பாருங்கள்? “சா, சா, சா! அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன! தெய்வீக சுகம் பெறுதல் என்பது கிடையாது, இவையெல்லாம் இப்பொழுது கிடையாது” பாருங்கள்? பூமிக்குரிய அந்த குரங்கு மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டு, “நீ இதை சேர்ந்திருக்க வேண்டும். நாங்கள் - நாங்கள் - நாங்கள்தான்.” என்று சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது. பாருங்கள், பாருங்கள். அங்கு உட்கார்ந்து ஓயாமல் சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது. ஓ, அதன் உடல் அசைந்தது, அது தன் உடலை அதிகமாக குலுக்கினது. குரங்கு இடும் சத்தத்தைக் கேட்டு அதற்கு அலுத்துப் போனது. அது அங்கிருந்து ஒரு பெரிய தாவு தாவினது, அப்படிச் செய்த போது அது உட்கார்ந்து கொண்டிருந்த மரக்கிளையை அது அசைத்தது. மரக்கிளை அசைந்தது. அது அங்கிருந்து பறந்து சென்றது. பாருங்கள், அது செட்டைகளை அடித்துக் கொண்டு அந்த மரத்திலிருந்த இடைவெளி வழியாய் பறந்து சென்றது. அது அவ்விதம் செய்த போது, அதை நான் கவனித்தேன். பாருங்கள்? அது பயப்பட வேயில்லை. ஏனெனில் தேவனால் அதற்கு அளிக்கப் பட்ட அந்த செட்டைகளின் பிரசன்னத்தை அதனால் உணர முடிந்தது. அந்த செட்டைகள் அதை எந்த விதமான ஆபத்தி லிருந்தும் விலக்கிக் கொண்டு செல்லும் என்பதை அது அறிந்திருந்தது. பாருங்கள்? 198எனவே, அந்த விதமாகத்தான் நாமும் உணர விரும்பு கிறோம். இதுதான் வார்த்தை; இந்த வார்த்தையை எழுதினவரே என் செட்டைகள். வார்த்தையைக் குறித்து எனக்கு பயமில்லை; அது உங்களை எந்த ஆபத்தின் வழியாகவும் கொண்டு செல்லும். அது ஒரு பட்டயம், அது வெட்டி வழியை உண்டாக்கிக் கொண்டே செல்லும். அதைக் குறித்து நீங்கள் கவலைப்படவே வேண்டாம். பாருங்கள்? அதன்பிறகு, அதை நான் கவனித்தேன். அது செட் டைகளை அடிக்கவில்லை, அது செட்டைகளை விரித்தது. பாருங்கள்? ஒவ்வொரு முறையும் காற்று அடித்த போது, அது உயர உயர சென்றது. அங்கு நான் நின்று கொண்டு, கைகளை கட்டின வண்ணமாய், அது சிறு புள்ளி போல் ஆகி என்னால் காண முடி யாமல் போன வரைக்கும் அதையே உற்று நோக்கிக் கொண் டிருந்தேன். “தேவனே, அதுதான். ஓடிப் போய் இதை சேர்ந்து கொள், அதை சேர்ந்து கொள், இதை, அதை, மற்றதை செய் என்றல்ல அது; அது செட்டைகளை விரித்தல் மட்டுமே (பாருங் கள்?); விசுவாசம் என்னும் உங்கள் செட்டைகளை தேவனுடைய வார்த்தைக்குள் எவ்விதம் பொருத்துவது என்பதை அறிந்திருந்து, இங்கும் அங்குமுள்ள இந்த அர்த்தமற்ற வீண் பேச்சுகள் அனைத் தினின்றும் பறந்து செல்வதே” என்று நினைத்துக் கொண்டேன். ஆம்! “வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகள் ஒருக்காலும் ஒழிந்து போவதில்லை” 199இன்று பிற்பகல் உங்களில் இருபது பேர் வரவிருக் கின்றனர். பிற்பகலில் தனிப்பட்ட பேட்டி உள்ள நீங்கள் பில்லியுடன் தொடர்பு கொள்ளுங்கள். ஏனெனில், நான் அவர்கள் அனைவரையும் பேட்டி கண்டு முடிப்பதற்கென, அவர்கள் சிறிது நேரத்தோடே தொடங்கப் போகிறார்கள் என்று நினைக்கிறேன். என்னால் முடியும் மானால், அவர்கள் ஒவ்வொருவரையும் என்னாலான வரையில் பேட்டி கண்டு முடிக்க விரும்புகிறேன். இதை நான் ஏன் செய்தேன் என்றால்... பில்லிக்கு இது தெரியாது (பாருங்கள்?), ஆனால் இன்று காலை நான் கண்ட ஏறக்குறைய இருபது தரிசனங்களின் விளை வாக- அது என்னவாயிருப்பினும் - என் சிந்தை இறுக்கமடைந் திருந்தது. அது உங்களை ஒரு விதமான ... பில்லி என்னிடம், “நீங்கள் ஏன் வெளியே போய் சிறிது இளைப்பாறி, அங்கு சில கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடாது?” என்றான். நான், “சகோ. நெவில் தன் செய்தியை ஆயத்தமாக வைத்திருப் பாரே” என்றேன். அவன், “நான் போய் அவரிடம் சொல்கிறேன்” என்று சொல்லி புறப்பட்டுப் போனான். சகோ. நெவில், “வாருங்கள்” என்றார். எனவே, நான் எழுந்து இங்கு வந்தேன். சிலர் இந்த பிற்பகலுக்காக காத்திருக்கின்றனர். உங்களை நான் 1.00 மணி வரைக்கும் பிடித்து வைத்துக் கொண்டதைக் ' குறித்து வருந்துகிறேன். ஆனால் நான் - நாளை கழித்து நான் அரிசோனாவுக்குத் திரும்பி செல்வேன் என்று நினைக்கிறேன். 200ஞாபகம் கொள்ளுங்கள், கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த முறை நான் இங்கு வரும்போது, உங்களுக்கு வேத வாயிலாக விவாகமும் விவாகரத்தும் என்பதைக் குறித்து பிரசங்கிக்க விரும்பு கிறேன். பிறகு நான்.... பிறகு அதை விட்டு விட்டு... அது உண்மையில் எப்படி உள்ளதோ, அதை அப்படியே உங்கள் முன் னால் வைக்க விரும்புகிறேன். அப்பொழுது முதற் கொண்டு நீங்கள் அதை கண்டு கொள்வீர்கள். எனவே அதுவரைக்கும், தைரியமா யிருங்கள்; கர்த்தர் உங்களை அபரிமிதமாய் ஆசிர்வதிப்பாராக. நாம் நிற்போமா? (சபையிலுள்ள ஒரு ஸ்திரீ தீர்க்கதரிசனம் உரைக் கிறாள் - ஆசி). கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் (நீங்கள் நேசிக்கிறீர்களா?) . முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? இதை நாம் மறுபடி யும் பாடும் போது ஒருவரோடொருவர் கைகுலுக்குவோம். நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் ஓ, அது அற்புதமானதல்லவா? ஓ, என்னே ! ஆசிர்வாதம் கூறப்பட்ட பின்பு, தனிப்பட்ட பேட்டிகளை விரும்பும் ஜனங்களாகிய உங்களிடம், பில்லி ஏதோ ஒன்றைக்கூற விரும்பு வதாக அறிவிப்பு விடுக்கும்படி என்னிடம் கூறினான். பாருங்கள்? இன்னும் சில நிமிடங்களில் அவன் உங்களை சந்திக்க விரும்பு கிறான். ஆனால், இப்பொழுது, அவரை தொழுது கொள்ள வேண்டும் போல் எனக்கு தோன்றுகிறது. இவை.... அவரை ஆவியில் தொழுது கொள்ள உங்களுக்கு பிரியம் அல்லவா? சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் ஓ, அது அற்புதமானதல்லவா? ஓ, அவரை நான் நேசிக்கிறேன், என் இருதயத்தில் அவரை நேசிக்கிறேன், என் இருதயத்தை நான் அறிந்திருந்தால். நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள் என்று நம்புகிறேன். எனவே நாம் ஒருமித்து அவருடைய பிள்ளை களாயிருக்கிறோம். நாம் ஒருவரிலொருவர் அன்புகூருகிறோம். உங்களிடத்தில் அன்புகூராமல், அவரிடத்தில் நான் அன்பு கூர முடியாது. அவரிடத்தில் நான் அன்பு கூருவதாக சொல்லி விட்டு, உங்களிடத்தில் நான் அன்பு கூராமல் போனால், நான் பொய் சொல்லுகிறவனாயிருப்பேன் என்று (வேதம் உரைக்கிறது. பாருங்கள்? நான்..... நீங்கள் என்னில் அன்புகூர வேண்டும் அல்லது என் குடும்பத்தினரில் அன்பு கூர வேண்டும் என்றிருந்தால்... இவ்வி ரண்டில் நீங்கள் எதைச் செய்ய வேண்டும், என்னிடத்தில் அன்பு கூருவதோ அல்லது என் குடும்பத்தினரிடத்தில் அன்பு கூருவதோ, என்பதைக் குறித்து நான் தீர்மானம் செய்ய வேண்டுமென்றால், நீங்கள் என்னில் அன்புகூருவதை விட பில்லி பாலிடத்தில் அன்பு கூருவதையே நான் விரும்புவேன். அந்த விதமான ஒரு தீர்மானம் செய்ய வேண்டிய நேரம் வருமானால், நீங்கள் அதை செய்ய வேண்டுமென்று விரும்பு வேன். நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும், ஏனெனில் பில்லி ஒரு போதகர் அல்ல. நீங்கள் இவ்விருவரில் எவரையாகிலும் உண்மையில் நேசிக்க விரும்பி, “நான் உங்களை அல்லது பில்லியை (நேசிக்க விரும்புகிறேன்” என்று கூறுவீர்களானால், நான் பில்லியை நேசிக்கும்படி உங்களிடம் கூறுவேன். பாருங்கள்? தேவனும் நம்மைக் குறித்து அதே வித மான உணர்வு கொண்டிருக்கிறார், நம்மால் முடியாது. அப் பொழுது, நீங்கள் என்னை நேசிக்காமல் பில்லியை நேசிக்க முடி யாது என்று நான் அறிந்து கொள்வேன். ஏனெனில் அவன் என்னில் ஒரு பாகமாயிருக்கிறான், பாருங்கள்? எனவே நான் உங்களிடத்தில் அன்பு கூராமல் தேவனிடத்தில் அன்புகூர முடியாது, ஏனெனில் நீங்கள் தேவனுடைய பாகமாயிருக்கிறீர்கள். நாம் ஒரு வரிலொருவர் அன்பு கூருகிறோம். ஓ, அது மிகவும் அற்புதமானது என்று எண்ணுகிறேன். நம்மை இறுக்கத்தில் ஆழ்த்தின இந்த கேள்விகளுக்கு நாம் பதில் கூறி முடித்த பின்பு இந்த பாடல்கள் மிகவும் அருமையாயுள்ளன என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் அல்லவா? உ ஊம், உ. ஊம், ஓ மிகவும் தத்ரூபமாயிருக்கிறது. நான் அவரை நேசிக்கிறேன். நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். ஓ, அவர்கள் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும்வருகின்றனர்...